இந்து–கிறிஸ்துவ சபை, இந்திய ஏக இரட்சகர் சபையாக மாறிய வரலாறு

Advertisement

மதம் மக்களை நல்வழிப்படுத்துவதற்கானது. ஆனால் மதவெறி மக்களை அழிப்பதற்கானது. இன்றைய உலகில் பல்வேறு மதங்கள் உருவாகியுள்ளன. மத சகிப்புத் தன்மையோ மறைந்து வருகின்றது. மதவெறி தலை தூக்குகிறது. இவற்றை புரிந்து கொண்டு நல்வழி நடந்தால் அது மெய்வழி.

PP Church

இந்து–கிறிஸ்துவ சபையின் தோற்றம்

இந்து கிறிஸ்துவ சபையானது 18 மொழிகளில் பாண்டியத்துவம் பெற்ற கனம். ரபி. அருமைநாயகம் சட்டம் பிள்ளை அவர்களால் 1857 ஆம் ஆண்டு இந்தியாவின் தென்கோடி மாநிலமான தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம், நாசரேத்கிராமம், பிரகாசபுரத்தில் தோற்றுவிக்கப்பட்டது.

1886 ஆம் ஆண்டு தற்போதைய ஏக இரட்சகர்சபை நடுநிலைப்பள்ளியின் கிழக்கு பக்கம் ( ஏக இரட்சகர் சபை ஆலயம், மூக்குப்பீறி எதிரில்) ஆலயம்கட்டப்பட்டு ஆராதனை நடத்தப்பட்டது. பின்னர் ஓய்யான்குடி, குளத்துக்குடியிருப்பு, சாலைப்புதூர் போன்ற இடங்களிலும் ஆலயம் கட்டப்பட்டு ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.

அக்காலத்தில் தொழில் நிமித்தமாக நமது சபையைச் சார்ந்த மக்கள் இலங்கை சென்றனர்.அங்கு பியகம என்ற இடத்தில் ஆலயம் கட்டி தேவனை ஆராதனை செய்து வந்தனர். சில ஆண்டுகள்  கழித்து அவர்கள் மீண்டும் தமிழகம் வந்தனர்.தொழில் செய்வதற்காக தமிழக நகரங்களில் குடியேறினர். அவற்றில் கோயம்புத்தூர், சென்னை, சின்னாளம்பட்டி ஆகிய நகரங்களில்  ஏக இரட்சகர் சபை ஆலயத்தைக்கட்டி ஆராதனை செய்துவருகிறார்கள். எந்த ஆலயப் பிரதிஷ்டையானாலும் ஏழு சபைகளும் ஒன்று சேர்ந்து தேவனை ஆராதிக்கிறார்கள்.

மூக்குப்பீறியில் புதியதேவாலயம்

1886 ஆம் ஆண்டிற்குப் பின் புதியதேவாலயம் 19.08.1928 அன்று அஸ்திபாரமிடப்பட்டு 29.09.1943 அன்றுபிரதிஷ்டை செய்யப்பட்டது.1941 ஆம் ஆண்டிற்கு முன்பு சபை மக்களிடையே சபை நிர்வாக பிரச்சனை காரணமாக நீதிமன்றம் செல்லவேண்டியதாயிற்று 1941-ஆம் ஆண்டு நீதிமன்ற தீர்ப்பின்படிமூக்குப்பீறியைச் சார்ந்த 4 பேர், பிரகாசப்புரத்தைச் சார்ந்த 4 பேர் ஆக 8 பேர் மகா சபையினரால் நிர்வாகஸ்தர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு, அதில் தலைவர், செயலாளர், பொருளாளர் தேர்வுசெய்யப்பட்டு மூக்குப்பீறி 3 ஆண்டுகள், பிரகாசம் 3 ஆண்டுகள் என இதுவரை நன்முறையில் நிர்வாகம் நடைபெற்று வருகிறது.

SP Church

பெயர் மற்றம்

இடைக்காலத்தில் இந்து – கிறிஸ்துவ சபை என்ற பெயரானது இந்திய ஏக இரட்சகர்சபை(Indian church of the only Saviour) என பெயர் மற்றம் செய்யப்பட்டது.சபை தொடங்கப்பட்டு 161 ஆண்டுகள் ஆனாலும் புதிய ஆலயப் பிரதிஷ்டை முடிந்து 08.09.2018 அன்றுடன் 75 ஆண்டுகளானபடியால் இந்த வருட ஆலயப்பிரதிஷ்டையை ஏழு சபையினரும் ஒன்றுக்கூடி மிகச் சிறப்பாக கொண்டாடினர்.

