இடைவெளிவிடா உடலுறவு தரும் பயன்கள் தெரியுமா?

Advertisement

இடைவெளியே இல்லாமல் தினமும் உடல் உறவு கொண்டால் ஆண்மை அதிகரிக்கும் என ஆராய்ச்சி மூலம் தெரிய வந்துள்ளது.

கணவன்-மனைவி இருவருமே திருமணமான சில நாட்களுக்கு உடல் உறவு மிக அதிகளவில் வைப்பது வழக்கம். பின்னர் சிறிது சிறிதாக உறவு கொள்ளும் எண்ணிக்கையும் குறைய ஆரம்பித்து விடுகிறது. இதற்கு முக்கிய காரணம், உடல் உறவு என்றால் இவ்வளவுதானா என்ற அலுப்பும் சலிப்பும் தான்.

தினமும் உடல் உறவு வைத்துக்கொள்ளும் தம்பதிகளை பார்ப்பது என்பது இக்காலத்தில் மிகவும் அரிது. பொதுவாக வாரத்தில் 2 அல்லது 3 முறை மட்டுமே உடல் உறவு வைத்து கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதிலும் தம்பதிகளிடையே சண்டை, நோய், களைப்பு உள்ளிட்ட காரணங்களால் அந்த அளவும் நீண்ட போக வாய்ப்பு உள்ளது.

இந்த காரணங்கள் இல்லாவிட்டாலும் சில தம்பதிகள் வேண்டுமென்றே உடல் உறவை தள்ளி போடுகின்றனர். அதற்கு தம்பதிகள் சொல்லும் முக்கிய காரணம் தினமும் உடல் உறவு கொண்டால், உடல்நலம் குன்றிவிடும், ஆண்மைக் குறைந்துவிடும் என விளக்கம் அளிக்கின்றனர்.

இதனால் மாதவிடாய் நாட்கள் உட்பட இடைவெளிகளை இதற்கு பயன்படுத்தி கொள்வதாக கூறுகின்றனர். ஆனால் இது ஒரு தவறான கருத்து என டாக்டர்கள் ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், “நாட்கள் இடைவெளி விட்டு உடல்உறவு வைத்தால், ஆண்மை அதிகரிக்கும் என தம்பதியர் நினைக்கின்றனர். ஆனால் அது தவறான கருத்து. தினமும் உறவு கொண்டால் ஆண்களின் உடலில் உள்ள உறுப்புகள் சிறப்பாக செயல்பட்டு, வளமான விந்து உருவாக உதவுகிறது.

தகுந்த உணவும், மகிழ்ச்சியளிக்கும் உடல் உறவும் மனிதனின் உடலை மட்டுமின்றி மனதையும் அமைதிப்படுத்தி வாழ்நாளை அதிகரிக்கிறது. வளமான விந்துகள் உருவாகி, கருத்தரிக்கும் வாய்ப்பும் அதிகரிக்கிறது.

தினமும் உடல் உறவு கொள்வதன் மூலம் மனித விந்து பைகளில் உள்ள விந்துகளின் வாழ்நாளும் அதிகரிக்கிறது. உடலில் ரத்த ஒட்டம் அதிகரிக்கவும் உதவுகிறது. தினமும் உறவு கொண்டு விந்துகளை வெளியேற்றுவதால், புதிய விந்து செல்கள் உருவாக்கத்திற்கு வழிவகை ஏற்படுகிறது.

ஆண்கள் உறவு கொள்ளாமல் நீண்ட நாள்கள் இருப்பதால், அவர்களின் விந்துகளில் உள்ள டிஎன்ஏ-க்கள் அதிகளவில் சேதமடைகின்றன. இதனால் நாட்கள் இடைவெளி விட்டு உறவு கொள்ளும் ஆண்களின் விந்துகள் மூலம் கருத்தரிக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு. வளமில்லாத விந்துகளை கொண்ட ஆண்களை தினமும் உறவு கொள்ள செய்து ஆராய்ச்சி செய்ததில், 30 சதவீதம் ஆண்களின் விந்து செல்கள் வளமானதாக மாறியது தெரியவந்தது,” என்கின்றனர்.

இதனால் எந்த காரணங்களையும் காட்டாமல் தினமும் உடல் உறவுக் கொண்டு, வாழ்க்கையை ஆரோக்கியமாகவும் சந்தோஷமாகவும் தன் துணையுடன் அனுபவியுங்கள்.

Advertisement
மேலும் செய்திகள்
how-to-check-oxygen-concentration-if-doubted-as-covid-19-infected-and-ways-to-fight-with-covid-19
கோவிட்-19: ஆக்ஸிஜன் அளவை சோதிப்பது எப்படி?
what-are-the-benefits-in-adding-ghee-in-rice
தினமும் சாப்பாட்டில் நெய் கலந்து கொள்வதால் என்ன நன்மைகள்? வாங்க பார்க்கலாம்..
foods-that-help-to-boost-immunity-to-fight-against-infections-and-cold-full-of-vitamin-c
கொரோனா பரவல்: இயற்கையாக நோய் எதிர்ப்பு ஆற்றலை தரும் உணவுகள்
penugreek-tea-to-keep-lung-healthy-and-to-help-fight-against-infection-in-pandemic-season
கொரோனா காலம்: நுரையீரலுக்கு ஆரோக்கியம் தரும் மூலிகை டீ
herbs-that-help-to-shed-kilos-and-reduce-waist-cicumference-their-medicinal-benefits-and-methods-to-take-them
கொரோனா ஊரடங்கு: இடுப்புச் சதை குறைய எதை சாப்பிடலாம்?
tricks-make-sure-to-beat-the-heat-with-fennel-vetiver-and-sandalwood-paste
கோடைக்காலத்தில் சரும பாதுகாப்புக்கான இயற்கை முறைகள்
women-can-get-corona-vaccines-even-during-menstruation
மாதவிடாய் காலத்தில் பெண்கள் கொரோனா தடுப்பூசி போடலாமா..? கூடாதா…?
improving-immune-health-help-to-activate-over-300-enzymes-and-aid-to-cell-division-cell-growth
இரத்த ஓட்டத்தை சீராக்கும்... நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும்
the-lentil-that-manage-symptoms-of-diabetes-helping-for-weight-loss-could-prevent-from-heat-stroke-and-beneficial-for-pregnant-women
ஹீட் ஸ்ட்ரோக்கிலிருந்து பாதுகாக்கும்... சிசுவுக்கு நல்லது...
steaming-for-coron-treatment-what-are-the-things-you-should-not-forget
கொரோனா: நீராவி பிடிப்பது எவ்விதம் பயன் தரும்?
/body>