‘இளைஞர்கள் இதனை செய்வார்கள்....!’ –நம்பிக்கையில் பிரதமர் மோடி

மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் இளைஞர்கள் அதிகளவில் தங்களது வாக்குகளைப் பதிவு செய்வார்கள் என நம்புகிறேன் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தமிழகம், கர்நாடகா மகாராஷ்டிரா உள்ளிட்ட 12 மாநிலங்களில் மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது. தமிழகத்தில் 38 மக்களவைத் தேர்தலுடன் 18 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் நடக்கிறது. தமிழகத்தில் இன்று காலை 7 மணியளவில் தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்துவருகிறது. நீண்ட வரிசையில் நின்று பொதுமக்களுடன் நட்சத்திர பிரபலங்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் ஆர்வமாக வாக்களித்து வருகிறார்கள்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ‘’ இந்தியாவின் அன்புள்ள குடிமக்களே...மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்குகிறது. தங்கள் உரிமைகளை ஆற்றுவதன் மூலம் நமது ஜனநாயகம் பலப்படுத்தப்பட வேண்டும். நம்பிக்கை உள்ளது..இளைஞர்கள் அதிகளவில் தங்களது வாக்குகளைப் பதிவு செய்வார்கள் என நம்புகிறேன்’’ எனப் பதிவிட்டுள்ளார்.

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

மேலும் செய்திகள்