நோய்களை எதிர்த்து உடல் ஆரோக்கியத்தைக் காக்கும் எளிய உணவுகள்

ஆரோக்கியமான உணவு பொருள் என்றால் அவை விலை உயர்ந்தவையாக இருக்கவேண்டும் என்பதல்ல. எளிமையான உணவு பொருள்களே பெரும்பாலும் ஆரோக்கியமானவையாகவும் உள்ளன. உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகமாக இருக்கவேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். நம் உடலின் ஆரோக்கியத்தை காத்துக்கொள்ளும் சில எளிய உணவு பொருள்கள் இவை:

பருப்பு வகைகள்

பல்வேறு நிறங்களில் பருப்புகள் உள்ளன. அவை பார்ப்பதற்கு வண்ணமயமாக இருப்பதுடன் ஊட்டச்சத்துகளும் நிறைந்தவை. நார்ச்சத்து, புரதம் ஆகியவை இவற்றில் அதிகம். இந்த இரு சத்துகளும் நம் செரிமான மண்டலத்திற்கு நன்மை செய்கின்றன. வைட்டமின்கள் ஏ, பி, சி, இ மற்றும் மெக்னீசியம், இரும்பு, துத்தநாகம் (ஸிங்க்) ஆகிய தாதுகளும் இவற்றில் உள்ளன.

வரம் பருப்பு, பாசிப் பருப்பு, பச்சை பயிறு, மைசூர் பருப்பு, கொண்டை கடலை, கடலை பருப்பு, சிவப்பு காராமணி, தட்டைப் பயிறு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

சிறு தானியங்கள்

அரிசி மற்றும் கோதுமைக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை நாம் மற்ற தானியங்களுக்குக் கொடுப்பதில்லை என்பதே உண்மை. ஆனால் சிறுதானியங்களே நமக்கு அதிக நன்மை செய்கிறவையாகும். கம்பு, வரகு, சாமை, தினை, குதிரைவாலி, கேழ்வரகு, சோளம், கொள்ளு ஆகியவை சிறுதானியங்களாகும். கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்து இவற்றில் அதிகம் காணப்படுகிறது. செரிமான மண்டலத்திலுள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்களுக்கு இவை உதவுகின்றன. ஆகவே மலச்சிக்கல், பெருங்குடல் புற்றுநோய் இவற்றை தடுக்கிறது.

மசாலா பொருள்கள்

மஞ்சள், இலவங்க பட்டை, வெந்தயம், கறுப்பு மிளகு போன்ற மசாலா பொருள்களும் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை செய்யக்கூடியவை. இவற்றில் அழற்சிக்கு எதிராக செயல்படும் திறன் உள்ளது. பாக்டீரியாக்களுக்கு எதிராகவும் இவை வேலை செய்கின்றன. ஆன்ட்டிஆக்ஸிடெண்டுகள் என்னும் ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்களும் இவற்றில் உள்ளன. இவை உடலில் அழற்சியை குறைப்பதோடு, காயங்களையும் ஆற்றுகின்றன. உடலுக்கு நிலையற்ற அணுக்களான ஃப்ரீ ராடிகல்களால் ஏற்படும் பாதிப்பை கட்டுப்படுத்துகின்றன.

வெள்ளைப் பூண்டு

வெள்ளைப் பூண்டு நெடி மிக்கதாக இருந்தாலும், நல்ல சுவையும் கொண்டது. எந்த உணவுக்கும் இது சுவையூட்டக்கூடியது. மருத்துவ குணங்களும் நிறைந்தது. உயர் மற்றும் குறை இரத்த அழுத்த பாதிப்புகளை இது குணமாக்கும். அதிக கொலஸ்ட்ராலை குறைக்கும். இதய பாதிப்பு ஏற்படக்கூடிய அபாயத்தை தடுக்கும். பெண்களுக்கு கர்ப்பப்பையில் நார்த்திசுக் கட்டிகள் உருவாகாமல் பாதுகாக்கிறது. இதிலுள்ள கந்தகம் (சல்பர்) நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது.

தயிர்

தயிரில் அதிக புரதம் உள்ளது. வயிற்றில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்களுக்கு தயிர் உதவுகிறது. கால்சியம் (சுண்ணாம்புச் சத்து), வைட்டமின்கள் பி2, பி12, பொட்டாசியம், மெக்னீசியம் ஆகிய சத்துகள் தயிரில் அடங்கியுள்ளன. செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை காப்பதுடன், மன அழுத்தத்தை குறைத்து ஆபத்தான நோய்கள் அண்டாமல் காக்கிறது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
how-to-check-oxygen-concentration-if-doubted-as-covid-19-infected-and-ways-to-fight-with-covid-19
கோவிட்-19: ஆக்ஸிஜன் அளவை சோதிப்பது எப்படி?
what-are-the-benefits-in-adding-ghee-in-rice
தினமும் சாப்பாட்டில் நெய் கலந்து கொள்வதால் என்ன நன்மைகள்? வாங்க பார்க்கலாம்..
foods-that-help-to-boost-immunity-to-fight-against-infections-and-cold-full-of-vitamin-c
கொரோனா பரவல்: இயற்கையாக நோய் எதிர்ப்பு ஆற்றலை தரும் உணவுகள்
penugreek-tea-to-keep-lung-healthy-and-to-help-fight-against-infection-in-pandemic-season
கொரோனா காலம்: நுரையீரலுக்கு ஆரோக்கியம் தரும் மூலிகை டீ
herbs-that-help-to-shed-kilos-and-reduce-waist-cicumference-their-medicinal-benefits-and-methods-to-take-them
கொரோனா ஊரடங்கு: இடுப்புச் சதை குறைய எதை சாப்பிடலாம்?
tricks-make-sure-to-beat-the-heat-with-fennel-vetiver-and-sandalwood-paste
கோடைக்காலத்தில் சரும பாதுகாப்புக்கான இயற்கை முறைகள்
women-can-get-corona-vaccines-even-during-menstruation
மாதவிடாய் காலத்தில் பெண்கள் கொரோனா தடுப்பூசி போடலாமா..? கூடாதா…?
improving-immune-health-help-to-activate-over-300-enzymes-and-aid-to-cell-division-cell-growth
இரத்த ஓட்டத்தை சீராக்கும்... நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும்
the-lentil-that-manage-symptoms-of-diabetes-helping-for-weight-loss-could-prevent-from-heat-stroke-and-beneficial-for-pregnant-women
ஹீட் ஸ்ட்ரோக்கிலிருந்து பாதுகாக்கும்... சிசுவுக்கு நல்லது...
steaming-for-coron-treatment-what-are-the-things-you-should-not-forget
கொரோனா: நீராவி பிடிப்பது எவ்விதம் பயன் தரும்?
Tag Clouds