கண்ணின் கருவளையத்தை போக்கும்... சரும அழகை பராமரிக்கும் அலோவேரா என்னும் கற்றாழை ஜெல்

by SAM ASIR, Jan 20, 2021, 20:11 PM IST

அலோவேரா ஜெல் பரவலாக பேசப்படும் ஒரு பொருளாகும். அது பல்வேறு குணங்களைக் கொண்டதாகையால் அநேகர் அதை பயன்படுத்தி வருகின்றனர். கற்றாழையின் இலை கதுப்பு அல்லது கூழ், ஜெல் என்று அழைக்கப்படுகிறது. இதில் அதிகப்படியான நீர் உள்ளது. வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்கள் என்னும் ஆன்ட்டிஆக்ஸிடெண்டுகள் அதில் உள்ளன.

வறட்சியும் கற்றாழையும்
கற்றாழை வறட்சியான பகுதிகளில் வளரும் ஒரு மருந்துச் செடி ஆகும். பல்வேறு அழகுச் சாதனங்கள் மருந்துப் பொருட்கள் தயாரிப்பதற்கு கற்றாழை பெரிதும் பயன்படுகின்றது. இது ஆப்பிரிக்காவை தாயகமாகக் கொண்டது.

கற்றாழை இலையிலிருந்து எடுக்கப்படும் “ஜெல்” எனப்படும் “கூழ்” சருமத்தின் ஈரத்தன்மையை (Moisture) பாதுகாக்கப்படுகிறது. இதன் தேவைக்கு இயற்கை சூழ்நிலையிலிருந்து கற்றாழைச் செடிகள் சேகரிக்கப்பட்டு பக்குவப்படுத்திய பிறகு மருந்துப் பொருட்களில் பயன்படுத்தப்படுகின்றது. இருப்பினும், தரம் வாய்ந்த கற்றாழைக்கூழ், எடுப்பதற்கு வணிக ரீதியாக பயிர் செய்யப்படுகிறது.

பயன்கள்

கற்றாழையின் இலையிலிருந்து எடுக்கப்படும் “ஜெல்” அதாவது “கூழ்” சருமத்திற்கு பாதுகாப்பதாக கருதப்படுகிறது.. இதனால் வணிக ரீதியாக அதன் “கூழி” உலகெங்கிலும் சரும் லோசன், சவரம் செய்வதற்கான க்ரீம், ஷாம்பூ ஆகியவற்றால் சேர்க்கப்படுகின்றது. கற்றாழையின் மருந்து மகத்துவத்தை கி.பி. 17 ஆம் நூற்றாண்டிலேயே ஆப்பரிக்கர்கள் கண்டறிந்து உலகத்துக்கு அறியப்படுத்தினர். கற்றாழையின் இலையில் அலோயின், 'அலோசோன் போன்ற வேதிப்பொருள்கள் உள்ளன. அலோயின் வேதிப்பொருளின் அளவு நான்கிலிருந்து இருபத்து ஐந்து சதவீதம் வரை கற்றாழை இலையில் காணப்படுகிறது. சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் கற்றாழைச்சாறு, இருமல், சளி, குடல்புண் ஆகியவற்றிற்கு மருந்தாகப் பயன்படுகின்றது. கடும் வயிற்றுப்புண், தோலில் ஏற்படும் தீக்காயம், அரிப்பு வெட்டுக்காயங்கள் ஆகியவற்றிற்கும் மருந்தாகப் பயன்படுகின்றது.

இரகங்கள்
கற்றாழையில் மூன்று வகைகள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. அவை குர்குவா கற்றாழை (அலோ பார்படென்ஸ் - Aloe vera), கேப் கற்றாழை (அலோ பெராக்ஸ் - Aloe Ferox), சாகோட்ரின் கற்றாழை (அலோ பெர்ரி - Aloe Perryi) ஆகும். பெரும்பாலும் அலோவேரா பற்றியே அழகுக் குறிப்புகளில் நாம் காண்கிறோம்.

