திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள ஜி குரும்பபட்டியைச் சேர்ந்தவர் வெங்கடாச்சலம். இவரது மகள் கலைவாணி. வடமதுரையில் உள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். சிவகுமார் சலூன் கடை வைத்திருக்கிறார். தற்போது விடுமுறை என்பதால் கலைவாணி வீட்டில் இருந்திருக்கிறார். கடந்த 16_ம் தேதி சிவக்குமார் கடைக்குச் சென்று விட, தாயார் லட்சுமி 100 நாள் வேலைக்கு சென்று இருக்கிறார். அப்போது வீட்டில் தனியாக இருந்த கலைவாணி பலாத்காரம் செய்யப்பட்டு மின்சாரம் பாய்ச்சி கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
மாலை வீடு வந்த லட்சுமி குழந்தை இறந்து கிடந்ததை பார்த்து கதறியிருக்கிறார். காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினார்கள். இந்த வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய காவல்துறை தயங்குகிறது உடனடியாக குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என திண்டுக்கல் அரசு மருத்துவமனை முன்பு கலைவாணியின் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டார்கள். தொடர்ந்து மாவட்ட எஸ்பியிடம் மனு கொடுத்தார்கள். அதன் பிறகு வேகமாக செயல்பட்ட போலீசார் கலைவாணியின் வீட்டிற்கு எதிர் வீட்டில் இருந்த பனிரெண்டாம் வகுப்பு மாணவன் கிருபாகரனை கைது செய்துள்ளனர்.
கிருபாகரனிடம் போலீசார் விசாரித்த போது அவனது வாக்குமூலத்தை கேட்டு போலீசாரே அதிர்ந்து போயிருக்கிறார்கள். பாலியல் பலாத்காரம் செய்த பிறகு உண்மையை வெளியே சொல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தலையை சுவற்றில் முட்டினேன். தலையணையை வைத்து முகத்தில் அழுத்தினேன். அப்போதும் சாகவில்லை. அதன் பிறகு வயரை பிளக்கில் மாட்டி மூக்கிலும் வாயிலும் வைத்தேன். அண்ணே..வேணாம் கரண்ட் வைக்காதீங்க விட்டுடுங்கன்னு அந்த பிள்ளை கதறிச்சு. ஆனாலும் உண்மையை வெளியே சொன்ன பிரச்னை ஆகிடும்னு பயந்து கரண்ட் வெச்சு கொன்னுட்டேன்" என வாக்குமூலத்தில் சொல்லியிருக்கிறான். இதைக் கேட்டு போலீசாரே அதிர்ந்து போயிருக்கிறார்கள்.