மெனோபாஸ் பெண்கள் சாப்பிடலாம்... நீர்ச்சத்தை பாதுகாக்கும் பழம்

கோடைகாலத்திற்கென்றே விசேஷித்த உணவுகள், பழங்கள் உள்ளன. சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம் தர்பூசணியாகும். தர்பூசணியில் 92 சதவீதம் தண்ணீரும் 8 சதவீதம் சர்க்கரையும் இருக்கும். சூரிய ஒளியினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளிலிருந்து இது பாதுகாக்கும். சூரிய வெப்பம், வெயில் இவற்றால் ஏற்படக்கூடிய பாதிப்புகளிலிருந்து 40 சதவீதம் பாதுகாப்பை தர்பூசணி அளிக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

லைகோபீன்

தர்பூசணியில் லைகோபீன் என்ற ஆன்ட்டிஆக்ஸிடெண்ட் (ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்) உள்ளது. இது சூரியனிலிருந்து வரும் புற ஊதா (அல்ட்ரா வைலட்) கதிர் பாதிப்புகளை குறைக்கிறது. தோலில் சுருக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நிலையற்ற அணுக்களை (ஃப்ரீ ராடிகல்ஸ்) இது குறைக்கிறது. லைகோபீன், எலும்புக்கு ஆரோக்கியம் அளிக்கிறது. லைகோபீன் உடலில் இரத்த ஓட்டம் நன்றாக அமைய காரணமாகிறது. இதன் காரணமாக இதய ஆரோக்கியத்தை காக்கிறது. மாதவிடாய் நின்ற (மெனோபாஸ்) பெண்கள் பலருக்கு இரத்த தமனி சுவர்கள் தடித்தல் மற்றும் விறைத்தல் ஆகிய குறைபாடுகள் ஏற்படக்கூடும். தர்பூசணியிலுள்ள லைகோபீன், இந்தப் பாதிப்பை குறைக்கிறது.

கொழுப்பு

தர்பூசணியில் சிட்ருலின் என்ற அமினோஅமிலம் காணப்படுகிறது. இது உடலில் கொழுப்பு படிவதை குறைக்கிறது.

உடல் அழற்சி

டிரிடர்பீனாய்டு, ஃப்ளவனாய்டு மற்றும் கரோடினாய்டு ஆகிய கூட்டுப்பொருள்கள் தர்பூசணியில் உள்ளன. இவை உடலில் அழற்சி ஏற்படுவதை குறைப்பதோடு, உடலுக்குத் தீங்கு பயக்கக்கூடிய நிலையற்ற அணுக்களை (ஃப்ரீ ராடிகல்ஸ்) சமன் செய்கின்றன.

நச்சுப்பொருள்கள்

தர்ப்பூசணி சிறுநீர் பிரிவதை இயற்கையாக ஊக்குவிக்கிறது. ஆகவே, உடலிலுள்ள நச்சுப்பொருள்கள் வெளியேறுகின்றன. சிறுநீரகத்தை அதிக வேலைப்பளு ஏற்படாமல் பாதுகாக்கப்படுகிறது.

பீட்டா கரோடின்

தர்பூசணியில் பீட்டா கரோடின் என்ற சத்து உள்ளது. தர்பூசணியை நாம் சாப்பிடும்போது இது வைட்டமின் ஏ சத்தாக மாற்றம் பெறுகிறது. கண்களின் ரெட்டினா என்ற திரையிலுள்ள நுண்பொருள்களை இது உற்பத்தி செய்கிறது. முதுமை காரணமாக கண்களில் பாதிப்பு ஏற்படுவதை இது தடுக்கிறது.

உறக்கம்

தர்பூசணியில் வைட்டமின் பி6 அதிகம் காணப்படுகிறது. இது செரோடோனின் மற்றும் டோபோமைன் என்னும் வேதிப்பொருள்கள் உடலில் உற்பத்தியாக உதவுகின்றன. இவை இரண்டுமே சாதாரண ஒலி அதிர்வுகள் மற்றும் தொல்லைகளை மூளை புறக்கணிக்க உதவுகின்றன. மனநிலை உற்சாகமாக, அமைதியாக இருக்கவும் காரணமாகின்றன. ஆகவே, உறக்கமின்மையால் (இன்சோம்னியா) அவதிப்படுவோருக்கு தர்பூசணி நிவாரணம் அளிக்கும்.

