மன அழுத்தம், நன்மையா? தீமையா?

by SAM ASIR, Aug 17, 2019, 19:33 PM IST
Share Tweet Whatsapp

சில நேரங்களில் நமக்கு நேரிடும் அழுத்தத்தின் காரணமாக, உத்வேகம் பெற்று இலக்குகளை குறித்த நேரத்தில் அடைந்துவிடுகிறோம்; வேலைகளை வெற்றிகரமாக முடித்து விடுகிறோம். ஆனால், உறவுகளால், பொருளாதார நெருக்கடிகளால், பள்ளி, கல்லூரி, அலுவலகத்தில் கிண்டலுக்கு உள்ளாவதால், பயணம் செய்யும் போது வரும் தொல்லைகளால் ஏற்படும் மனஅழுத்தம், எதிர்மறை விளைவுகளை உருவாக்குகிறது.

மனஅழுத்தத்திற்கு 65 விழுக்காடு காரணமாவது அலுவலகம் என்றும், வேலையின் காரணமாகவே மனக்கலக்கமும் கவலையும் உருவாகிறது என்றும் ஓர் ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

மன அழுத்தமும் அறிகுறியும்

மனம் அழுத்தத்திற்குள்ளானால் ஏதோ ஒரு வகையில் உடல் அதை வெளிப்படுத்துகிறது. இதயம் வேகமாக துடிக்கலாம்; திடீரென வியர்க்கலாம்; சரியான நோக்கில் சிந்திக்க இயலாமல் கோபம் வரலாம்; பசி மறந்து போகலாம். இப்படி பல்வேறு விதங்களில் மன அழுத்தத்தை உடல் பிரதிபலிக்கும்.

பத்து அறிகுறிகள்

கழுத்து மற்றும் முதுகுப் பகுதியில் தசையில் இறுக்கம் மற்றும் விறைப்பு தன்மை, கண்களைச் சுற்றி கருவளையங்கள் உருவாதல், தலைவலியுடன் கண்கள் சோர்ந்துபோதல், எப்போதும் பெலனில்லாதவண்ணம் அசதியாக உணருதல், அஜீரணம் மற்றும் வயிற்றுக்குள் அமில பிரச்னை, பாதங்கள் மற்றும் உள்ளங்கைகளில் வியர்த்தல், ஆழ்ந்து தூங்க இயலாமை, பசியில் மாற்றம் தென்படல், இதய படபடப்பு, கோர்டிசால் என்னும் ஹார்மோன் அதிகமாக சுரப்பதால் சிவந்த, வலியுள்ள முகப்பரு தோன்றுதல்
இந்த பத்து அறிகுறிகளும் இருந்தால் மன அழுத்தத்தில் இருக்கிறீர்கள் என்று அறிந்து கொள்ளலாம். கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுங்க!


Leave a reply