மக்களவைத் தேதி குறித்த அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
17-வது மக்களவைத் தேர்தலுக்காக நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தயாராகி விட்டன. தேர்தல் நடத்துவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்து விட்ட தேர்தல் ஆணையம் தேர்தல் தேதி அறிவிப்பை வெளியிடாமல் காலம் தாழ்த்தி வந்தது.
பிரதமர் மோடி தமது அரசின் திட்டங்களை, சாதனைகளை நாடு முழுவதும் சூறாவளிப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவசர அவசரமாக மக்களிடம் பிரதமர் மோடி விளம்பரம் செய்வதற்காகவே தேர்தல் ஆணையம் தேதி அறிவிப்பை தள்ளிப்போடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மக்களவைத் தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, சிக்கிம் ஆகிய 3 மாநிலங்களின் சட்டப் பேரவைக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்படுமா? இல்லையா? என்பதும் இன்று மாலை தெரிந்துவிடும்