என்ன செய்தாலும் வயிற்று சதை குறையவில்லை? இவற்றை ட்ரை பண்ணி பாருங்க!

by SAM ASIR, Nov 16, 2020, 20:53 PM IST

அதிக சிரமமான வேலை என்ன என்று கேட்டால், "தொப்பையை குறைப்பது" என்று பலர் கூறுகின்றனர். அதிக பொறுமை தேவைப்படும் வேலை என்ன என்று கேட்டாலும், "தொப்பையை குறைப்பது" என்று சிலர் கூறுகின்றனர். ஆம், வயிற்று பகுதியில் சதை அதிகமாகிவிட்டால் அதைக் குறைப்பது என்பது மிகவும் கடினமாகிவிடுகிறது. பலர் பல்வேறு முயற்சிகளை செய்து பலனில்லாமல் சலித்துப் போகின்றனர். வயிற்றுப் பகுதியை 'சிக்'கென்று மாற்றுவதற்கு நீங்கள் என்னென்ன பயிற்சிகளை செய்கிறீர்களோ அதை தொடருங்கள். அவற்றுடன் இந்த எளிய முயற்சிகளையும் சேர்த்து செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.

எலுமிச்சை நீர்

காலையில் எழுந்ததும் காஃபி அல்லது டீ அருந்துவதே பலருக்கு பழக்கம். ஒரு கப் காஃபி குடித்தால் கிடைக்கும் புத்துணர்ச்சியே தனிதான். ஆனால், நீங்கள் தொப்பையை குறைக்கவேண்டும் என்று விரும்பினால் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை கலந்து பருகவேண்டும். எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. அதில் ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்கள் (ஆன்ட்டிஆக்ஸிடெண்டுகள்) உள்ளன. எலுமிச்சை நீர் செரிமானத்தை தூண்டுவதுடன், உடலிலுள்ள நச்சுப்பொருள்களை அகற்றுகிறது; அதிகப்படியான கொழுப்பினை எரிப்பதற்கு உதவுகிறது. எலுமிச்சை சாற்றை மட்டும் அருந்த சிரமமாக இருந்தால் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துக்கொள்ளலாம்.

சீரக நீர்

உடலிலுள்ள அதிகப்படியான கொழுப்பை கரைக்கக்கூடிய இன்னொரு நீர், சீரகம் கலந்த நீராகும். அது செரிமானத்தை தூண்டுவதுடன் அடிவயிற்று சதையை கரைக்கவும் உதவுகிறது. ஆகவே, எலுமிச்சை சாற்றுக்கு பதிலாக சீரக நீரையும் காலையில் பருகலாம்.

புரதம்
உடலுக்குத் தேவையான முக்கிய ஆற்றல் மூலம் புரதம் என்னும் புரோட்டீனாகும். காலை உணவுடன் புரதம் சேர்த்துக்கொள்வது தசைகளுக்கு உதவும். காலையில் அதிக புரதமுள்ள உணவுகளை சாப்பிட்டால் வயிறு நிறைந்திருக்கும் உணர்வு இருக்கும். ஆகவே, தேவையற்றவற்றை சாப்பிட மாட்டோம். நாம் உட்கொள்ளும் எரிசக்தி (கலோரி)யின் அளவும் குறையும். புரதத்திற்கு இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சரியாக பேணும் இயல்பு உண்டு. கொழுப்பை சேகரித்து வைப்பதற்கு தூண்டும் இன்சுலின் என்னும் ஹார்மோனின் அளவையும் புரதம் குறைக்கும். ஆகவே, கொழுப்பு உடலில் சேர்வது தடுக்கப்படும். முட்டை, பால், மீன் போன்றவற்றில் புரதம் அதிகம் உள்ளது.

முழு தானியம்
அரவை இயந்திரத்தில் அரைக்கப்படாத, தீட்டப்படாத தானியங்களில் அதிக அளவு நார்ச்சத்து இருக்கும். அரிசி போன்றவை தீட்டப்படுவதால் அதில் கார்போஹைடிரேட் அதிக அளவில் உள்ளது. தீட்டப்படாத தானியங்களில் சமைக்கப்பட்ட உணவுகளை சாப்பிட்டால் நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்து உடலில் சேரும். இதை சாப்பிட்டாலும் வயிறு நிறைவாக உணர முடியும். அதிக நார்ச்சத்து உணவை தொடர்ந்து சாப்பிட்டால் உடல் எடை குறையும்; வயிற்று சதையும் கரையும்.

மஞ்சள் தூள்
உடல் பருமன் என்பது உடலில் ஏற்படும் ஒருவித அழற்சியின் விளைவுதான். இஞ்சி குடும்பத்தை சேர்ந்த மஞ்சளை உணவில் சேர்ப்பது உடல் பருமன் மற்றும் அழற்சியை குறைக்க உதவும். உடல் எடையை குறைப்பதற்கு நீங்கள் கடைபிடிக்கும் உணவு வழக்கத்தில் மஞ்சளையும் சேர்த்துக் கொள்ளுங்கள். நல்ல பலன் கிடைக்கும்.

மன அழுத்தத்தை குறைக்கும் தியானம்
மன அழுத்தம் மற்றும் மனக்கலக்கம் இவை கொழுப்பை கூட்டும் ஹார்மோனான கொரிஸ்டாலை அதிகரிக்கின்றன. உடலில் கொரிஸ்டால் ஹார்மோன் தொடர்ந்து அதிக அளவில் இருந்தால் அதிகமாக பசியை தூண்டும். அதிக பசியின் காரணமாக அதிக எரிசக்தி (கலோரி) அடங்கிய உணவு பொருள்களை சாப்பிடுகிறோம்; உடல் எடை கூடுகிறது; தொப்பை விழுகிறது. யோகாசனம், தியானம் போன்ற மன அமைதிக்கான செயல்பாடுகளில் ஈடுபட்டால் கொரிஸ்டால் கூடாது.

அதிகமான நீர்
உடல் எடையை சார்ந்த தொல்லைகளை அகற்றும் பண்பு தண்ணீருக்கு உண்டு. எப்போதும் நீர்ச்சத்து உடலில் இருந்தால், அளவுக்கு அதிகமான பசி தோன்றாது. அதிக பசி இல்லையென்றால் ஆரோக்கியமற்ற உணவு பொருள்களை சாப்பிடமாட்டோம். உணவு சாப்பிடும் முன்னர் தண்ணீர் அருந்துவது அதிகமாக சாப்பிடுவதை தடுக்க உதவும்; தொப்பையை குறைக்கும்.

More Health News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை