மும்மொழித் திட்டம் என்ற பெயரில் இந்தியை திணிக்க பா.ஜ.க. அரசு முயற்சிக்கிறது. அந்த அரசின் உண்மையான முகம் தெரியத் தொடங்கி விட்டது என்று ப.சிதம்பரம் ட்விட்டரில் கருத்து கூறியுள்ளார்.
https://twitter.com/PChidambaram_IN/status/1134817304842199047
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்த வரைவு வெளியாகி உள்ளது. அதில் கஸ்தூரிரங்கன் குழு பரிந்துரைப்படி இந்தி பேசாத மாநிலங்களில் மூன்றாவது மொழியாக இந்தியை கொண்டு வரலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. இதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
பாஜக அரசின் உண்மையான முகம் தெரியத் தொடங்கிவிட்டது. புதிய கல்விக் கொள்கையில் பள்ளிகளில் முதல் வகுப்பிலிருந்தே மும்மொழித் திட்டம் என்று அறிவித்திருக்கிறார்கள்.
பள்ளிகளில் மும்மொழித் திட்டம் என்றால் என்ன அர்த்தம்? இந்தி மொழியைக் கட்டாயப் பாடமாக்குவார்கள் என்று பொருள். இந்தி மொழி கட்டாயப் பாடம் என்றால் இந்தி திணிப்பு என்று பொருள். பாஜக தேர்தல் அறிக்கையிலேயே இந்தி திணிப்புக்கு கொடி அசைத்திருந்தார்கள் என்பதை நான் தேர்தலின் போதே சுட்டிக் காட்டியிருந்தேன். சமஸ்கிருத மொழியைப் பரப்புவோம் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது.
இந்த முயற்சிக்கு தேர்தல் அறிக்கை சூட்டிய தலைப்பு -- பாரதிய மொழிக் கலாச்சாரம்!
இவ்வாறு வரிசையாக ட்விட் செய்திருக்கிறார் சிதம்பரம்.