மழை காலத்தில் நோய் எதுவும் வராமல் இருக்க இதை தினமும் குடியுங்கள்...! நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்..

In rainy reason how to avoid virus

by Logeswari, Oct 24, 2020, 19:23 PM IST

ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் கொரோனாவின் தாக்கம் மழை காலத்தில் தான் அதிகமாக இருக்கும் என்று கூறியுள்ளனர். இதனால் நாம் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மழை காலமும் தொடங்கிவிட்டது இதனால் பல விதமான நோய்கள் நம்மை தீண்ட வரிசையில் காத்து கொண்டு இருக்கோம். இதனை அழிக்க ஒரே ஒரு வழி தான் உள்ளது. அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட பொருள்களான ஒன்பது பொருள்களை காலையில் குடிக்கும் டீயில் கலந்து குடித்தால் எந்த நோயும் நம்மை நெருங்காது.. அப்படிபட்ட அற்புதமான 9 பொருள் எவை என்பதை பார்ப்போமா..

தேவையான பொருள்:-

இஞ்சி - 1 கப்
கிராம்பு, பட்டை - 10
அன்னாசிப்பூ -5
ஏலக்காய் - 5 கிராம்
துளசி - ஒரு கைப்பிடி
மிளகு - 5 கிராம்
அதிமதுரம் - 2 ஸ்பூன் அளவு
அஸ்வகந்தா - 1/4 ஸ்பூன்

செய்முறை:-
இஞ்சியை தோல் சீவி தண்ணீரில் நன்றாக அலசி கொண்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பிறகு அதை வெயிலில் தண்ணீர் உலரும் வரை காய வைக்கவும்.துளசியை தண்ணீரில் அலசி அதையும் நன்றாக வெயிலில் உலர விட வேண்டும்.

பின்னர் அடுப்பில் வாணலியை வைத்து அதில் மிளகு மற்றும் ஏலக்காயை வறுத்து கொள்ளவும்.அடுத்து அதில் வெயிலில் உலர்ந்த இஞ்சி, பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ ஆகிவற்றை சேர்த்து வறுக்க வேண்டும்.

வறுத்த கலவையை ஆறவைத்து மிக்சியில் பொடியாக அரைத்து கொள்ள வேண்டும். பிறகு அரைத்த பொடியில் அதிமதுரம் மற்றும் அஸ்வகந்தா பொடியை நன்றாக கலந்து கொள்ள வேண்டும்..

இதை தினமும் காலையில் குடிக்கும் தேநீரில் கலந்து குடிக்க வேண்டும். இவ்வாறு குடிப்பதால் உடலுக்கு எந்த வித நோயும் அண்டாது. குழந்தைகளுக்கு தினமும் இந்த பொடியை தேனில் குழைத்து குடுக்கலாம்..

இதனை சாப்பிடுவதால் தொண்டை எரிச்சல், சளி ஆகியவைக்கும் விடிவு காலம் பொறக்கும்.. இதனின் வாசனையே ஆள தூக்கும்..

You'r reading மழை காலத்தில் நோய் எதுவும் வராமல் இருக்க இதை தினமும் குடியுங்கள்...! நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.. Originally posted on The Subeditor Tamil

More Health News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை