மனக்கஷ்டமா..? நம்ம டாமியும் ஜானியும் இருக்காங்களே..!

by Rahini A, May 5, 2018, 12:51 PM IST

வீட்டு வாசலில் காவல் காப்பதிலிருந்து வீட்டின் குடும்ப உறுப்பினர்களுள் ஒன்றாகவே நிற்கும் நாய்களுக்குத் தான் மனிதன் மேல் எத்தனைப் பரிவு! நன்றி என்ற அடைமொழியே நாய்களால் உருவானதுதானே..!

எந்தவித எதிர்பார்ப்புகளும் இன்றி, நமக்காக வாலை ஆட்டிக்கொண்டு காத்திருக்கும் ராமுவுக்கும் டாமிக்கும் நம்மோடு ஏன் இத்தனை ஒன்றுதல்? இந்தக் கேள்விக்கு பதில் தேடித்தான் ஜப்பானின் அஜாபு பல்கலைக்கழகம் ஒரு ஆராய்ச்சியையே நடத்தியது.

அந்த ஆராய்ச்சிகள், மனிதனுக்கும் நாய் நண்பர்களுக்கும் நிறையவே பிணைப்பு உள்ளது. ஆராய்ச்சியின் முடிவில், “நம் வீட்டு செல்லக்குட்டிகளான நாய்களுடன் இணைந்து பழகும் போது அவற்றின் கண்ணை கூர்ந்து பார்த்தால், மனிதனின் உடலில் ‘ஆக்ஸிடாக்ஸின்’ என்றதொரு ஹார்மோன் அளவுக்கு அதிகமாக சுரக்கும்” என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த ஆராய்ச்சியில், ஆக்ஸிடாக்ஸின் ஹார்மோன் மனிதனின் ‘ஃபீல் குட்’ ஹார்மோனாகக் கருதப்படுவதாக விளக்கப்பட்டுள்ளது. ஒரு தாய் தன் குழந்தையை பிரசவிக்கும் அந்த ஒரு நொடியில் தாயின் உடலில் இந்த ‘ஆக்ஸிடாக்ஸின்’ தான் சுரக்குமாம். எவ்வளவு வலி இருந்தாலும் ஒரு மகிழ்வான நிறைவு உணர்வு தரும் ஆக்ஸிடாக்ஸின்.

உங்களை அதிகம் மகிழ்விக்கும் எந்தவொரு உயிரின் கண்களையும் நேருக்கு நேர் பார்க்கும்போது இந்த ‘ஆக்ஸிடாக்ஸின்’ சுரப்பது அறிவியல் உண்மை. மனித உறவுகளாகட்டும் செல்லப் பிராணிகளாகட்டும் கண்ணோடு கண் பாருங்கள். அந்தவொரு அன்பு எத்தனைப் பெரிய டென்ஷனையும் நொடியில் தீர்த்துவிடும்.

You'r reading மனக்கஷ்டமா..? நம்ம டாமியும் ஜானியும் இருக்காங்களே..! Originally posted on The Subeditor Tamil

More Health News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை