மாதவிடாய் கோளாறுகளைப் போக்கும் புஜங்காசனம்

இக்கால உணவு முறைகளினால் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்

by Vijayarevathy N, Sep 23, 2018, 08:01 AM IST

இக்கால உணவு முறைகளினால் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அதில் குறிப்பிட்டு சொன்னால் மாதவிடாய் கோளாறுகள். எவ்வளவு செலவு செய்தாலும் ஒன்றுமே நடக்காது. கவலை வேண்டாம்.இவ்வாசனத்தை செய்து பாருங்கள் பலன் தெரியும்.

நல்ல பாம்பு படம் எடுப்பது போல் தோற்றமளிக்கும். இதில் முதுகெலும்பு பின்புறம் வளைகிறது. சர்ப்பாசனம் என்றும் கூறலாம். செய்முறை. குப்புறப்படுக்கவும், கால்களை இரண்டும் சேர்ந்து இருக்கட்டும். முகவாய்க் கட்டை தரையில் படிந்திருக்க வேண்டும்.

இரு உள்ளங்களைகளையும் மார்புக்கு அருகில் பக்க வாட்டில் வைத்து அழுத்தி மூச்சை நன்கு உள்ளிழுத்துக் கொண்டு பாம்பு படம் எடுப்பது போல மெதுவாக தலையையும், மார்பையும் படிப்படியாக உயர்த்தவும்.

தொப்புளுக்கு கீழ் உள்ள பாகம் தரையில் படிந்திருக்க வேண்டும். இந்நிலையில் 30 விநாடிகள் இருக்கலாம். பிறகு மெதுவாக படிப்படியாக ஆரம்ப நிலைக்கு வரலாம். இதை 2 முறை செய்தால் போதும்.

பயன்கள் : பெண்களுக்கு மிக உகந்த ஆசனம். மாத விடாய் கோளாறுகள், வெள்ளைப் படுதல், மலட்டுத் தன்மை, முதுகு வலி நீங்கும். தொப்பை கரையும். ஆஸ்துமா நீங்கும். முதுகெலும்பு பலம் பெறும். பெண்கள் நல்ல தோற்றத்தையும் முக அமைப்பையும் பெறலாம்.

You'r reading மாதவிடாய் கோளாறுகளைப் போக்கும் புஜங்காசனம் Originally posted on The Subeditor Tamil

More Health News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை