கோடையில் பருகக்கூடிய இயற்கை பானங்கள்

நோய் நடமாடும் வேளையில் இயற்கை பானம் என்றாலே பல மூலிகைகளை சேர்த்து கஷாயம் தயாரித்து அருந்துவதுதான் ஞாபகத்திற்கு வரக்கூடும். கோடையில் வயிற்றையும் மனதை இதமாக்கக்கூடிய பானங்கள் அநேகம் உள்ளன. இயற்கையான முறையில் தயாரிப்பதால் இவை உடலுக்கு எந்தத் தீங்கும் செய்யாது. மாறாக, நோய் எதிர்ப்பு ஆற்றலை உடலுக்கு அளிக்கும்.

வெட்டிவேர் சர்பத்

வெட்டிவேர் மனதுக்கு இதமளிக்கக்கூடியது. வெப்பத்தினால் உண்டாகும் நோய்களைக் குணமாக்க இதை பயன்படுத்துகிறார்கள். நீருக்கு இயற்கையாக குளுமையை அளிப்பது அதை சுத்திகரிக்கும் பண்பு வெட்டிவேருக்கு உள்ளது. வெட்டிவேரை கருப்பட்டி (பனைவெல்லம்)கலந்த நீருடன் சேர்த்து சர்பத் தயாரிக்கலாம். அது உடல் வெப்பத்தை தணிக்கும். வெட்டிவேரையும் சீரகத்தையும் நீரில் சேர்த்து அதை கொதிக்க வைத்து வடி கட்டி அருந்தினால் நன்றாக செரிமானம் ஆகும்.

கிரீன் ஸ்மூத்தி

பசலைக் கீரை, வெள்ளரி மற்றும் நெல்லிக்காய் சாறு ஆகியவற்றைக் கலந்து கிரீன் ஸ்மூத்தி தயாரித்து அருந்தலாம். இது உடலின் வளர்சிதை மாற்றத்தை (மெட்டபாலிசம்) தூண்டி, நோய் எதிர்ப்பு ஆற்றலை அளிக்கிறது. இதில் ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்கள் (ஆன்ட்டிஆக்ஸிடெண்டுகள்), வைட்டமின் சி, பீட்டா கரோட்டின் ஆகியவை உள்ளன. பசலைக் கீரை மற்றும் நெல்லிக்காயிலுள்ள இந்தச் சத்துகள் நோய் தொற்றை தடுக்கும் இயல்பு கொண்டவை. வெள்ளரி உடலிலுள்ள நீர்ச்சத்து குறையாமல் பாதுகாக்கக்கூடியது. இதனுடன் எலுமிச்சை சாறும் இந்துப்பு (பாறை உப்பு) சேர்த்தால் இன்னும் சுவை கூடும்.

விளாம்பழ ஜூஸ்

கோடைக்காலத்தில் இந்தியா முழுவதும் கிடைக்கக்கூடியது விளாம்பழம். உடலுக்கு ஊட்டச்சத்தும் நீர்ச்சத்து ஒருங்கே கிடைக்கவேண்டுமனால் விளாம்பழ ஜூஸ் அருந்தலாம். விளாம்பழச் சாற்றில் அதிகமான நார்ச்சத்து, வைட்டமின் சி, பொட்டாசியம், கால்சியம், இரும்புச் சத்து ஆகியவை அதிகமுள்ளன. வயிற்றுக்கு குளிரூட்டுவதுடன், நல்ல பாக்டீரியாக்கள் வளரவும் இது உதவுகிறது. நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கிறது.

மாங்காய் ஜூஸ்

கோடைக்காலம் தொடங்கியதும் மாம்பழ சீசனும் தொடங்கிவிடும். மாங்காய் மற்றும் மாம்பழங்களை சாப்பிடுவது உடலுக்கு ஊட்டச்சத்தை அளிக்கும். மாங்காயை துண்டாக்கி, சீரக பொடி மற்றும் கறுப்பு உப்பு சேர்த்து கூழாக்கி அருந்தலாம். இது மனச்சோர்வை மாற்றும். நீர்ச்சத்து இழப்புக்கு மாற்றாகும். வயிற்றுப்போக்கை நிறுத்தும். பாக்டீரியா போன்ற கிருமிகளை எதிர்க்கும் ஆற்றலை உடலுக்குத் தரும்.

புதினா மோர்

கோடைக்கால பானங்களின் பட்டியல் மோர் மற்றும் லஸ்ஸி இல்லாமல் நிறைவு பெறாது. மோர், வயிற்றில் நல்ல பாக்டீரியாக்கள் உருவாக உதவும். செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக காத்துக்கொள்ளும். மோருடன் சில புதினா இலைகளைளம் ஒரு சிட்டிகை வறுத்த சீரக தூளையும் சேர்த்து பருகலாம். இதில் ஆன்ட்டிஆக்ஸிடெண்டுகள், வைட்டமின்கள் ஏ, சி மற்றும் இ ஆகியவை நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்பு ஆற்றலை தருகிறது.

Advertisement
மேலும் செய்திகள்
how-to-check-oxygen-concentration-if-doubted-as-covid-19-infected-and-ways-to-fight-with-covid-19
கோவிட்-19: ஆக்ஸிஜன் அளவை சோதிப்பது எப்படி?
what-are-the-benefits-in-adding-ghee-in-rice
தினமும் சாப்பாட்டில் நெய் கலந்து கொள்வதால் என்ன நன்மைகள்? வாங்க பார்க்கலாம்..
foods-that-help-to-boost-immunity-to-fight-against-infections-and-cold-full-of-vitamin-c
கொரோனா பரவல்: இயற்கையாக நோய் எதிர்ப்பு ஆற்றலை தரும் உணவுகள்
penugreek-tea-to-keep-lung-healthy-and-to-help-fight-against-infection-in-pandemic-season
கொரோனா காலம்: நுரையீரலுக்கு ஆரோக்கியம் தரும் மூலிகை டீ
herbs-that-help-to-shed-kilos-and-reduce-waist-cicumference-their-medicinal-benefits-and-methods-to-take-them
கொரோனா ஊரடங்கு: இடுப்புச் சதை குறைய எதை சாப்பிடலாம்?
tricks-make-sure-to-beat-the-heat-with-fennel-vetiver-and-sandalwood-paste
கோடைக்காலத்தில் சரும பாதுகாப்புக்கான இயற்கை முறைகள்
women-can-get-corona-vaccines-even-during-menstruation
மாதவிடாய் காலத்தில் பெண்கள் கொரோனா தடுப்பூசி போடலாமா..? கூடாதா…?
improving-immune-health-help-to-activate-over-300-enzymes-and-aid-to-cell-division-cell-growth
இரத்த ஓட்டத்தை சீராக்கும்... நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும்
the-lentil-that-manage-symptoms-of-diabetes-helping-for-weight-loss-could-prevent-from-heat-stroke-and-beneficial-for-pregnant-women
ஹீட் ஸ்ட்ரோக்கிலிருந்து பாதுகாக்கும்... சிசுவுக்கு நல்லது...
steaming-for-coron-treatment-what-are-the-things-you-should-not-forget
கொரோனா: நீராவி பிடிப்பது எவ்விதம் பயன் தரும்?