பற்களுக்குப் பாதுகாப்பு வாய் துர்நாற்றம் அகலும்: ஆயில் புல்லிங் தரும் நன்மை

by SAM ASIR, Jan 16, 2021, 19:57 PM IST

உணவுகள் நம் வாய் வழியாகவே வயிற்றினுள் செல்கின்றன. வாயை சுத்தமாக வைத்துக்கொண்டால் உடல் ஆரோக்கியத்தின் பெரும்பங்கு நிறைவேறிவிடும். தினமும் காலையில் 15 நிமிடம் செலவழித்தால் வாயை மிகவும் தூய்மையாக பராமரிக்கலாம். வாயினுள் இருக்கும் தீமை செய்யும் கிருமிகளை ஒட்டுமொத்தமாக வெளியேற்றும் வழிதான் ஆயில் புல்லிங்.

எப்போது செய்ய வேண்டும்?

காலையில் எழும்பியதும் வாயை சுத்தம் செய்யவேண்டும் என்ற உணர்வு ஏற்படும். வழக்கமாக நீங்கள் பல் விளக்கி அல்லது மவுத் வாஷ் பயன்படுத்தி சுத்தம் செய்திருப்பீர்கள். அதற்குப் பதிலாக ஆயில் புல்லிங் செய்ய வேண்டும்.

ஆயில் புல்லிங் செய்வது எப்படி?

சுத்தமான தேங்காயெண்ணெய் அல்லது நல்லெண்ணெய் பயன்படுத்தி ஆயில் புல்லிங் செய்யவேண்டும். 10 மில்லி லிட்டர் தேங்காயெண்ணெய் அல்லது நல்லெண்ணெய் எடுத்து, பல் விளக்கும் முன்பு, தண்ணீர் பருகுவதற்கு முன்பு வாயினுள் விட்டு 15 முதல் 20 நிமிடங்கள் வாய்க்குள் அதை நன்றாக உதப்பவேண்டும். பற்களுக்குள் சென்று வருவதுபோல், வாயின் எல்லா பக்கங்களும் எண்ணெய்படுவதுபோல் வேகமாக வாய்க்குள் அங்குமிங்கும் எண்ணெயை தள்ளவேண்டும். வாய்க்குள் உதப்பிய எண்ணெயை வாஷ்பேசினுள் துப்பினால் அது அடைத்துக்கொள்ளக்கூடும். ஆகவே, வெளியே வேறு எங்காவது உமிழவேண்டும்.

ஆயில் புல்லிங்கின் பயன்கள்

ஆயில் புல்லிங் செய்தால் பற்களின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். வாயினுள் உள்ள தீமை செய்யும் நுண்ணுயிர்கள் (பாக்டீரியா) அழிக்கப்படுகின்றன. தினமும் ஆயில் புல்லிங் செய்தால் பற்சிதைவு மற்றும் வாய் துர்நாற்றம் தடுக்கப்படும்.

மவுத் வாஷ் - ஆயில் புல்லிங் வேறுபாடு

இப்போது அநேக மவுத் வாஷ் திரவங்கள் கிடைக்கின்றன. அவற்றின் செயல்பாடு தீமை தரும் பாக்டீரியாவை மட்டுமல்ல; வயிற்றிலுள்ள நன்மை செய்யும் பாக்டீரியாவையும் அழித்துவிடும். நல்ல பாக்டீரியாக்கள் அழிந்துவிட்டால் வாய் துர்நாற்றம் மீண்டும் ஏற்படும். ஆகவே, மவுத் வாஷ் திரவத்திற்குப் பதிலாக சுத்தமான தேங்காயெண்ணெய் அல்லது நல்லெண்ணெய் பயன்படுத்தி ஆயில் புல்லிங் செய்வது நல்ல பலன்களை தரும்.

You'r reading பற்களுக்குப் பாதுகாப்பு வாய் துர்நாற்றம் அகலும்: ஆயில் புல்லிங் தரும் நன்மை Originally posted on The Subeditor Tamil

More Health News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை