முதுமையை யாராலும் தடுக்க முடியாத ஒன்று. ஆனால் முதுமை வயதிலும் இளமயுடன் இருக்க இந்த ஆசனம் உதவுகிறது. தினமும் இந்த ஆசனத்தை செய்யுங்கள் பிறப் பலன்களையும் பெறுங்கள்.
செய்முறை:
விரிப்பின் மீது கால்களை நீட்டி மல்லாந்து படுத்துக்கொள்ளவும். முதலில் இரண்டு கால்களையும் படத்தில் காணப்படுவது போல் மெதுவாக மேலே தூக்கவும். அதேபோல் தலை, கழுத்தை மெதுவாக கால்களுக்கு இணையாக மேலே தூக்கவும்.
இப்போது இந்த ஆசனத்தை பார்க்கும் போது படகு நீரில் மிதப்பது போன்ற தோற்றத்தைக் கொடுக்கும். கைகளை நேராக நீட்டிக்கொள்ளவும். மூச்சை சாதாரண நிலையில் வைத்துக்கொள்ளவும். இவ்வாறு இந்த ஆசனத்தை 4 முதல் 5 முறை செய்யலாம்.
பயன்கள்:
• வயிற்றுத் தசைகள், உள் உறுப்புகளுக்கு பயிற்சி கொடுப்பதால் அஜீரணக் கோளாறு, மலச்சிக்கல் போன்றவை நீங்கும்.
• வயிற்றில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைவதால் தொப்பை குறையும். வயிற்றுக்குத் தேவையான இரத்தம் சீராகச் செல்லும்.
• கணையத்தைத் துண்டி கணைய நீரை அதிகம் சுரக்கச் செய்கிறது. இதனால் நீரிழிவு நோய் போன்ற பாதிப்பிலிருந்து பாதுகாக்கிறது.
• நரம்புத் தளர்ச்சியைப் போக்கி உடலுக்கு வலுகொடுக்கிறது.
• நுரையீரலைப் பலப்படுத்துகிறது. இதனால் ஆஸ்துமா போன்ற நோய்களால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைகிறது.
இளமையைக் காப்பதில் இவ்வாசனம் பெரும்பங்கு வகிக்கிறது.