பழங்குடி சிறுமிகளை சீரழித்த அதிகாரி உள்பட 2 பேர் கைது..

நாக்பூரில் பழங்குடி சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த விடுதி அதிகாரி உள்பட 2 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள சந்திரபூர் அரசு மருத்துவமனையில் மயக்க நிலையில் 2 சிறுமிகள் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவர்கள் சோதனை செய்து பார்த்த போது அவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து அந்த சிறுமிகள் தங்கியிருக்கும் பழங்குடி மாணவர்களுக்கான விடுதியில் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது விடுதியின் கண்காணிப்பாளரான சாபன் பச்சாரேவின் மற்றும் ஒருவர் சேர்ந்து சிறுமிகளை பலாத்காரம் செய்தது கண்டுபிடிக்கப்பட்து. இதனை அடுத்து அவர்கள் இரண்டு பேரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். அந்த விடுதியில் மேலும் பல சிறுமிகள் கைது செய்யப்பட்ட அதிகாரியின் இச்சைக்கு பலியாகி இருக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

மேலும் செய்திகள்

Tamil news, Latest Tamil News, Tamil News Online, Tamil Nadu Politics, Crime News, Tamil Cinema, Tamil Movies, Movie review, Sports News