காரட்டும் இரண்டாம் உலகப் போரும்

Advertisement

'காரட்' பார்க்கவே அழகாக இருக்கும். 'காரட் கண்ணுக்கு நல்லது' என்று சிறுவயது முதல் நாம் கேட்டு வந்திருக்கிறோம். 'காரட் கண்ணுக்கு நல்லதுதான். ஆம், கண்ணின் தசைகளுக்கு நல்லது. காரட் அதிகமாகச் சாப்பிடுவது கண் பார்வை பெரிய அளவில் நன்மை பயப்பதில்லை' என்று சமையல் வல்லுநர் குணால் கபூர் கருத்து தெரிவித்துள்ளார்.இரண்டாம் உலகப் போரின் போது பிரிட்டனின் விமானப் படையினர், நாஸி படையினர் ஆக்கிரமித்த ஜெர்மனி பகுதிகளின் மீது நள்ளிரவில் குண்டு வீசி தாக்குவதற்கு ஒரு தொழில்நுட்பத்தை உருவாக்கினர். அந்த தொழில் நுட்பத்தை இரகசியமாகக் காப்பதற்காகக் காரட்டை அதிகமாகச் சாப்பிட்டதால் தங்கள் படை வீரர்களுக்கு இரவில் துல்லியமாகக் கண் தெரிவதாகப் பரப்பினர். அதுவே நிலைத்து விட்டது என்றும் குணால் கபூர் கூறியுள்ளார்.

சத்துகள் நிறைந்த காரட்

காரட்டில் வைட்டமின்கள் ஏ, பி1, பி2, பி3 ஆகியவையும், நியாஸின், ஃபோலேட், பாந்தோதெனிக் அமிலம், சுண்ணாம்புச் சத்து (கால்சியம்), பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் செலினியம் ஆகிய சத்துகளும் உள்ளன. காரட், நார்ச்சத்து நிறைந்தது. பீட்டா கரோட்டினும் இதில் உள்ளது. ஆகவே கண்களுக்கு நன்மை தருவதோடு, நோயெதிர்ப்பு ஆற்றலையும் அதிகரிக்கிறது. உடலிலிருந்து நச்சுத்தன்மையை நீக்குகிறது.

சூப்பர் ஃபுட்

காரட், குழந்தை செல்வத்தைத் தரக்கூடிய சூப்பர் உணவு என்று கூறப்படுகிறது. விந்தணுவின் அளவையும் தரத்தையும் காரட் அதிகரிக்கும்.

மாறாத இளமை

இளமையாக இருப்பதே அனைவருக்கும் பிரியம். வயதான தோற்றத்தை மறைக்கப் பலவிதங்களில் முயற்சி செய்கிறோம். காரட்டில் முதுமையைத் தடுப்பதற்கான தன்மை உள்ளது. அதில் உள்ள பீட்டா கரோட்டின் என்னும் ஆன்ட்டிஆக்ஸிடெண்ட் (ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்) உடலில் வெளிப்படும் ஃப்ரீ ராடிகல்ஸ்களுக்கு (நிலையற்ற மூலக்கூறுகள்) எதிராகச் செயல்பட்டு இளமையைத் தக்க வைக்க உதவுகிறது.

வனப்பு தரும் காரட்

காரட், அழகான தோற்றம் கொண்டது மட்டுமல்ல. அதைச் சாப்பிடுகிறவர்களுக்கும் அழகைத் தருகிறது. காரட்டில் உள்ள ஆன்ட்டிஆக்ஸிடெண்டுகள் மற்றும் வைட்டமின் ஏ, இவையிரண்டும் சருமத்திற்கு ஆரோக்கியம் அளிக்கின்றன; கூந்தலுக்கு வனப்பைத் தருகின்றன; நகங்களுக்கு அழகான தோற்றத்தை அளிக்கின்றன.

இருதய ஆரோக்கியம்

பீட்டா கரோட்டின், ஆல்பா கரோட்டின் மற்றும் லூட்டின் ஆகியவை கொலஸ்ட்ராலுக்கு எதிராகச் செயல்படக்கூடியவை. காரட்டில் நார்ச்சத்தும் அதிக அளவில் உள்ளது. ஆகவே அது கெட்ட கொலஸ்ட்ராலை அகற்றுகிறது. கெட்ட கொலஸ்ட்ராலை அகற்றுவதன் மூலம் காரட், இருதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது.

பற்களுக்குப் பலம்

காரட் சாப்பிடுவது பற்களில் படியும் காரைகளை அகற்றுகிறது. காரட்டை கடிக்கும்போது உமிழ்நீர் அதிகம் உற்பத்தியாகிறது. அது வாயில் அமிலத்தன்மையைச் சமநிலையாக்குகிறது; பற்சிதைவை உண்டாக்கும் நுண்ணுயிரிகளை எதிர்த்துச் செயலாற்றுகிறது.