கருவளையம்
கண்ணின் கீழ் இமைக்கும் கீழுள்ள பகுதியில் கருவளையங்கள் இருப்போர் கற்றாழை ஜெல்லை இரவில் தடவலாம். பகல் முழுவதும் கம்ப்யூட்டரை பார்த்துக் களைத்து நாளடைவில் கண்களின் கீழே கருவளையங்கள் தோன்றும். இந்தக் கருவளையங்களில் கற்றாழை ஜெல்லை பூசும்போது, அவற்றிலுள்ள ஆன்ட்டிஆக்ஸிடெண்டுகள் இயற்கையானவிதத்தில் கருமையை மாற்றி இயல்பான நிறத்தை மீட்டளிக்கின்றன. கண் பக்கத்திலுள்ள மிருதுவான சருமத்திற்கு கற்றாழை ஜெல்லிலுள்ள ஈரப்பதம் இதத்தை அளிக்கிறது.

சரும பாதுகாப்பு
கற்றாழை ஜெல் பசைபோன்ற தன்மை கொண்டது. சருமத்தை ஈரப்பதத்துடன் காத்துக்கொள்ள இது உதவுகிறது. கற்றாழை ஜெல்லை உடலின்மீது பூசினால், இது சருமத்திற்கு மேல் பாதுகாப்பான ஓர் அடுக்கினை உருவாக்குகிறது. சருமத்திலுள்ள துளைகள் பார்வைக்குத் தட்டுப்பட்டு அழகை குறைப்பதை அலோவேரா ஜெல் தவிர்க்கிறது. சூரிய ஒளியுடன் கலந்து வரும் கடும் வெப்பத்தை ஏற்படுத்தும் காமா மற்றும் எக்ஸ்ரே கதிர் வீச்சுகளின் தீய விளைவுகளிலிருந்து சருமத்தை பாதுகாக்கின்றது. மேலும் சருமத்தின் ஈரத்தன்மையை காத்து சருமத்தின் நிறத்தையும் மேம்படுத்துகிறது. கற்றாழை ஜெல்லில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் இ ஆகியவை உள்ளன. இவை அனைத்துமே ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்களாகும் (ஆன்ட்டிஆக்ஸிடெண்ட்). சூரிய ஒளியில் அதிக நேரம் இருந்தால் நிலையற்ற அணுக்களால் (ஃப்ரீ ராடிகல்ஸ்) சருமத்தில் பாதிப்பு ஏற்படக்கூடும். கற்றாழை ஜெல் அதை தடுக்கிறது. இதை முகத்திலும் பயன்படுத்தலாம்.

சவர காயங்கள்
முக சவரம் செய்யும்போது பிளேடினால் காயம் ஏற்படும். சருமம் பாதிக்கப்படலாம். அதேபோன்று வேக்ஸிங் செய்வோருக்கும் சரும பாதிப்பு உண்டாகும். கற்றாழை ஜெல் பாக்டீரியாவுக்கு எதிராக செயல்படும் தன்மை கொண்டது. இதுபோன்ற சின்னஞ்சிறு காயங்களை ஆற்றுவதில் இந்த ஜெல் சிறந்தது. இந்த ஜெல்லிலுள்ள அதிகப்படியான நீர் இந்தக் காயங்களால் ஏற்படும் எரிச்சலை தணிக்கிறது.

கூந்தல் பராமரிப்பு
கற்றாழை ஜெல்லின் பிஎச் மதிப்பு 4.5 ஆகும். இதை தலையில் தடவினால் முடி வறண்டு போவதை தடுக்கும். கூந்தலை நனைத்து அலோவேரா ஜெல்லை தடவி பத்து நிமிடம் கழித்து குளித்தால் சருமம் மிளிரும். தேங்காயெண்ணெய் அல்லது அல்மாண்ட் ஆயிலுடன் கற்றாழை ஜெல்லை கலந்தும் பயன்படுத்தலாம்.

You'r reading கண்ணின் கருவளையத்தை போக்கும்... சரும அழகை பராமரிக்கும் அலோவேரா என்னும் கற்றாழை ஜெல் Originally posted on The Subeditor Tamil

More Health News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை