கொரோனா வைரஸ் தாக்குதல் கண்டுபிடிக்கப்பட்டது முதல் 'ஆவி பிடித்தல்' அதற்கான சிகிச்சையாக முன் வைக்கப்பட்டு வருகிறது. பல வல்லுநர்கள் கொரோனாவுக்கான சிகிச்சையில் நீராவியின் பயன் எதுவுமில்லை என்று கூறினாலும், கொரோனா வைரஸை கொல்லாவிட்டாலும் அதன் தாக்கத்தை எதிர்த்துப் போராட நீராவி உதவும் என்றும் நம்பப்படுகிறது.
கோவிட்-19 கிருமி தாக்கிவிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையுடன் அல்லது கிருமி தொற்று கண்டுபிடிக்கப்பட்டதும் பலர் நீராவியை சுவாசித்து (ஆவி பிடித்தல்) வருகின்றனர். இதை சரியான முறையில் செய்யாததால், கவன குறைவு அல்லது பதற்றத்துடன் செய்வதால் வெந்நீர் ஊற்றி விபத்துகள் நேர்கின்றன.
ஆவி பிடிக்கும்போது கவனிக்க வேண்டியவை:
வெந்நீர் பாத்திரத்தில் நிரம்பி வழியுமளவுக்கு இருக்கக்கூடாது
குழந்தைகள் மிக அருகில் செல்லாமல் கவனித்துக்கொள்ள வேண்டும்.
ஆவி பிடிக்க அமரும்போது மடியில் ஒரு துண்டை (டவல்)வைத்துக்கொள்ள வேண்டும்.
வெந்நீரை இறக்கி வைத்ததும் அதிலிருந்து நீராவி சமச்சீரான அளவாக வெளியேறும் வரை காத்திருக்கவும்.
நீராவி வெளியேறுவது சீரானதும் போதுமான தூரத்தில் முகத்தை வைத்து நீராவியை உள்ளிழுக்கவும்.
சிலர் ஆவி பிடிக்கும்போது ஓமத்தை வெந்நீருக்குள் போடுகின்றனர். வேறு சிலர் யூகலிப்டஸ் தைலத்தை பயன்படுத்துகின்றனர்.
எச்சரிக்கையுடன் இதை செய்து பயன் பெறலாம்.