மக்களே உஷார்!! கொரோனாவை அடுத்து சீனாவை மிரட்டும் புதிய வைரஸ்..

by Logeswari, Oct 28, 2020, 12:11 PM IST

கடந்த வருடம் இறுதியில் தொடங்கிய கொரோனா நோய் இன்னும் குறைந்த பாடில்லை. நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது.இந்த வைரசால் சீனாவைச் சேர்ந்த பல லட்சக்கணக்கான மக்களின் உயிர்கள் பறிபோகியுள்ளது. சீனா உயிர் ரீதியாக மட்டும் இல்லாமல் பொருளாதார வகையிலும் பெரும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளனர். இந்த இழப்பில் இருந்து மீள சீனாவிற்கு அதிக கால அவகாசம் தேவையானது. இந்நிலையில் மற்றொரு புதிய வைரஸ் சீனாவை நோக்கி அடியெடுத்து வைத்துள்ளது. கொரோனாவின் தாக்கத்தில் இருந்தே இன்னும் மீளாத சீன மக்கள் புதிய வைரஸ் பரவுவதால் மிகவும் அச்சத்தில் வாழ்ந்து வருகிறார்கள்.

சீனாவில் பரவும் புதிய நோயிக்கு "புபோனிக் பிளேக்" என்ற பெயரை வைத்துள்ளனர். சீனாவைச் சேர்ந்த மங்கோலியாவில் 4 பேர் பிளேக் நோயால் பாதித்துள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது மற்றவர்களுக்குப் பரவாமல் இருக்க நான்கு பேரையும் தனியாக வைத்து சிகிச்சை கொடுக்கின்றனர். மக்கள் பாதுகாப்பாக இருக்க மங்கோலியாவில் 3ஆம் கட்ட எச்சரிக்கையை விடுத்துள்ளனர். இதுவும் கொரோனா நோய் போல பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆய்வார்கள் ஆராய்ச்சியில் கூறியுள்ளனர்.

இந்த புதிய வகை வைரஸ் மரமூட் என்ற வகையைச் சேர்ந்த அணில் தனது உணவுக்காக எலி போன்ற விலங்குகளைச் சாப்பிடுவதால் பிளேக் வைரஸ் பரவுவதாகக் கூறிவருகின்றனர். இது மேலும் மக்களுக்குப் பரவாமல் இருக்கச் சீன அரசாங்கம் பல வித முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. கொரோனாவை ஒப்பிடும் போது புபோனிக் பிளேக் என்ற வைரஸ் மிக விரைவில் மக்களுக்குப் பரவக் கூடியது அல்ல. அதனால் மக்கள் அச்சம் படாமல் தைரியமாக இருக்கலாம் என்று விழிப்புணர்வு மூலம் தெரிவித்து வருகின்றனர். புபோனிக் பிளேக் வைரஸ் நுரையீரலைப் பாதித்தால் நிமோனிக் பிளேக்காக மாற அதிக வாய்ப்புள்ளது. இதனால் உயிருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

You'r reading மக்களே உஷார்!! கொரோனாவை அடுத்து சீனாவை மிரட்டும் புதிய வைரஸ்.. Originally posted on The Subeditor Tamil

More Health News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை