இதய பாதிப்பின் அறிகுறிகள் எவை தெரியுமா?

Advertisement

'இதயம்' காதலுக்கு மட்டுமல்ல; வாழ்தலுக்கும் முக்கியமானது. அதிகமானோரின் உயரிழப்புக்கு மாரடைப்பும், மூளை இரத்தக்குழாய் அடைப்புமே காரணமாகின்றன. இதய தசைகளுக்கு போதிய அளவு இரத்தம் கிடைக்காதபோது, அதன் இயக்கம் தடைபட்டு உயிரிழப்புக்குக்கூட காரணமாகி விடுகிறது.

சில ஆரோக்கிய விஷயங்களை கருத்தில் கொண்டால் இதய நோய் பாதிப்பிலிருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ளலாம்.

இரத்த சர்க்கரை அளவு:

இரத்தத்தில் இயல்பை விட அதிக சர்க்கரை காணப்படும் நீரிழிவு பாதிப்பும் இதய நோய்க்கு காரணமாகும். நீரிழிவு பாதிப்புள்ளோருக்கு மாரடைப்பு வரும் வாய்ப்பு பாதிப்பில்லாதவர்களைக் காட்டிலும் 2 முதல் 4 மடங்கு அதிகமாகும். சாப்பிடுவதற்கு முன்பு இரத்தத்தில் சர்க்கரையின் அளவு 100 mg/dl என்பதை விட குறைவாகவும், சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து 140 mg/dl என்ற அளவை விட குறைவாகவும் இருக்கவேண்டும். கடந்த எட்டு முதல் 12 வார கால அளவில் HbA1C என்னும் கிளைகோசைலேடட் ஹீமோகுளோபினின் சராசரி அளவு 6 விழுக்காட்டுக்கும் குறைவாக இருக்கவேண்டும். நீரிழிவு பாதிப்புள்ளோருக்கு இரத்தத்தில் சர்க்கரையின் அளவு 126 mg/dl என்ற அளவை விட அதிகமாகவும், HbA1C 6.5 விழுக்காட்டை விட அதிகமாகவும் இருக்கும்.

இரத்த அழுத்தம்:

இதய நோய்க்கான வாய்ப்பை இரத்த அழுத்தத்தை கொண்டும் அறிந்திட முடியும். பெரும்பாலானோருக்கு இரத்தக் கொதிப்பு என்னும் உயர் இரத்த அழுத்தம் என்ற அறிகுறியையும் காட்டுவதில்லை. சிகிச்சையளிக்கப்படாவிட்டால் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய பாதிப்பு இது.

இயல்பான இரத்த அழுத்த அளவு என்பது 120 / 80 mmHg ஆகும். இரத்த அழுத்தத்தை பலவேளைகளில் பரிசோதிக்கவேண்டும். 120-139/80-89 mmHg என்ற அளவு உயர் இரத்த அழுத்த பாதிப்புக்கு முன்னோட்டமான அளவுகள் ஆகும். இந்த அளவை இரத்த அழுத்தம் எட்டினால், வாழ்க்கை முறையில் மாற்றங்களை செய்யவேண்டியதும், மருத்துவரின் ஆலோசனைபடி சிகிச்சை பெற வேண்டியதும் அவசியம்.

இரத்த அழுத்தத்தைப் பற்றிய தவறான நம்பிக்கைகள்:

என் பெற்றோருக்கு, முன்னோருக்கு உயர் இரத்த அழுத்த பாதிப்பு இருந்துள்ளது. ஆகவே, எனக்கு வருவதை தடுக்க இயலாது என்று பலர் நம்புகிறார்கள். வாழ்க்கை முறையில் நல்ல மாற்றங்களை செய்தால் உயர் இரத்த அழுத்த பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க வாய்ப்புண்டு. முன்னோரின் பாதிப்பு இல்லாமல் பலர் தங்களை காத்துக்கொண்டுள்ளார்கள்.

உணவில் குறைந்த அளவே உப்பு சேர்த்துக்கொள்வதால் எனக்கு இரத்த அழுத்த பாதிப்பு வராது. உண்மை என்னவென்றால் 75 விழுக்காடு சோடியம், நாம் உண்ணும் உணவுகளில் மறைந்திருப்பதுதான். சாஸ், சூப், பேக்கரி உணவுகளின் மூலம் சோடியம் நம் உடலில் சேர்கிறது.

உயர் இரத்த அழுத்தத்தினால் அன்றாட வாழ்வில் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்பதால் சிகிச்சை அவசியமில்லை என்று சிலர் நம்புகிறார்கள். அறிகுறி இருந்தாலும் இல்லையென்றாலும், உயர் இரத்த அழுத்தம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், சிகிச்சை அவசியம். உயர் இரத்த அழுத்தம் இருந்தால் மூளையில் இரத்தக்குழாய் அடைப்பு, இதய நோய் மற்றும் பல்வேறு உடல்நலக் கேடுகள் வந்து சேரும்.

ஒயின் உடலுக்கு நல்லது என்று குறிப்பொன்றை வாசித்தேன். ஆகவே, எனக்கு விருப்பமான அளவு ஒயின் குடிக்கலாம் என்று பலர் நினைக்கிறார்கள். அதிக அளவு மற்றும் தொடர்ந்து ஆல்கஹால் அருந்துவது இரத்த அழுத்த பாதிப்பு, இதய பாதிப்பு, மூளையில் இரத்த குழாய் அடைப்பு ஏற்பட வழிவகுக்கும்.

சிலர் உயர் இரத்த அழுத்தத்திற்கு மாத்திரை சாப்பிட்டு, இரத்த அழுத்தம் இயல்பு நிலைக்கு வந்ததும் மாத்திரை சாப்பிடுவதை விட்டுவிடுகின்றனர். இதுவும் தவறாகும். சிலர் தொடர்ந்து மருந்து சாப்பிடவேண்டிய நிலையில் இருக்கலாம். சிலர் வாழ்க்கை முறை மாற்றங்களை செய்த பின்னர் மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே மருந்தின் அளவில் மாற்றங்களை செய்ய முடியும்.

உயர் இரத்த அழுத்தத்தினால் வரக்கூடிய பாதிப்புகள்:

சிகிச்சையளிக்கப்படாத உயர் இரத்த அழுத்தத்தினால் மாரடைப்பு, மூளையில் இரத்தக்குழாய் அடைப்பு, இதயம் விரிவடைந்ததால், இரத்தத்தை செலுத்தும் அளவு குறைதல், சிறுநீரக கோளாறு மற்றும் செயலிழப்பு, பார்வை இழப்பு, ஆண்களுக்கு பாலியல் சார்ந்த குறைபாடுகள், கால்கள், கைகள், வயிறு மற்றும் சிறுகுடலுக்குச் செல்லும் இரத்தத்தின் அளவு குறைவதால் பாதிப்பு இவை நேரக்கூடும்.
கொலஸ்ட்ரால் அளவு:

நம் மூளைக்கும் செல் இயக்கத்திற்கும் சிறிய அளவு கொலஸ்ட்ரால் என்னும் கொழுப்பு அவசியம். ஈரலின் செயல்பாட்டின் மூலம் அல்லது உணவின் மூலம் கொலஸ்ட்ராலை பெற்றுக்கொள்கிறோம். எல்டிஎல் கொலஸ்ட்ரால், ஹெச்டிஎல் கொலஸ்ட்ரால் மற்றும் டிரைகிளைசராய்டு என்று கொலஸ்ட்ராலில் மூன்று வகை உள்ளது. 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் நான்கு முதல் ஆறு மாத இடைவெளியில் கொலஸ்ட்ரால் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

இந்தப் பரிசோதனைகளை செய்து வந்தால் இதய பாதிப்பு நேராமல் தடுக்கலாம்.

Advertisement
மேலும் செய்திகள்
how-to-check-oxygen-concentration-if-doubted-as-covid-19-infected-and-ways-to-fight-with-covid-19
கோவிட்-19: ஆக்ஸிஜன் அளவை சோதிப்பது எப்படி?
what-are-the-benefits-in-adding-ghee-in-rice
தினமும் சாப்பாட்டில் நெய் கலந்து கொள்வதால் என்ன நன்மைகள்? வாங்க பார்க்கலாம்..
foods-that-help-to-boost-immunity-to-fight-against-infections-and-cold-full-of-vitamin-c
கொரோனா பரவல்: இயற்கையாக நோய் எதிர்ப்பு ஆற்றலை தரும் உணவுகள்
penugreek-tea-to-keep-lung-healthy-and-to-help-fight-against-infection-in-pandemic-season
கொரோனா காலம்: நுரையீரலுக்கு ஆரோக்கியம் தரும் மூலிகை டீ
herbs-that-help-to-shed-kilos-and-reduce-waist-cicumference-their-medicinal-benefits-and-methods-to-take-them
கொரோனா ஊரடங்கு: இடுப்புச் சதை குறைய எதை சாப்பிடலாம்?
tricks-make-sure-to-beat-the-heat-with-fennel-vetiver-and-sandalwood-paste
கோடைக்காலத்தில் சரும பாதுகாப்புக்கான இயற்கை முறைகள்
women-can-get-corona-vaccines-even-during-menstruation
மாதவிடாய் காலத்தில் பெண்கள் கொரோனா தடுப்பூசி போடலாமா..? கூடாதா…?
improving-immune-health-help-to-activate-over-300-enzymes-and-aid-to-cell-division-cell-growth
இரத்த ஓட்டத்தை சீராக்கும்... நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும்
the-lentil-that-manage-symptoms-of-diabetes-helping-for-weight-loss-could-prevent-from-heat-stroke-and-beneficial-for-pregnant-women
ஹீட் ஸ்ட்ரோக்கிலிருந்து பாதுகாக்கும்... சிசுவுக்கு நல்லது...
steaming-for-coron-treatment-what-are-the-things-you-should-not-forget
கொரோனா: நீராவி பிடிப்பது எவ்விதம் பயன் தரும்?
/body>