கருக்கலைப்பில் உயிரிழந்த பெண் வயிற்றில் ஆண் குழந்தை..!

Advertisement

மதுரை மாவட்டத்தில் பெண் குழந்தை என்று தெரிந்து 7 மாத கருவை கலைத்த பெண்ணின் வயிற்றில் ஆண் குழந்தை இருந்துள்ளது உடற்கூறு ஆய்வில் தெரியவந்துள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகிலுள்ள உத்தப்புரத்தைச் சேர்ந்தவர் ராமர் இவரது மனைவி ராமுத்தாய் இவர்களுக்கு ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில் 4வது முறையாக ராமுத்தாய் கருத்தரித்திருந்தார். இந்தக் குழந்தையாவது ஆண் குழந்தையாக இருக்கும் என்ற ஆசையில் இருந்த ராமுத்தாய்க்கு 4வதும் பெண் குழந்தை என்று தெரியவர 7 மாத கர்ப்பிணியாக இருந்த ராமுத்தாய் மருத்துவர்களிடம் சென்று ஆலோசனை கேட்டுள்ளார். 7 மாதம் ஆன நிலையில், இனி ஒன்றும் செய்ய முடியாது குழந்தை பெற்றுக்கொள்வதே சிறந்த வழி என்று மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். இதையடுத்து, அதே மருத்துவமனையில், பணியாற்றி வந்த செவிலியர் ஜோதிலட்சுமியை அணுகியுள்ளார்.

கருவை கலைக்க தான் உதவுவதாக கூறிய ஜோதிலட்சுமி, இதற்கு ரூ.20 ஆயிரம் வரை செலவாகும் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து, ஜோதி லட்சுமி கேட்டதை கொடுத்த ராமுத்தாய், தொட்டப்பநாயக்கனூரில் உள்ள ஜோதி லட்சுமி வீட்டிற்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். அப்போது, ராமுத்தாய்க்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தற்போது கிடைத்த தகவல் படி கருவை கலைத்த பெண்ணின் வயிற்றில் ஆண் குழந்தை இருந்துள்ளது உடற்கூறு ஆய்வில் தெரியவந்து மேலும் அந்த குடும்பத்தை சோகத்தில் ஆழ்தியுள்ளது

இது போன்ற சம்பங்கள் நடை பெறும் சூழ் நிலையில் இந்தியாவில் கரு கலைப்பு சட்டம் மற்றுன் பாலின சோதனை சட்டம் பற்றி தெரிந்து கொள்வோம்.

தாயின் உயிரைக் காப்பதான காரணம் அன்றி வேறெந்த காரணத்திற்காகவும் கருக்கலைப்பு கூடாது. அப்படி மீறி கருக்கலைப்பு செய்யப்பட்டால் அப்படிச் செய்தவருக்கு மூன்று வருடம் வரையான சிறைத் தண்டனை அல்லது தண்டத்தொகை அல்லது இரண்டுமே தண்டனையாகக் கிடைக்கும். ஒரு வேளை அப்பெண்ணே கருக்கலைப்பு செய்து கொண்டால் ஏழு வருடம் வரையான சிறை மற்றும் தண்டத்தொகை கட்டுதல் இவை தண்டனையாகக் கிடைக்கும் என இந்திய பீனல் கோடு 312யில் கூறப்பட்டுள்ளது.

The Medical Termination of Pregnancy Act 1971 எனும் சட்டம் 71-ல் வந்தது.

இந்திய சட்டம் 1971ன் படியும்,அதைத் தொடர்ந்த திருத்தம் 2002ம் ஆண்டின் படியும் இந்தியாவில் கருகலைப்பு சட்டரீதியானது. இந்த சட்டம்,பாலியல் வன்முறையால் உருவாகும் கருவை கலைக்கலாம் என்று குறிப்பிட்டுச் சொல்கிறது. கரு 12 வாரங்களுக்குள் கண்டுபிடிக்கப்பட்டால் ஒரு பதிவுபெற்ற மருத்துவரின் பரிந்துரையின்படி கரு கலைப்பு செய்யலாம். கருவை 12 லிருந்து 20 வாரங்களுக்குள் கண்டறிந்தால் அதை கலைக்கும் முன் 2 பதிவுபெற்ற மருத்துவர்களின் ஆலோசனை பெறப்பட்ட வேண்டும்.

18 வயதுக்கு உட்பட்ட தாயின் உடல் நலத்தை 3 மூத்த மருத்துவர்கள் உறுதிசெய்த பிறகு 24 வார கருவை கலைக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. இத்தீர்ப்பை முன்மாதிரியாக எடுத்துக்கொள்ள கூடாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால், 2014ல் கருகலைப்பிற்கான காலவரையறையை நீட்டிப்பதற்க்கான சட்ட திருத்தத்திற்கு வரைவு எழுதப்பட்டுள்ளது. தற்காலத்தில் ஏற்ப்பட்டுள்ள தொழிற்நுட்ப வளர்சியால்,பெரும்பாலும் 20 வாரத்திற்க்கு மேற்பட்ட கருவைக் கூட தாயின் உடல்நிலைக்கு எந்தவொரு அச்சுருத்தலும் இல்லாமல் கலைக்கலாம்.

பிறப்புக்கு முன்பே பாலினம் கண்டறிதல் பாலின தேர்வு தடைச்சட்டம் 1992ல் கொண்டுவரப்பட்டது பெண் ஆண் குழந்தை பாகுபாடு பார்பது தவறு.

இது போல செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குவதன் முலமாக குற்றங்கள் தவிர்க்கப்படலாம்.

Advertisement
மேலும் செய்திகள்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
do-you-know-how-the-meteorological-center-calculates-the-sun
வானிலை ஆய்வு மையம் வெயிலை எப்படி கணக்கிடுகிறது தெரியுமா…?
today-is-international-firefighters-day-observance
மே 4 : என்ன தினம் என்று யாருக்காவது தெரியுமா...?
today-is-the-50th-birthday-of-thala-ajith-kumar
தல அஜித் இந்த உச்சத்தை எப்படி அடைந்தார் என்று தெரியுமா…?
do-you-know-why-hitler-threatened-the-world-and-committed-suicide
உலகையே அச்சுறுத்திய ஹிட்லர் எதனால் தற்கொலை செய்தார் என்று தெரியுமா?
in-corona-pandemic-do-we-need-ipl-a-debate
கொத்து கொத்தாக உயிர்கள் மடியும் சூழலில் IPL கொண்டாட்டம்
new-corona-virus-spreading-in-sri-lanka
காற்றில் 1மணி நேரம் உயிருடன் இருக்கும் - இலங்கையை அச்சுறுத்தும் புதிய கொரோனா!
shocking-information-about-the-corona-virus
“கொரோனா வைரஸ் குறித்து அதிர்ச்சி தகவல்”
sachin-tendulkar-celebrates-48th-birthday
சாதனை நாயகன் சச்சினுக்கு 48 வது பிறந்தநாள்
virat-kholi-talk-about-devdutt-padikkal
ரசிகர்களே ஓவர் ஆட்டம் வேண்டாம் – விராட் கோலியின் அந்த விளக்கம்!
/body>