எடை குறைப்பு முதல் பாலுணர்வு வரை: சர்வரோக நிவாரணி வெங்காயம்

Advertisement

இந்தியா, சீனா, மெக்ஸிகோ நாடுகளின் உணவுகளில் வெங்காயம் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. வெங்காயம் அன்றாட உணவில் ஏதோ ஒரு வகையில் நாம் சேர்த்துக்கொள்ளக் கூடியது. வெங்காயத்தை அப்படியே சாப்பிடுவது நல்லது. தோலை அதிகமாக உறிக்கக்கூடாது. தயிர் பச்சடிக்குப் பெரிய வெங்காயத்திற்குப் பதிலாகச் சின்ன வெங்காயம் பயன்படுத்தலாம். சட்னி அரைத்துச் சாப்பிடலாம். எண்ணெய்யை, மிளகாய் வற்றலைப் போட்டு வதக்கக்கூடாது. ஓரளவு பச்சைத்தன்மை இருக்கவேண்டும். வாய்க்கும் நாவுக்கும் சுவையாக இருக்கவேண்டும் என்றும் ஆறடி உடலைப் புறக்கணிக்கிறோம். குறைந்த அளவு காரம், புளி சேர்த்து வெங்காய சட்னி செய்யவேண்டும்.

வெங்காயத்தில் நிறைந்துள்ள சத்துக்கள்

வெங்காயத்தில் கலோரி குறைவு. ஆனால் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து குறிப்பிடத்தக்க அளவு இருக்கிறது. உடலின் நோய் எதிர்ப்பாற்றலையும் கொலோஜன் உற்பத்தியை அதிகரிக்கக்கூடியதும், திசு சேதத்தைச் சரி செய்யக் கூடியதும் இரும்புச் சத்தை கிரகிக்க உதவுவதுமான வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. கொலேஜன், சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமானதாகும்.பி9 என்னும் ஃபோலேட் மற்றும் பி6 என்னும் பைரிடாக்ஸின் ஆகியவை வெங்காயத்தில் அதிக அளவில் உள்ளன. இவை உடலின் வளர்சிதை மாற்றத்திலும், இரத்த சிவப்பணு உற்பத்தியிலும் நரம்பியல் செயல்பாட்டிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஃபோலேட் மனச்சோர்வுக்கு நல்ல மருந்தாகும். பசியையும் உறக்கத்தையும் தூண்டக்கூடியது. பலரது உடலில் குறைவாகக் காணக்கூடிய பொட்டாசியம் சத்து வெங்காயத்தில் உள்ளது.

வெங்காயத்தின் மருத்துவகுணம்

வெங்காய சாற்றைப் பருகினால் காய்ச்சல், சாதாரண சளி மற்றும் ஒவ்வாமை குணமாகும். வெங்காய சாற்றின் நெடி குறைவதற்குச் சிறிது தேன் சேர்த்துக் கொள்ளலாம்.

இருதயம்

வெங்காயத்தில் ஆன்ட்டிஆக்ஸிடண்டுகள் என்னும் ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்கள் உள்ளன. இவை அழற்சிக்கு (inflammation) எதிராகச் செயல்படுகிறது. டிரைகிளிசராய்டுகள் மற்றும் கொலஸ்ட்ராலின் அளவையும் குறைக்கிறது. ஆகவே, இருதய ஆரோக்கியத்துக்கு ஏற்றது.குவெர்சிட்டின் என்னும் ஆக்ஸிஜனேற்ற தடுப்பான் வெங்காயத்தில் நிறைந்திருக்கிறது. இது உயர் இரத்த அழுத்தம் என்னும் இரத்த கொதிப்பைத் தடுப்பதன் மூலம் இருதய ஆரோக்கியத்துக்குத் துணை செய்கிறது. வெங்காயம் இரத்தத்தில் கொழுப்பைக் குறைக்கும். ரத்தநாளங்களில் உள்ளே கொழுப்பு படிவதைத் தடுக்கும். இரத்த அழுத்தத்தைச் சமநிலைப்படுத்துவதால், இருதய நோயாளிகளுக்கு வெங்காயம் நல்ல நண்பன்.

ஆண்டோசயனின் என்ற நிறமி வெங்காயத்தில் உள்ளது. இது இருதய பாதிப்பைத் தடுக்கக்கூடியது. வழக்கமாக இந்நிறமி கொண்ட உணவுப் பொருள்களைச் சாப்பிடும் ஆண்கள் மற்றும் பெண்களிடையே ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. 43,880 ஆண்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் நாளொன்றுக்கு 613 மில்லி கிராம் ஆண்டோசயனின் சாப்பிடுகிறவர்களுக்கு மாரடைப்பு வரும் வாய்ப்பு 14% குறைந்து காணப்பட்டது. 93,600 பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் ஆண்டோசயனின் அதிகமாகச் சாப்பிடும் பெண்களுக்கு மாரடைப்பு வரும் வாய்ப்பு 32% குறைவாகக் காணப்பட்டது.
உயர் இரத்த அழுத்தமும் அதிக உடல் எடையும் கொண்ட நபர்கள் 70 பேரைக் கொண்டு ஓர் ஆய்வு செய்யப்பட்டது. அவர்களுக்கு நாள்தோறும் குவெர்சிட்டின் அதிகமுள்ள வெங்காய சாறு 162 மில்லி கிராம் கொடுக்கப்பட்டது. அவர்களது இரத்த அழுத்த அளவு சிறிது குறைந்திருந்தது.

