முகம் மற்றும் உடலை மறைக்கும் உடைகளுக்கு தடை விதிக்கும் வரைவு மசோதாவிற்கு இலங்கை அமைச்சரவைக் குழு, ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த வருடத்திற்கு முன்பு நடந்த ஈஸ்டர் தீவிரவாத தாக்குதல்களின் விசாரணைக்குப் பிறகு தேசிய பாதுகாப்பிற்கு அறிவுறுத்தப்பட்ட ஒரு நடவடிக்கை
இலங்கை மக்கள் தொகையில் புத்திஸ்ட்கள் 70 சதவிகிதத்துடன் பெரும்பான்மையினராக உள்ளனர். இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் சிறுபான்மையினராக உள்ளனர். அங்கு பெருபான்மையினர் சமூகத்தால் சிறுபான்மையினர் சமூகத்தினர் அடக்கப்படுவதாக பரவலாக குற்றச்சாட்டு உள்ளது. இதற்கு முக்கிய காரணமாக சிறுபான்மை மதத்தின் மீது ஏற்பட்ட பற்றால் பெரும்பாண்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் அந்த மதத்தை தழுவுவதால் உண்டாகும் வெறுப்பு என கூறப்படுகிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டு, குலியபிட்டியா, ஹெட்டிபோலா, பிங்கிரியா, டும்மாளசூரியா உள்ளிட்ட இடங்களில் வசித்து வரும் சிறுபான்மை மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டது. உயிர் பலியும் ஏற்பட்டது. அவர்களது வீடுகள், கடைகள், வழிபாட்டு தலங்கள் என அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டன.
இந்நிலையில், , 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று தேவாலயத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான கிறிஸ்துவர்கள் உயிரிழந்தனர்.
இலங்கையில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதல் குறித்து முன்னரே அந்நாட்டு உளவுத்துறைக்கு தகவல் கிடைத்ததும், இந்தியாவும் இதுதொடர்பாக அந்நாட்டை எச்சரித்ததும் அரசியல் லாபத்திற்காக இலங்கை அரசு அவற்றை பெரிய பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை.
தேவாலய தாக்குதலை அடிப்படையாக கொண்டு, அங்குள்ள சிறுபான்மை அமைப்புகளை தடை செய்வது, சிறுபான்மை மக்கள் மீது ஒடுக்குமுறையை கட்டவிழ்ப்பது என அந்நாட்டு அரசாங்கம் ஈடுபடுவதாக அண்டை நாடுகள் குற்றம்சாட்டுகின்றன.
இந்நிலையில், முகம் மற்றும் உடலை மறைக்கும் புர்கா, நிகாப் உள்ளிட்ட அனைத்து வகை உடைகளுடன் பொது இடங்களுக்கு வர தடை விதிக்கும் வரைவு மசோதாவுக்கு, இலங்கை அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதால் இதற்கு தடை விதிப்பதாக தகவல் துறை அமைச்சர் கெஹ்லியா ரம்புக்வெல்லா தெரிவித்துள்ளார்.