பல ஆரோக்கிய நலன்களுக்கு மத்தியில் மூட்டு வலியிலிருந்து விடிவு தரும் சிறந்த நிவாரணியாக உள்ளது மஞ்சள்.
மகத்துவம்மிக்க மருந்து மஞ்சள். இதில் நுண்ணுயிர்களை எதிர்கொள்ளும் திறன் இருக்கிறது. அதோடு, நம் நோய் எதிர்ப்புச் சக்தியைத் தூண்டக்கூடிய தன்மையும், வீக்கத்தை குறைக்கும் ஆற்றலும் மஞ்சளுக்கு உண்டு.
இதனால் காயம் விரைவாகக் குணமாகும். உடலுக்கு வெளியே வைத்திருக்கும்போதே இவ்வளவு நன்மைகளைத் தரும் மஞ்சள், உடலுக்குள்ளே செல்லும்போதும் பல நன்மைகளைத் தரக்கூடியது.
ஆக, மஞ்சளால் கிடைக்கும் நன்மைகளில் சில...
* மூட்டுவலியைக் குறைக்கும்.
* நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.
* புற்றுநோய் வருவதைத் தடுக்கும்
* இதயநோய்களிலிருந்து காக்கும்.
* ஆஸ்துமா மற்றும் குடல் அழற்சி நோய் போன்றவற்றைக் குறைக்கும்
* முதுமைக் காலத்தில் ஏற்படும் அல்சைமர் நோய் வராமல் தடுக்கும்.
* கல்லீரல் வீக்கம், கல்லீரலில் பாதிப்பு போன்றவற்றைத் தடுக்கும்.
* பித்தப்பையில் கற்கள் உண்டாவதைத் தடுக்கும்