இரத்த சர்க்கரை அளவு

இரண்டாம் வகை நீரிழிவு பாதிப்பு உள்ளோர் தினமும் உணவு உண்பதற்கு முன் 100 கிராம் வெங்காயம் சாப்பிட்டு வந்தால், சர்க்கரை அளவு குறைவது தெரிய வந்தது.

பாலுணர்வு

பாலுணர்வு பெருக்கும் உணவுகளில் வெங்காயம் மிக முக்கியமானதாகும். வெள்ளை வெங்காயத்தை உரித்து நசுக்கி சுத்தமான வெண்ணெய்யில் வறுக்க வேண்டும், இந்த கலவையை வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி தேனுடன் தவறாமல் எடுத்துக் கொண்டால், பாலுணர்வு அதிகமாகும்.

புற்றுநோய்

2015ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், வெங்காயம் இரைப்பை புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும் என்று கண்டறியப்பட்டது. ஜார்ஜ் மாடெல்ஜன் அறக்கட்டளை வெளியிட்ட, உலகின் ஆரோக்கியமான உணவுகளின் பட்டியல் படி, வாரத்திற்கு ஒன்று முதல் ஏழு வெங்காயம் சாப்பிடுவது பெருங்குடல், குரல்வளை மற்றும் கருப்பை புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க உதவும். ஒரு நாளைக்குப் பல விதங்களில் வெங்காயத்தை உணவில் எடுத்துக் கொள்வது வாய்வழி மற்றும் உணவுக்குமாய் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க உதவும் எனக் கூறப்பட்டுள்ளது. வெங்காயத்திலுள்ள குவெர்சிட்டின் என்னும் கூட்டுப்பொருள் புற்றுநோயைக் குறிப்பாக வயிறு மற்றும் பெருங்குடலில் ஏற்படக்கூடிய புற்றுநோயைத் தடுக்கிறது.

எடை குறைப்பு

வெங்காயம் கொலஸ்ட்ராலின் அளவையும் கட்டுப்படுத்தும். சினைப்பை நீர்க்கட்டி (PCOS) பாதிப்பு கொண்ட 54 பெண்களிடம் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. அவர்களில் அதிக எடை கொண்டவர்களுக்கு நாள்தோறும் 40 முதல் 50 கிராமும் மிக அதிகமான எடை கொண்டவர்களுக்கு நாள்தோறும் 50 முதல் 60 கிராமும் பச்சையான வெங்காயம் கொடுக்கப்பட்டது. எட்டு வாரம் தொடர்ந்த இந்த ஆய்வின் முடிவில் எல்டிஎல் என்னும் கெட்ட கொலஸ்ட்ரால் குறைந்திருந்தது தெரிய வந்தது.

பொதுவாகக் கவனிக்க வேண்டியவை : வெங்காயத்தை நறுக்கி நாள்கணக்கில் வைத்திருக்கக்கூடாது. பாதி வெங்காயத்தை பிளாஸ்டிக் பையில் சுற்றி, குளிர் சாதனை பெட்டியில் வைத்து மீண்டும் உபயோகப்படுத்தக் கூடாது.

Advertisement
மேலும் செய்திகள்
how-to-check-oxygen-concentration-if-doubted-as-covid-19-infected-and-ways-to-fight-with-covid-19
கோவிட்-19: ஆக்ஸிஜன் அளவை சோதிப்பது எப்படி?
what-are-the-benefits-in-adding-ghee-in-rice
தினமும் சாப்பாட்டில் நெய் கலந்து கொள்வதால் என்ன நன்மைகள்? வாங்க பார்க்கலாம்..
foods-that-help-to-boost-immunity-to-fight-against-infections-and-cold-full-of-vitamin-c
கொரோனா பரவல்: இயற்கையாக நோய் எதிர்ப்பு ஆற்றலை தரும் உணவுகள்
penugreek-tea-to-keep-lung-healthy-and-to-help-fight-against-infection-in-pandemic-season
கொரோனா காலம்: நுரையீரலுக்கு ஆரோக்கியம் தரும் மூலிகை டீ
herbs-that-help-to-shed-kilos-and-reduce-waist-cicumference-their-medicinal-benefits-and-methods-to-take-them
கொரோனா ஊரடங்கு: இடுப்புச் சதை குறைய எதை சாப்பிடலாம்?
tricks-make-sure-to-beat-the-heat-with-fennel-vetiver-and-sandalwood-paste
கோடைக்காலத்தில் சரும பாதுகாப்புக்கான இயற்கை முறைகள்
women-can-get-corona-vaccines-even-during-menstruation
மாதவிடாய் காலத்தில் பெண்கள் கொரோனா தடுப்பூசி போடலாமா..? கூடாதா…?
improving-immune-health-help-to-activate-over-300-enzymes-and-aid-to-cell-division-cell-growth
இரத்த ஓட்டத்தை சீராக்கும்... நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும்
the-lentil-that-manage-symptoms-of-diabetes-helping-for-weight-loss-could-prevent-from-heat-stroke-and-beneficial-for-pregnant-women
ஹீட் ஸ்ட்ரோக்கிலிருந்து பாதுகாக்கும்... சிசுவுக்கு நல்லது...
steaming-for-coron-treatment-what-are-the-things-you-should-not-forget
கொரோனா: நீராவி பிடிப்பது எவ்விதம் பயன் தரும்?

READ MORE ABOUT :

/body>