நெஞ்சு எரிச்சல் என்பது ஏறக்குறைய அனைவருக்கும் ஏற்படக்கூடிய ஒன்று எனலாம். என்ன காரணத்தினால் நெஞ்சு எரிச்சல் ஏற்படுகிறது என்பது பற்றியும், நெஞ்சு எரிச்சலில் இருந்து மீள்வது எப்படி என்று பார்போம்.
வயிற்றுக்குள் ஏற்படும் தவறான தசைப்பிடிப்பினாலேயே நெஞ்சு எரிச்சல் ஏற்படுவது தெரிய வருகிறது. நாம் உண்ணும் உணவு, உடலை ஏதாவது ஒருபுறமாக நெளிப்பதாலும் கூட நெஞ்சு எரிச்சல் ஏற்படுகிறது. சில நேரங்களில் நெஞ்சு எரிச்சலானது சாப்பிட்ட பின் அதிகரிக்கக்கூடும்.
சாதாரணமாக 2 மணி நேரம் வரை நெஞ்சு எரிச்சல் நீடிக்கலாம். நேராக எழுந்து நின்று உடலை நீட்டி வளைக்கும்போது கூட இந்த பாதிப்பு சரியாகி விடக்கூடும்.
மசாலா அதிகம் கொண்ட காரமான உணவுப் பொருட்களை சாப்பிடுதல், அதிக கொழுப்புச் சத்து கொண்ட ஜீரணமாவதற்கு தாமதமாகக் கூடிய உணவை சாப்பிடுதல், புகைபிடிப்பதால், கருவுற்ற பெண்களுக்கு, ஒழுங்கற்ற உணவுப் பழக்க முறை, உடல் பருமன் போன்ற பல காரணங்களினால் நெஞ்சு எரிச்சல் ஏற்படக்கூடும்.
நெஞ்சுப் பகுதியில் உள்ள உணவுக் குழல் வழியாக நாம் உண்ணும் உணவு வயிற்றுக்குள் செல்கிறது. உணவுக் குழலில் உள்ள ஒரு வால்வு என்றழைக்கப்படுகிறது. இந்த வால்வானது வயிற்றுக்குள் இருந்து உணவு மேலே வராதவாறு தடுக்கும் வேலையைச் செய்கிறது.
இந்த வால்வு பலவீனமாக இருந்தாலோ அல்லது உரிய வகையில் செயல்படா விட்டாலோ நெஞ்சு எரிச்சல் ஏற்பட வாய்ப்புண்டு. இந்த வால்வின் மூலம் வயிற்றுக்குள் உள்ள அமிலமானது மேலே வரும் நிலையில் எரிச்சல் உருவாகிறது.
வயிற்றில் அதிகப்படியாக உருவாகும் அமிலமோ அல்லது பெப்சின் சுரப்பியோ மேலே வரும் போதும் எரிச்சல் உருவாகலாம். இதனால் நெஞ்சுப் பகுதியில் வலியும் ஏற்படலாம்.
நெஞ்சு எரிச்சலைப் போக்க பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் உள்ளன. சில நேரங்களில் நறுமணப் பூண்டு விதைகளைக் கொண்ட தேநீர் அருந்தினாலே நெஞ்சு எரிச்சல் குணமாகி விடும். வாழைப்பழங்களை சாப்பிடுவதால் நெஞ்சு எரிச்சல் சரியாகும்.
ஊறுகாய், எண்ணெயில் வறுக்கப்பட்ட நொறுக்குத் தீனிகள், சாக்கலேட், சில வகை பானங்கள் மற்றும் அதிக காரம், எண்ணெய் நிறைந்த உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். மேலும் அதிக அளவு தண்ணீரை குடிக்கலாம்.