பொதுவாக சிலர் அழகாக இருப்பார்கள், ஆனால் அவர்களுடைய பற்களில் கறை படிந்து இருந்தால் மற்றவர்களுடன் பேசுவதற்கு தயங்குவார்கள். பிறரிடம் சாதாரணமாகப் பேசுவதைக் கூட தவிர்த்து விடுவார்கள். இப்பொழுது பற்களில் உள்ள கறையைப் போக்குவதற்கான சில வழிமுறைகள் பற்றிப் பார்ப்போம்.
ஒரு கைபிடியளவு ஸ்ட்ராபெர்ரியை எடுத்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். தினந்தோறும் காலையில் பல் துலக்கியவுடன், அரைத்து வைத்த ஸ்ட்ராபெர்ரியில் சிறிதளவு எடுத்து லேசாக தேய்த்து வாய் கொப்பளியுங்கள். இவ்வாறு 10 நாட்களுக்கு செய்தால் பற்களில் உள்ள கறையை எளிதாக நீக்கலாம்.
இரவு படுப்பதற்கு முன் ஆரஞ்சு பழத்தோலைக் கொண்டு பற்களை நன்றாக தேய்க்க வேண்டும். இதனை தேய்த்தப்பிறகு வேறு எதையும் சாப்பிடவோ, குடிக்கவோ கூடாது. மறுநாள் காலை எழுந்து வாயை கொப்பளிக்கலாம். இரவு முழுவதும் பற்களில் படர்ந்திருப்பதால் ஆரஞ்சு பழத்தோல் கறையை போக்குவதுடன் கிருமிகளையும் அழித்து, பற்களுக்கு பாதுகாப்பளிக்கிறது.
தினந்தோறும் பற்களை கற்றாழை ஜெல் கொண்டு தேய்ப்பதன் மூலமும் பற்களில் உள்ள கறையைப் போக்கலாம். மேலும் கற்றாழையானது வாய் துர்நாற்றத்தைப் போக்கக்கூடியது.
1 டீஸ்பூன் கிராம்பு பொடியுடன், 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் கலந்து, கறைபடிந்த பற்களில் தேய்த்து, சிறிது நேரத்திற்குப் பின் வெதுவெதுப்பான நீரில் வாயை கொப்பளிப்பதன் மூலமும் சுத்தமான பற்களைப் பெறலாம்.
சீஸ் சாப்பிடுவதால் எச்சிலில் அல்கலைன் அளவு அதிகரித்து பற்களில் கறை படிவது தடுக்கப்படும். மேலும் இவை, பற்களின் மேலே ஓர் படலத்தை உண்டாக்கி பற்களில் கறை படிவதை தடுக்கும். இதனால் உணவு உட்கொண்ட பிறகு சிறிதளவு சீஸ் எடுத்து வாயில் போட்டுக் கொள்ளுங்கள்.
பற்களை சுத்தமாக்குவதிலும், ஈறுகளுக்கு ஆரோக்கியம் அளிப்பதிலும் ஆப்பிளின் பங்கு சிறந்தது. எனவே உணவை சாப்பிட்டு முடித்த ஒரு மணி நேரம் கழித்து ஆப்பிள் ஒரு துண்டு எடுத்து சாப்பிடுங்கள். இதனை தொடர்ந்து செய்வதன் மூலம் பற்களில் கறை படிவதைத் தடுக்கலாம்.
பற்களில் உள்ள கறையைப் போக்க கொய்யாப்பழம் மற்றும் கொய்யா இலைகள் மிகச் சிறந்தது. கொய்யா இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து, அந்த நீரைக் கொண்டு வாயை கொப்பளித்து வந்தாலும் அல்லது தினந்தோறும் ஒரு கொய்யாப்பழத்தைச் சாப்பிடுவதன் மூலமும் பற்களில் உள்ள கறையைப் போக்க முடியும். மேலும், கொய்யாப்பழம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
இந்த வழிமுறைகளைப் பயன்படுத்தி வெண்மையான மற்றும் ஆரோக்கியமான பற்களைப் பெற்றிடுங்கள்..