உயர் இரத்த அழுத்தத்திற்கான தீர்வு ...

Remedy for high blood pressure ...

by SAM ASIR, Sep 5, 2020, 18:18 PM IST

எலுமிச்சை என்றால் உடனடியாக நமக்கு ஊறுகாய்தான் நினைவுக்கு வரும். ஊறுகாய் சாப்பிடுவதற்கு விருப்பமானதுதான். ஆனால், உடல் நலத்திற்கு ஏற்றதல்ல. ஊறுகாய் தவிர, வேறு எத்தனையோ நற்பலன்களை கொண்டது எலுமிச்சை. எல்லா இடங்களிலும் குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய எலுமிச்சையில் உள்ள சத்துகள் உண்மையில் வியப்பளிக்கக்கூடியவை.

சத்துகள்

வைட்டமின்கள் சி, பி6, ஏ, இ, ஃபோலேட், நியாசின், தையமின், ரிபோஃபிளேவின், கால்சியம் (சுண்ணாம்பு சத்து), இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், ஸிங்க் (துத்தநாகம்), பாஸ்பரஸ் மற்றும் புரதம். ஆன்ட்டிஆக்ஸிடெண்டுகளை உடைய ஃப்ளேவனாய்டுகளும், புற்றுநோயை எதிர்க்கக்கூடிய பண்புகளும் உண்டு. நீரிழிவு மற்றும் காய்ச்சல் ஆகிய உடல்நல குறைபாடுகளை தடுக்கும் ஆற்றல் உண்டு.

சளி, இருமல், தொண்டை வலி

தொண்டையில் ஏற்படக்கூடிய தொற்றுக்கு எலுமிச்சை பழங்காலம் முதல் மருந்தாக பயன்படுகிறது. சுவாச பிரச்னை, ஆஸ்துமா ஆகியவற்றிலிருந்து எலுமிச்சை சாறு நிவாரணம் அளிக்கும். எலுமிச்சையிலுள்ள வைட்டமின் சி, உடலின் நோய் தடுப்பாற்றலை அதிகரிக்கிறது. சளி பிடித்தால் தேநீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து நாளொன்றுக்கு நான்கு முறை அருந்தலாம்.

மலச்சிக்கல்

வயிற்றில் ஜீரண அமிலங்கள் சரியாக சுரக்காததினால் உண்டாகும் அஜீரணம் பொதுவான உடல்நல குறைபாடாகும். வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சையை பிழிந்து காலையில் வெறும் வயிற்றில் அருந்தவேண்டும். இனிப்பு வேண்டுமானால் தேன் சேர்த்துக் கொள்ளலாம்.காலையுணவுக்கு அரை மணி முதல் ஒரு மணி நேரம் முன்பு அல்லது காலையுணவுக்கு பின்னர் எலுமிச்சை நீரை பருகினால் உப்பிசம் போன்ற வயிற்று உபாதைகள் நீங்கும். தினமும் எலுமிச்சை சாறு அருந்தினால் உணவு குழல் நன்றாக சுத்தமாகும். வயிற்றில் அசுத்தம் சேருவதால் ஏற்படக்கூடிய நோய்கள் தடுக்கப்படும்.

இரத்த அழுத்தம்

தினமும் வைட்டமின் சி சத்து சேர்த்தால் இரத்த அழுத்தம் குறையும். நம் உடலிலுள்ள நைட்ரிக் அமிலம் இரத்த நாளங்களைத் தளர்த்தி இரத்த ஓட்டத்தைச் சீராக்கும். வைட்டமின் சி சத்து, நைட்ரிக் அமில அளவை குறையாமல் காத்து, இயல்பான செயல்பாட்டை உறுதி செய்கிறது.

எலுமிச்சையில் உள்ள பொட்டாசியம், சோடியத்துடன் இணைந்து இரத்த அழுத்தத்தைச் சீராக்குகிறது என்பதை பல்வேறு ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. பொட்டாசியம் சேர்ப்பது இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். மன அழுத்தத்தையும் மனச்சோர்வையும் நீக்கும்.

உடல் எடை

எலுமிச்சை சாறு சேர்ந்த தண்ணீரைத் தினமும் அருந்தி வந்தால் குடல் சுத்தமாகும். இதில் கலோரி இல்லாததால் உடலுக்குத் தீங்கு செய்யாது. குடலிலுள்ள அசுத்தங்களை எலுமிச்சை சாறு சேர்ந்த தண்ணீர் வெளியேற்றும். எலுமிச்சையிலுள்ள பெக்டின் என்னும் நார்ச்சத்து அதிக பசியையும் குறைக்கும். இதன் காரணமாக உடல் எடை குறையும்.

சரும பொலிவு

நம் உடலில் எலுமிச்சை சாற்றைப் பூசினால் அதின் மருத்துவ பண்பு காரணமாகச் சரும பிரச்சனைகள் மறையும். சுருக்கம், வெயில் கொப்புளங்கள் ஆகியவை சரியாகும். தலையிலுள்ள பொடுகு மற்றும் முடி உதிர்தல் ஆகிய பிரச்சனைகளுக்கு எலுமிச்சை காலங்காலமாக மருந்தாகப் பயன்பட்டு வருகிறது.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

More Health News

அதிகம் படித்தவை