நச்சுத்தன்மையை நீக்கும் ஏபிசி பானம்

பீட்ரூட் சிறியது 1, ஆப்பிள் சிறியது 1, காரட் சிறியது 1, 5 முதல் 10 புதினா இலைகள் இவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். பீட்ரூட், ஆப்பிள் மற்றும் காரட்டை மேல் தோலை மட்டும் சீவி, துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். வெட்டிய துண்டுகளை ஒரு லிட்டர் தண்ணீரில் போட வேண்டும். இரவு முழுவதும் ஊற விட்டு, காலையில் அந்த தண்ணீரில் இரண்டு தம்ளர் அளவு அருந்தவும். மீதி தண்ணீரை அவ்வப்போது அருந்தலாம். இவற்றின் ஆங்கில பெயர்களின் முதலெழுத்துக்களைக் கொண்டு இது ABC பானம் (Apple, Beetroot & Carrot) என்று அழைக்கப்படுகிறது. இது உடலில் ஈரல், சிறுநீரகங்கள், சிறுகுடல் மற்றும் சருமத்திலுள்ள நச்சுப்பொருள்களை வெளியேற்றி அவற்றை ஆரோக்கியமாக்குகிறது; இவற்றின் செயல்பாட்டை தூண்டுகிறது.

காரட்டைக் கழுவுவது எப்படி?

முதலில் காரட்டுகளை 10 முதல் 15 நிமிடங்கள் வரை நீரில் ஊற வைக்கவும். பின்னர் அவற்றைத் துடைத்துவிட்டு மேலே உள்ள மெல்லிய தோலை மட்டும் கத்தியால் சுரண்டவும். பின்னர் காரட்டின் தலை மற்றும் அடிப்பகுதியை நீக்கவும். அதன் பின்னர் காரட்டை பயன்படுத்தலாம். காரட்டின் மேல் தோலில் நுண் கிருமிகள் இருக்கும்; உரங்களின் மிச்சங்களும் இருக்கக்கூடும். ஆகவே, கழுவி மேல்தோலை சீவி பயன்படுத்துவது நல்லது.

காரட்டைப் பாதுகாப்பது எப்படி?
காரட்டுகளை இரண்டு முறை நீரில் கழுவ வேண்டும். பிறகு பிளாஸ்டிக் பெட்டியில் நீர் நிரப்ப வேண்டும். நிரப்பப்பட்ட நீருள் மூழ்குமாறு காரட்டுகளை வைக்கவேண்டும். பின்னர் பிளாஸ்டிக் பெட்டியை மூடி குளிர்சாதனப் பெட்டிக்குள் வைக்கலாம். இரண்டு நாள்களுக்கு ஒருமுறை காரட் இருக்கும் பிளாஸ்டிக் பெட்டியிலுள்ள நீரை மாற்ற வேண்டும். அப்போது எட்டு முதல் பத்து நாள்களுக்கு காரட் நன்றாக இருக்கும்.

Advertisement
மேலும் செய்திகள்
how-to-check-oxygen-concentration-if-doubted-as-covid-19-infected-and-ways-to-fight-with-covid-19
கோவிட்-19: ஆக்ஸிஜன் அளவை சோதிப்பது எப்படி?
what-are-the-benefits-in-adding-ghee-in-rice
தினமும் சாப்பாட்டில் நெய் கலந்து கொள்வதால் என்ன நன்மைகள்? வாங்க பார்க்கலாம்..
foods-that-help-to-boost-immunity-to-fight-against-infections-and-cold-full-of-vitamin-c
கொரோனா பரவல்: இயற்கையாக நோய் எதிர்ப்பு ஆற்றலை தரும் உணவுகள்
penugreek-tea-to-keep-lung-healthy-and-to-help-fight-against-infection-in-pandemic-season
கொரோனா காலம்: நுரையீரலுக்கு ஆரோக்கியம் தரும் மூலிகை டீ
herbs-that-help-to-shed-kilos-and-reduce-waist-cicumference-their-medicinal-benefits-and-methods-to-take-them
கொரோனா ஊரடங்கு: இடுப்புச் சதை குறைய எதை சாப்பிடலாம்?
tricks-make-sure-to-beat-the-heat-with-fennel-vetiver-and-sandalwood-paste
கோடைக்காலத்தில் சரும பாதுகாப்புக்கான இயற்கை முறைகள்
women-can-get-corona-vaccines-even-during-menstruation
மாதவிடாய் காலத்தில் பெண்கள் கொரோனா தடுப்பூசி போடலாமா..? கூடாதா…?
improving-immune-health-help-to-activate-over-300-enzymes-and-aid-to-cell-division-cell-growth
இரத்த ஓட்டத்தை சீராக்கும்... நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும்
the-lentil-that-manage-symptoms-of-diabetes-helping-for-weight-loss-could-prevent-from-heat-stroke-and-beneficial-for-pregnant-women
ஹீட் ஸ்ட்ரோக்கிலிருந்து பாதுகாக்கும்... சிசுவுக்கு நல்லது...
steaming-for-coron-treatment-what-are-the-things-you-should-not-forget
கொரோனா: நீராவி பிடிப்பது எவ்விதம் பயன் தரும்?

READ MORE ABOUT :

/body>