பல வகையான பழங்கள் இருந்தாலும், உடல்நலத்திற்கு மிகவும் நன்மையளிக்கக்கூடிய பழம் பப்பாளி பழம் தான். விலை மலிவானது, ஆனால் அவை தரும் மருத்துவ பலன்கள் விலைமதிப்பற்றது. பப்பாளி பழத்தை சாப்பிட தெரிந்த நமக்கு பப்பாளி விதையின் மருத்துவ பலன் தெரியாமல் அதை தூக்கி எறிந்து விடுகிறோம். சரி இனிமேல் அதுபோன்று தூக்கி எறியாமல் எப்படி பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.
கனிகளில் அதிக சுவையும் மருத்துவ குணங்களும் அதிகம் காணப்படுவது பப்பாளி பழத்தில் தான். இதில் அதிக அளவில் வைட்டமின் ஏ உயிர்சத்து நிறைந்துள்ளது.
பப்பாளி பழத்தை நாம் தொடர்ந்து சாப்பிட்டு வரும்போது கல்லீரலில் ஏற்படும் பிரச்சனைகள் குறைகிறது.
பப்பாளியை சாப்பிட்டுவிட்டு பப்பாளி பழ விதைகளை நம்மில் பலரும் தூக்கி எறிந்துவிடுகிறோம்.
பப்பாளியை போலவே பப்பாளி விதைகளைகளும் நமக்கு அரிய சத்துக்களையும் அற்புத பலன்களையும் தருகிறது.
பப்பாளி விதைப் பொடி செய்முறை:
பப்பாளி விதைகளை வெளியில் காயவைத்து அரைத்து வைத்துக் கொள்ளவும். தினமும் அரை டீஸ்பூன் சாப்பிடலாம்.
கல்லீரல் கரோசிஸ்:
30 நாட்கள் தொடர்ந்து எலுமிச்சை ஜூஸில் அரை ஸ்பூன் பப்பாளி விதை பொடியை கலந்து குடித்தால் அல்லது உணவில் கலந்து சாப்பிட்டால் கல்லீரல் சிரோசிஸ் வியாதி குணமடையும்.
சிறுநீரக பாதிப்பு:
சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் பப்பாளி விதைகளை சாப்பிட்டு வந்தால் சிறுநீரக செயலிழப்பு வராமல் தடுக்கலாம்.
ஆர்த்ரைடிஸ்:
ஆர்த்ரைடிஸ், மூட்டுகளில் வீக்கம், அழற்சி, உள்ளுறுப்புகளில் தடிப்பு ஆகியவை இருந்தால், பப்பாளி விதையை எடுத்துக் கொண்டால் நல்லது.
டெங்கு மற்றும் டைபாய்டு:
டெங்கு மற்றும் டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் பப்பாளி விதைப் பொடியை பாலில் கலந்து குடித்தால்குணமாகும்.
வயிற்றுப் புழு:
தினமும் பப்பாளி விதைப் பொடியை ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் அமீபா போன்ற சக்தி வாய்ந்த குடல் புழுவும் அழிந்துவிடும் வயிறும் சுத்தமாகிவிடும்.
கர்ப்பத்தடை:
இயற்க்கையான கர்ப்பத்தடை மருந்தாகும். ஆனால் கர்ப்பிணிகள் மட்டும் சாப்பிடக்கூடாது.