ஒடிசாவில் தொடர்ந்து 5-வது முறையாக வெற்றி பெற்று சாதனை படைத்த நவீன் பட்நாயக் இன்று முதல்வராக பதவியேற்றார்.
ஒடிசா மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவைக்கும் கடந்த ஏப்ரல் 11-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 21 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளிலும், 146 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 112 இடங்களிலும் வெற்றி பெற்ற நவீன் பட்நாயக் தலைமையிலான ஆளும் பிஜூ ஜனதாதளம், மீண்டும் ஆட்சியை பிடித்தது. இதன் மூலம் தொடர்ந்து 5-வது முறையாக வெற்றி பெற்ற சாதனையையும் படைத்தார் நவீன் பட்நாயக்.
இதையடுத்து, சட்டப்பேரவை பிஜூ ஜனதா தளம் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட நவீன் பட்நாயக்கை மீண்டும் ஆட்சி அமைக்க மாநில ஆளுநர் கணேஷ் லால் அழைப்பு விடுத்தார்.
இதைத்தொடர்ந்து, ஒடிசா முதல்-மந்திரியாக நவீன் பட்நாயக் தொடர்ந்து 5-வது முறையாக இன்று பதவியேற்றுக் கொண்டார்.
புவனேஸ்வரில் உள்ள பொருட்காட்சி மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், கவர்னர் கணேஷ்லால் பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
ஒடிசா எம்.பி.க்களில் 33 சதவீதம் பெண்கள்! மகளிர் ராஜ்ஜியம்தான்!