ஒத்த செருப்பு டிரைலரில் எவ்வளவு விஷயம் இருக்கு தெரியுமா?

by Mari S, May 29, 2019, 09:17 AM IST

நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்துள்ள ஒத்த செருப்பு படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது.

எப்போதுமே வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து இயக்கி வரும் பார்த்திபன் இந்த முறை சோலோ பெர்ஃபார்மன்ஸில் மிரட்ட வருகிறார். ஒத்த செருப்பு என்ற டைட்டிலுக்கு ஏற்ப இந்த படத்தில் பார்த்திபன் மட்டுமே நடித்துள்ளார்.

ஒரே ஆள் நடிக்கும் படம் என்றால் ஆடியன்ஸுக்கு போர் அடித்து விடும் என்பதால், படத்தில் பல குரல்கள் ஒலிக்கின்றன. ஆனால், அத்தனைக்கும் தனி ஒருவனாக நின்னு தனது அசுர நடிப்பால் அசத்தியுள்ளது டிரைலரிலேயே தெரிகிறது.

ஏதோ ஒரு கொலையை செய்து விடும் பார்த்திபன், அந்த கொலைக்காக தான் அகப்பட்டு விடுவோமா? அதிலிருந்து எப்படி தப்பிப்பது என்று தனது மனசாட்சியோடு, மல்லுக்கட்டும் கதையாக படம் உருவாகி இருக்கும் என டிரைலர் மூலம் கணிக்கப்படுகிறது.

இப்படத்திற்கு அற்புதமான ஒளிப்பதிவை ராம்ஜியும், த்ரில்லிங் இசையை சந்தோஷ் நாரயணனும், சிறப்பு ஒலியமைப்பு பணிகளை ஆஸ்கர் விருது வென்ற ரசூல் பூக்குட்டியும் செய்துள்ளனர். இதனால், டெக்னிக்கல் அளவில் படம் தரமாக வரும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.

Get your business listed on our directory >>More Cinema News

அதிகம் படித்தவை