பொதுவாக தேங்காயில் கொழுப்பு சத்து அதிகம் இருப்பதால் உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டாம் என்று கூறுவார்கள். ஆனால் சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்றில், தேங்காய் கெட்ட கொழுப்புகளை குறைத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது என்று தெரிவித்துள்ளது. சரி, தேங்காயில் உள்ள சத்துக்கள் குறித்து கீழே பார்ப்போம்..
தேங்காயில் உள்ள பேட்டி ஆசிட் உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது. உடல் எடையைக் குறைக்கிறது என்று சமீபத்திய ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
தாய்ப்பாலில் உள்ள புரதச் சத்துக்கு இணையானது.
இளநீரில் உள்ள புரதச் சத்து, தேங்காயில் உள்ள புரதச் சத்து, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளது.
தேங்காய்ப் பால் உடல் வலிமைக்கு நல்லது. தேங்காய்ப் பாலில் காரத்தன்மை உள்ளதால், அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்றுப் புண்களுக்கு குணமாகும். தேங்காயில் உள்ள லாரிக் ஆசிட் மற்றும் காப்ரிக் ஆசிட் ஆகியவை வைரஸ் மற்றும் பாக்டீரியல் நுண்கிருமிகளை எதிர்க்கும் திறன் கொண்டதாக உள்ளது.
முற்றிய தேங்காய் ஆண்மைப் பெருக்கியாகப் பயன்படுகிறது. அதில் வைட்டமின் இ முதுமையைத் தடுக்கிறது. தைராய்டு சுரப்பின் செயல்பாட்டை ஊக்கப்படுத்துகிறது. தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் போது கிடைக்கும் புண்ணாக்குடன் கருஞ்சீரகத்தையும் சேர்த்து தோல் நோய்களுக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.
குழந்தைகளுக்கு தேவையான எல்லா சத்துக்களும் தேங்காய் பாலில் உள்ளன. தேங்காய் பாலில் கசகசா, பால் தேன், கலந்து சாப்பிட்டால் வறட்டு இருமல் மட்டுப்படும்.