கள்ளகாதலை விட மறுத்த மனைவியை போட்டு தள்ளிய கணவர்

பெருந்துறையில் கள்ளக்காதலை விடுமாறு கண்டித்த பிறகும் தொடர்ந்ததால் மனைவியை கணவரே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெருந்துறை அருகே மேட்டுக்கடையில் வசித்தவர் முனியப்பன் (வயது 28). அவரும் நிவேதா(19) என்பவரும் கடந்த 8 மாதத்துக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் மேட்டுக்கடையில் ஒரு வீட்டில் வாடகைக்கு எடுத்து வாழ தொடங்கினர். மேலும் 2 பேருமே வேலைக்கு போய் வந்தனர்.

இளம்பெண் நிவேதாவுக்கு ஆண் நண்பர்களுடன் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் செல்போனில் அவர்களுடன் பேசி வந்தார். இதைகண்ட கணவர் முனியப்பன் ஆத்திரம் அடைந்தார். “நமக்கு திருமணமாகிவிட்டது. மற்ற ஆண்களுடன் பேசுவதை பழகுவதை விட்டுவிடு” என்று சத்தமும் போட்டார். ஆனால் நிவேதா இதை கேட்டதாக தெரியவில்லை.

இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் நிவேதா ஒன்றாக இருந்ததை நேரில்கண்டு முனியப்பன் கடும் ஆத்திரம் அடைந்தார். இருவருக்கும் கடுமையான சண்டை ஏற்பட்டது. தொடர்ந்து இந்த பகுதியில் இருந்தால் மனைவியின் கள்ளக் காதலர்கள் மீண்டும் வரக் கூடும் என எண்ணிய முனியப்பன் அந்த பகுதிக்கு சென்று குடியிருக்க முடிவு செய்தார்.

அதற்காக தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் வீடுபார்க்க சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. கோபம் அடைந்த முனியப்பன் மனைவியை அடித்து உதைத்தார். இருவரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி கொண்டனர். பிறகு முனியப்பன் ஆத்திரத்தில் கத்தியால் நிவேதாவின் கழுத்தை அறுத்து துண்டித்தார். இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.

மனைவியின் பிணத்தை மறைக்க மோட்டார் சைக்கிளில் துண்டித்த தலை மற்றும் உடலை எடுத்து சென்ற போது பொதுமக்களிடம் சிக்கினார். பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் அவரை கைது செய்தார். போலீசாரிடம் கொலையாளி முனியப்பன் உண்மையை ஒப்புக்கொண்டு பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

மேலும் செய்திகள்