சட்டத்திட்டங்கள்:

வேதபுத்தகத்தின்(Bible)66 ஆகமங்கள் மட்டுமே நெறிமுறை.பத்துகற்பனைகள் மட்டுமே சபையினரின் சட்டதிட்டம்.கூடாரப்பண்டிகை, பஸ்காபண்டிகை, பெந்தெகொஸ்தே பண்டிகை ஆகிய மூன்று பண்டிகைகள் மட்டுமே வேதத்தில் கூறியப்படி கொண்டாடப்படுகிறது. கனம்.ரபி.அருமைநாயகம் சட்டம்பிள்ளை அவர்களால் வேதத்திலுள்ள 150 சங்கிதங்கள் பாடல்களாக இயற்றப்பட்டுள்ளது,அப்பாடல்களைப் மட்டுமே பாடி ஆராதிக்கின்றனர் . வேதத்தில்(Bible) கூறியபடி ஏழாம் நாளாகிய சனிக்கிழமை ஓய்வுநாளாகக் ஆசரிக்கப்படுகின்றது.

விசுவாசமானது நம்மப்படுகிறவைகளின் உறுதியும் காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது என்று வேதத்தில் குறிப்பிட்டப்படி பிதா, குமாரன், பரிசுத்த ஆவியை விசுவாசித்து பண்டிகை, ஓய்வுநாட்களை ஆசரிப்போம்.மனித நேயம் மலர்ச்செய்வோம். 

                                                                                                  - ஜான் பொன்னுத்துரை

Advertisement
மேலும் செய்திகள்
minister-sengottaiyan-wrongly-named-boy-child-as-jayalaitha
‘ஆண்’ குழந்தைக்கு ‘ஜெயலலிதா’ என பெயர் சூட்டிய அமைச்சர் செங்கோட்டையன்
nellai-parliament-constitution-candidate-protest
பிரசாரத்தில் பணம் கேட்டு தொந்தரவு செய்யும் வாக்காளர்கள்! – புலம்பும் சுயேச்சை வேட்பாளர்
acting-as-police-officer-victim-arrested
போலீஸ் போல் நடித்து வசூல் வேட்டை – வாகன ஓட்டிகளே ‘உஷார்’
child-abuse-in-avadi-with-help-of-husband-and-wife
குளிர்பானத்தில் மயக்கமருந்து; பலருக்கு சப்ளை - கணவன் மனைவியின் கொடூர செயலால் பாழான சிறுமி
Rs-97-lakh-robbery-near-kilpakkam
நாங்க போலீஸ்.... விசாரணைக்கு வா... கோயம்பேட்டில் 97 லட்சம் பணத்தை கொள்ளையடித்த மோசடி கும்பல்
Chennai-police-arrested-drug-agent
டிவியில வேலை பார்த்தா 16 ஆயிரம் தான்; ஆனா இதுல 70 ஆயிரம் கிடைக்குது - தவறான செயலால் சிறைப்பட்ட இளைஞர்
thief-arrested-in-central-railway-station
`சொகுசாக வாழ வேண்டும்' - அதிகாலையில் சென்ட்ரல் ரயில் பயணிகளை அதிரவைத்த வாலிபர்
fake-police-si-arrested-in-ambasamuthiram
6 ஆண்டுகளாக வசூல் வேட்டை - சிக்கினார் அம்பாசமுத்திரத்தை கலக்கிய போலி எஸ்.ஐ
BJP-cadre-suicide-threat-in-cell-phone-tower
`இலவசங்கள் கொடுக்கக்கூடாது; இல்லனா குதிச்சுருவேன்' - செல்போன் டவரில் ஏறிமிரட்டிய பாஜக பிரமுகர்
child-death-creates-controversy-in-tirupur
`இரண்டு நாளாக பார்க்கவிடவேயில்லை' - மருத்துவர்களின் அலட்சியத்தால் பச்சிளம் குழந்தை இறந்ததா... திருப்பூர் அரசு மருத்துவமனையை சுற்றும் சர்ச்சை

READ MORE ABOUT :

/body>