கால்சியம்

மின்சுமையுள்ள தாதுகள் எலெக்ட்ரோலைட்டுகள் எனப்படும். எலெக்ட்ரோலைட்டுகளான சோடியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவையும் தர்பூசணியில் காணப்படுகின்றன. இதில் பொட்டாசியம் இருப்பதால் இரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்க உதவுகிறது. மேலும் உடலில் போதுமான அளவு கால்சியம் தங்கவும் உதவுகிறது. வியர்வையால் ஏற்படும் நீரிழப்பை சமன் செய்யவும் தர்பூசணியிலுள்ள தாதுகள் உதவுகின்றன.

நோய் எதிர்ப்பாற்றல்

தர்பூசணியில் வைட்டமின்கள் ஏ, பி மற்றும் சி ஆகியவையும் உள்ளன. இது குறைந்த கலோரி கொண்டது. ஆகவே, தர்பூசணி சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்காது. தர்பூசணியிலுள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது. காயங்கள் விரைவாக ஆறுவதற்கு உதவுகிறது.

தர்பூசணியை பார்த்து வாங்குவது எப்படி?

சீரான வடிவில் இருக்கும் தர்பூசணியையே தேர்ந்தெடுங்கள். சேதமடைந்துள்ள பழத்தை வாங்குவதை தவிர்த்துவிடுங்கள். மஞ்சள் பகுதி இருக்கிறதா என்று பழத்தை முழுவதும் சோதித்து பாருங்கள். மஞ்சள் தென்பட்டால் அது நல்ல பழமாகும். பழுக்கும்போது, பழமானது சூரிய ஒளியில் தரையில் இருந்துள்ளது என்பதை இதன் மூலம் அறியலாம். மஞ்சள் பகுதி இருக்கும் தர்பூசணி, இனிப்பாகவும் சாறு நிறைந்ததாகவும் இருக்கும். தர்பூசணியை தட்டிப் பாருங்கள். நன்கு பழுத்த பழமாக இருந்தால், உள்புறம் வெறுமையாக இருப்பதுபோன்ற ஒலி எழும்பும்.

தர்பூசணி புதினா ஜூஸ்

அரை கிலோ தர்பூசணியை துண்டு போட்டு, விதைகளை நீக்கி அரை டீஸ்பூன் கறுப்பு உப்பு சேர்த்து மிக்ஸி அல்லது பிளண்டரில் நன்கு அரைக்கவும். குளிரான தர்பூசணி துண்டுகளாக இருந்தால் நன்றாக இருக்கும். இந்த ஜூஸில் 10 முதல் 12 புதினா இலைகளை போட்டு அருந்தலாம்.

Advertisement
மேலும் செய்திகள்
how-to-check-oxygen-concentration-if-doubted-as-covid-19-infected-and-ways-to-fight-with-covid-19
கோவிட்-19: ஆக்ஸிஜன் அளவை சோதிப்பது எப்படி?
what-are-the-benefits-in-adding-ghee-in-rice
தினமும் சாப்பாட்டில் நெய் கலந்து கொள்வதால் என்ன நன்மைகள்? வாங்க பார்க்கலாம்..
foods-that-help-to-boost-immunity-to-fight-against-infections-and-cold-full-of-vitamin-c
கொரோனா பரவல்: இயற்கையாக நோய் எதிர்ப்பு ஆற்றலை தரும் உணவுகள்
penugreek-tea-to-keep-lung-healthy-and-to-help-fight-against-infection-in-pandemic-season
கொரோனா காலம்: நுரையீரலுக்கு ஆரோக்கியம் தரும் மூலிகை டீ
herbs-that-help-to-shed-kilos-and-reduce-waist-cicumference-their-medicinal-benefits-and-methods-to-take-them
கொரோனா ஊரடங்கு: இடுப்புச் சதை குறைய எதை சாப்பிடலாம்?
tricks-make-sure-to-beat-the-heat-with-fennel-vetiver-and-sandalwood-paste
கோடைக்காலத்தில் சரும பாதுகாப்புக்கான இயற்கை முறைகள்
women-can-get-corona-vaccines-even-during-menstruation
மாதவிடாய் காலத்தில் பெண்கள் கொரோனா தடுப்பூசி போடலாமா..? கூடாதா…?
improving-immune-health-help-to-activate-over-300-enzymes-and-aid-to-cell-division-cell-growth
இரத்த ஓட்டத்தை சீராக்கும்... நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும்
the-lentil-that-manage-symptoms-of-diabetes-helping-for-weight-loss-could-prevent-from-heat-stroke-and-beneficial-for-pregnant-women
ஹீட் ஸ்ட்ரோக்கிலிருந்து பாதுகாக்கும்... சிசுவுக்கு நல்லது...
steaming-for-coron-treatment-what-are-the-things-you-should-not-forget
கொரோனா: நீராவி பிடிப்பது எவ்விதம் பயன் தரும்?