புன்னகைக்கு டாட்டா காட்டும் இனிப்பு

உங்களுக்கு எதை சாப்பிடுவதற்கு அதிக விருப்பம்? 'இனிப்பு' என்று பதில் கூறினால், உங்கள் பற்களுக்கு பாதிப்பு நேரக்கூடும்!
 
கேண்டி எனப்படும் மிட்டாய்கள், சாஃப்ட் டிரிங்ஸ் எனப்படும் குளிர்பானங்கள் மற்றும் ஏனைய இனிப்பு அடங்கிய உணவு பதார்த்தங்கள், பானங்களை விரும்பாதோர் இருக்க இயலாது. நாவிற்கு சுவையாக அமையும் இந்த உணவுகள், உடலுக்கும் பற்களுக்கும் நன்மை செய்வன அல்ல. 
 
இவ்வகை சுவை மிகுந்த பண்டங்கள், பானங்கள் எந்த வகையில் பற்களுக்குப் பாதிப்பை உருவாக்குகின்றன தெரியுமா?
 
சுவைபானங்கள்: கார்பனேட்டட் பீவரேஜஸ் என்று கூறப்படும் செயற்கை குளிர்பானங்கள் வெகுவாக விற்பனையாகும் காலகட்டம் இது. விருந்தினர், நண்பர்கள் என்று அனைவரும் இவ்வகை பானங்களை விரும்பி அருந்துகின்றனர். இந்த பானங்களில் சர்க்கரை கலந்துள்ளது. நாம் அருந்தும்போது வாயின் எல்லா பகுதிகளுக்கும் இது செல்கிறது. நுண்ணிய இடுக்குகளிலும் பானம் செல்வதால் அதில் உள்ள சர்க்கரை வாயின் இடுக்குகளில் படிந்து கொள்கிறது. பற்களுக்கு சேதத்தை விளைவிக்கும் பாக்டீரியாக்கள் என்னும் நுண்ணுயிரிகள் உருவாவதற்கு இது காரணமாகிறது.
 
எனாமலை கரைக்கிறது: பற்களின் மேற்புறம் இருக்கும் அடுக்கு 'எனாமல்' ஆகும். பற்களை பார்க்கும்போது வெள்ளையாக நம் கண்களுக்குத் தெரிவதற்கு காரணம் எனாமல்தான். இவை பற்களின் நரம்புகளையும் பாதுகாக்கின்றன. இனிப்புப் பண்டங்களான மிட்டாய் போன்றவற்றை நாம் மென்று சுவைக்கும்போது அவற்றில் உள்ள சர்க்கரை பற்களில் படிந்து கொள்கிறது. பற்களில் படிந்த சர்க்கரையை நம் உமிழ்நீரால் கரைக்க இயலுவதில்லை. கரையாமல் படிந்திருக்கும் சர்க்கரையால் அமிலங்கள் சுரக்க ஆரம்பிக்கின்றன. அமில சுரப்பால் எனாமல் கரைக்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக பற்கள் பாதுகாப்பை இழந்து பல் கூச்சம், வலி ஆகியவை உருவாகின்றன. பற்சிதைவுக்கும் இது காரணமாகிறது.
 
பற்காறை: பற்களில் உருவாகும் காறை, பாக்டீரியா என்னும் நுண்ணுயிர்கள் உருவாகக்கூடிய இடமாகும். சர்க்கரை, காறைகளில் பாக்டீரியா உற்பத்தியை ஊக்குவிக்கிறது. நாம் சாப்பிடும் உணவில் இருந்து காறைகளில் படியும் சர்க்கரையால் பாக்டீரியா உருவாகி, பல் சொத்தை, ஈறுகளில் நோய் தொற்று, வாய் துர்நாற்றம் போன்ற பல் சார்ந்த கோளாறுகள் உருவாகின்றன.
 
பொதுவாக நாம் சாப்பிடும் அதிகப்படியான சர்க்கரை சார்ந்த உணவுப் பொருள்களால் வாயின் பின்பக்கமுள்ள பற்கள் அரிக்கப்படுதல், ஈறுகளில் நோய் தொற்று, பற்சிதைவினால் உணவினை மெல்லுவதில் பிரச்னை, நுண்ணுயிரிகளால் செரிமான கோளாறு மற்றும் வாய் துர்நாற்றத்தை உருவாக்கும்.
 
ஆகவே, சர்க்கரை அடங்கிய இனிப்பு உணவுகள் மற்றும் மென்பானங்களை சாப்பிடுவதில், அருந்துவதில் கவனம் தேவை. முடிந்த அளவு அவற்றை தவிர்க்கலாம். தவிர்க்க இயலாமல் உண்டால் வாயை நன்றாக சுத்தம் செய்வது அவசியம்.
Advertisement
மேலும் செய்திகள்
how-to-check-oxygen-concentration-if-doubted-as-covid-19-infected-and-ways-to-fight-with-covid-19
கோவிட்-19: ஆக்ஸிஜன் அளவை சோதிப்பது எப்படி?
what-are-the-benefits-in-adding-ghee-in-rice
தினமும் சாப்பாட்டில் நெய் கலந்து கொள்வதால் என்ன நன்மைகள்? வாங்க பார்க்கலாம்..
foods-that-help-to-boost-immunity-to-fight-against-infections-and-cold-full-of-vitamin-c
கொரோனா பரவல்: இயற்கையாக நோய் எதிர்ப்பு ஆற்றலை தரும் உணவுகள்
penugreek-tea-to-keep-lung-healthy-and-to-help-fight-against-infection-in-pandemic-season
கொரோனா காலம்: நுரையீரலுக்கு ஆரோக்கியம் தரும் மூலிகை டீ
herbs-that-help-to-shed-kilos-and-reduce-waist-cicumference-their-medicinal-benefits-and-methods-to-take-them
கொரோனா ஊரடங்கு: இடுப்புச் சதை குறைய எதை சாப்பிடலாம்?
tricks-make-sure-to-beat-the-heat-with-fennel-vetiver-and-sandalwood-paste
கோடைக்காலத்தில் சரும பாதுகாப்புக்கான இயற்கை முறைகள்
women-can-get-corona-vaccines-even-during-menstruation
மாதவிடாய் காலத்தில் பெண்கள் கொரோனா தடுப்பூசி போடலாமா..? கூடாதா…?
improving-immune-health-help-to-activate-over-300-enzymes-and-aid-to-cell-division-cell-growth
இரத்த ஓட்டத்தை சீராக்கும்... நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும்
the-lentil-that-manage-symptoms-of-diabetes-helping-for-weight-loss-could-prevent-from-heat-stroke-and-beneficial-for-pregnant-women
ஹீட் ஸ்ட்ரோக்கிலிருந்து பாதுகாக்கும்... சிசுவுக்கு நல்லது...
steaming-for-coron-treatment-what-are-the-things-you-should-not-forget
கொரோனா: நீராவி பிடிப்பது எவ்விதம் பயன் தரும்?