அதிகாலையின் டானிக்..கேரட் ஜூசுடன் இஞ்சி சாறு கலந்து குடிச்சா என்ன ஆகும்..?

Mar 21, 2018, 13:53 PM IST

அதிகாலையில் கேரட் ஜூஸ் உடன் இஞ்சி சாறு கலந்து குடிப்பதனால் உடலில் பல மாற்றங்கள் ஏற்பட்டு நமக்கு சுறுசுறுப்பை ஏற்படுத்துகிறது. இதுப்போல் பல நன்மைகள் உண்டு. அப்படி என்ன நன்மைகள் இருக்கு என்று பார்ப்போமா..

கண் பிரச்சனை இருந்தால், கேரட் ஜூஸில் இஞ்சி சாறு கலந்து குடியுங்கள். இதனால் அந்த பானம் கண்களில் உள்ள நரம்புகளுக்கு ஊட்டமளித்து, வலிமைப்படுத்தி, பார்வையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

கேரட் இஞ்சி ஜூஸில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பைட்டோ-நியூட்ரியண்ட்டுகள் உள்ளது. இவை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, அபாயகரமான புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும்.

கேரட் மற்றும் இஞ்சியில், ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள் உள்ளது. இவை தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களை அழித்து, நோய்களிடமிருந்து பாதுகாத்து, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.
இந்த இயற்கை பானம், வயிற்றில் உள்ள அமிலத்தை நிலைப்படுத்தி, குமட்டல் மற்றும் வாந்தி உணர்வைக் குறைக்கும்.

கேரட் மற்றும் இஞ்சியில் நோயெதிர்ப்பு அழற்சி பண்புகள் ஏராளமாக உள்ளது. இவற்றைக் கொண்டு ஜூஸ் தயாரித்துக் குடித்தால், தசைகளில் இருக்கும் உட்காயங்கள் மற்றும் அதனால் ஏற்படும் வலிகள் குறையும்.
கேரட் மற்றும் இஞ்சி ஜூஸ் இதயத்தில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, இதயத்தின் ஆரோக்கியத்தை அதிகரித்து, இதய நோய்கள் வராமல் தடுக்கும்.

கேரட் இஞ்சி ஜூஸ், ஈறுகள் மற்றும் பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். மேலும் இது வாயில் எச்சிலின் உற்பத்தியைத் தூண்டி, வாய் வறட்சியடைவதைத் தடுத்து, வாய் துர்நாற்றம் ஏற்படாமலும் பார்த்துக் கொள்ளும்.

You'r reading அதிகாலையின் டானிக்..கேரட் ஜூசுடன் இஞ்சி சாறு கலந்து குடிச்சா என்ன ஆகும்..? Originally posted on The Subeditor Tamil

More Health News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை