பாலை இரவில் குடிக்கலாமா? அல்லது பகலில் குடிக்கலாமா?

Can drink milk at night? Or drink at daytime?

by Vijayarevathy N, Nov 2, 2018, 22:12 PM IST

பாலை எப்பொழுது குடித்தாலும் நல்லதுதான் ஆனால் அதற்கென்று சில முறைகள் உள்ளது. சரி, வாங்க எந்த நேரத்தில் பால் குடித்தால் நல்லது என பார்ப்போம்.

சிலர் பாக்கெட் பாலை குடிப்பார்கள். அவர்களுக்கான தகவல் இது இல்லை. பாக்கெட் பாலை குடிப்பதை தவிர்த்துவிடுங்கள். வளரும் குழந்தைகளுக்கு பாக்கெட் பால் கொடுக்காமல் ஆரோக்கியமான மாட்டு பாலை கொடுங்கள்.

சிலர் பால் தண்ணியாக உள்ளது என்று சொல்லுவார்கள்.ஆனால் பால் தண்ணீரை போன்று இல்லாவிட்டால்தான் அதன் தரத்தை பற்றி சந்தேகப்பட வேண்டும். பாலில் 87 சதவீதம் தண்ணீர் மற்றும் 13 சதவீதம் இதர வேதிப்பொருள் உள்ளது.

பொதுவாக உடலுக்கு கால்சியம் மற்றும் புரோட்டீனை பெற சிறந்த வழி தவறாமல் பால் அருந்துவது ஆகும். ஆனால் பாலை எப்போது குடிப்பது என்ற சந்தேகம் உள்ளது. பாலை குறிப்பிட்ட நேரத்தில் குடிப்பதால் குறிப்பிட்ட நன்மைகள் கிடைக்கும். சரி எந்த நேரத்தில் குடித்தால் எந்த நன்மை கிடைக்கும் என பார்க்கலாம்.

காலை உணவின் போது அதிக அளவில் புரோட்டீன் வேணுமானால் பாலை காலையில் குடிப்பது நல்லது. மேலும் பாலில் கால்சியம் மற்றும் புரோட்டினை தவிர பொட்டாசியம், மக்னீசியம் போன்ற பொருட்கள் உள்ளதால் பாலை காலையில் குடிப்பது நல்லது. காலையில் பசி எடுக்க கூடாது என நினைப்பவர்கள் காலையில் பால் குடிப்பது நல்லது.

காலை பாலை குடித்து வயிறு உப்புசத்துடன் இருந்தால், காலையில் குடிப்பதை தவிர்க்க வேண்டும். இரவில் தூக்கம் வராமல் தவீப்பவர்கள் பாலைக் காய்ச்சி குடிப்பதால் நல்ல தூக்கமும் நல்ல உடலும் ஆரோக்கியம் பெறும். எனவே பாலை எந்த நேரத்தில் குடித்தாலும் நல்லதுதான்.

You'r reading பாலை இரவில் குடிக்கலாமா? அல்லது பகலில் குடிக்கலாமா? Originally posted on The Subeditor Tamil

More Health News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை