தொப்பை குறையாததற்கு மன அழுத்தமும் ஒரு காரணமாம்..

Advertisement

தொப்பை என்பது ஆண், பெண் என இருபாலருக்கும் வரக்கூடியது. பல்வேறு சூழ்நிலை காரணங்களால் தொப்பை வந்துவிடுகிறது. இதை குறைக்க காதில் விழும் டிப்ஸ் அனைத்தையும் செய்துபார்க்கிறோம். ஆனாலும், தொப்பை குறைந்தபாடில்லை. இது தான் பலரது புலம்பலாக இருக்கிறது. சரி முதலில் தொப்பை குறையாததற்கான காரணங்கள் குறித்து நாம் இங்கே பார்ப்போம்

ஆய்வுகளில், மனஅழுத்ததில் இருப்பவர்களுக்கு தொப்பை உண்டாகுகிறது என்று கண்டுபிடித்துள்ளார்கள். இதற்கு, பசியின்மை, சரியான உடற்பயிற்சி இல்லாமை, ஊக்கமின்மை அல்லது பதப்படுத்தப்பட்ட வகை உணவுகளை அதிகமாக உட்கொள்ளுதல் கூட காரணமாக இருக்கலாம். குறிப்பாக, பெண்கள் பிரசவத்திற்கு பின் மனஅழுத்தத்திற்கு உள்ளாவார்கள். இதிலிருந்து மீள உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். இதனால் உங்கள் உடலில் சில ஹார்மோன்கள் உற்பத்தி ஆகி சரியான வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்தும். தாய்மார்களுக்கு இது மிகவும் சிரமமான காரியம்.

தாய்மார்கள் குழந்தைகள் மற்றும் வீடு ஆகியவை பார்த்துக்கொள்ள வேண்டிய காரணத்தால், அவர்களுக்கு மனஅழுத்தம் உண்டாகும். இதனால் கார்டிசோல் என்ற ஹார்மோன் அதிகளவில் உற்பத்தியாகும். இது உங்களின் கொழுப்பு செல்களை பெரிதாக்கி தொப்பை குறைப்பதை கடினமாக்குகிறது.

உங்கள் தொப்பை குறையாததற்கு நீங்கள் உட்கொள்ளும் உணவுகள் கூட காரணமாக இருக்கலாம். நீங்கள் கொழுப்பு அதிகமுள்ள உணவுகளை எடுத்துக்கொண்டால், எவ்வளவு உடற்பயிற்சி செய்தும் அது பலனளிக்காது. நிறைவுற்ற கொழுப்பு ( saturated fats ) உங்கள் தொப்பையை அதிகரிக்கும். ஆனால், மற்ற வகை கொழுப்புகளான நிறைவுறா கொழுப்புகள் ( unsaturated fats ) உங்கள் உடலுக்கு நன்மை பயக்கும். ஆனால், இவை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். சமீபத்திய ஆய்வுகளில், உங்கள் உணவில் மெக்னீசியம் சரியான அளவில் இருந்தால், அது உடல் எடையை குறைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

நீங்கள் பல விதமான உடற்பயிற்சிகள் செய்தாலும் உங்கள் தொப்பை குறையாமல் இருக்கும். இதற்கு காரணம் நீங்கள் தவறான உடற்பயிற்சி செய்துகொண்டிருக்கலாம். அதனால், தொப்பையை குறைத்து உடலை கட்டுக்குள் வைத்திருக்கும் சரியான உடற்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். வயது ஆக ஆக உங்கள் உடம்பு எரிக்கும் கலோரிகளின் அளவு குறைந்துவிடும். உடற்பயிற்சி செய்வதில் கஷ்டப்படுவீர்கள்.

பதப்படுத்தப்பட்ட உணவுகளில் நிறைவுற்ற கொழுப்புகள் ( saturated fats ) அதிகமாக இருப்பதால், அது உங்கள் தொப்பையை குறைக்க உதவாது. குறிப்பாக கர்ப்பமாக இருக்கும்போது கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிட தோன்றும். அதனால் பிரசவத்திற்கு பிறகு தொப்பை உண்டாகும். இதை குறைக்க, நிறைய காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொள்ளலாம்.

தூக்கமின்மையும் தொப்பை குறையாததற்கான காரணமாகும். குறிப்பாக பிரசவத்திற்கு பிறகு, குழந்தையை ககவனித்துக்கொள்ள நேரம் சரியாக இருக்கும் என்பதால், தாய்மார்களுக்கு இது மிகவும் சிரமமான காரியம்.
 - thesubeditor.com

Advertisement
மேலும் செய்திகள்
how-to-check-oxygen-concentration-if-doubted-as-covid-19-infected-and-ways-to-fight-with-covid-19
கோவிட்-19: ஆக்ஸிஜன் அளவை சோதிப்பது எப்படி?
what-are-the-benefits-in-adding-ghee-in-rice
தினமும் சாப்பாட்டில் நெய் கலந்து கொள்வதால் என்ன நன்மைகள்? வாங்க பார்க்கலாம்..
foods-that-help-to-boost-immunity-to-fight-against-infections-and-cold-full-of-vitamin-c
கொரோனா பரவல்: இயற்கையாக நோய் எதிர்ப்பு ஆற்றலை தரும் உணவுகள்
penugreek-tea-to-keep-lung-healthy-and-to-help-fight-against-infection-in-pandemic-season
கொரோனா காலம்: நுரையீரலுக்கு ஆரோக்கியம் தரும் மூலிகை டீ
herbs-that-help-to-shed-kilos-and-reduce-waist-cicumference-their-medicinal-benefits-and-methods-to-take-them
கொரோனா ஊரடங்கு: இடுப்புச் சதை குறைய எதை சாப்பிடலாம்?
tricks-make-sure-to-beat-the-heat-with-fennel-vetiver-and-sandalwood-paste
கோடைக்காலத்தில் சரும பாதுகாப்புக்கான இயற்கை முறைகள்
women-can-get-corona-vaccines-even-during-menstruation
மாதவிடாய் காலத்தில் பெண்கள் கொரோனா தடுப்பூசி போடலாமா..? கூடாதா…?
improving-immune-health-help-to-activate-over-300-enzymes-and-aid-to-cell-division-cell-growth
இரத்த ஓட்டத்தை சீராக்கும்... நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும்
the-lentil-that-manage-symptoms-of-diabetes-helping-for-weight-loss-could-prevent-from-heat-stroke-and-beneficial-for-pregnant-women
ஹீட் ஸ்ட்ரோக்கிலிருந்து பாதுகாக்கும்... சிசுவுக்கு நல்லது...
steaming-for-coron-treatment-what-are-the-things-you-should-not-forget
கொரோனா: நீராவி பிடிப்பது எவ்விதம் பயன் தரும்?
/body>