மகாராஷ்டிர சட்டசபை தேர்தல்.. பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு..

Advertisement

மகாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா கூட்டணி தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்த போதிலும், பாஜக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தலைமையில் பாஜக- சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின்போது, இருகட்சிகளுக்கும் இடையே தொகுதி பங்கீட்டில் சிக்கல் ஏற்பட்டது. சிவசேனா கட்சி தாங்களே அதிக தொகுதிகளில் போட்டியிடுவோம் என்றும், முதல்வர் பதவியை விட்டுத் தர மாட்டோம் என்றும் அப்போது கூறியது. இதனால், இருகட்சிகளும் தனித்தனியே போட்டியிட்டன.

அப்போது மோடி அலையால் பாஜக 122 தொகுதிகளிலும், சிவசேனா 63 தொகுதிகளிலும் வென்றன. இதையடுத்து, பட்நாவிஸ் தலைமையில் பாஜக ஆட்சி அமைந்தது. அதில் சிவசேனாவும் பங்கேற்றது. இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலின் போதும் இரு கட்சிகளுக்கும் தொகுதி பங்கீட்டில் பிரச்னை ஏற்பட்டு, கடைசியில் சிவசேனா பணிந்தது.

இப்போதும், மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் 144 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டுமென்று சிவசேனா முரண்டு பிடித்தது. ஆனால், பாஜக தாங்களே அதிக இடங்களில் போட்டியிடுவோம் என்றும் சிவசேனாவுக்கு நூறுக்கு கீழேதான் தரப்படும் என்றும் கூறியது. இதனால், கொதிப்படைந்த சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, 288 தொகுதிகளிலும் போட்டியிட விருப்பம் உள்ள கட்சியினரிடம் மனு வாங்கினார். பால்தாக்கரே விருப்பப்படி, சிவசேனாவை சேர்ந்த ஒருவர்தான் முதல்வராக வர வேண்டும், அதற்காக நாங்கள் தனியாக போட்டியிடவும் தயார் என்று ஆவேசமாக கூறினார்.

இதன்பின், டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் பாஜக தலைவர்கள் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தி கடைசியாக ஒரு பார்முலா தயாரித்தனர். இதன்படி, பாஜக 144 தொகுதிகளிலும், சிவசேனா 122 தொகுதிகளிலும், மீதி 18 தொகுதிகளில் இதரக் கட்சிகளும் போட்டியிடும். சிவசேனாவுக்கு துணை முதல்வர் பதவி தரப்படும் என்று கூறப்பட்டு வந்தது. ஆனாலும், தொகுதி எண்ணிக்கையிலும், எந்தெந்த தொகுதிகள் என்பதிலும் குழப்பம் நீடித்து வருவதாகவே தெரிகிறது. ஆனால், கூட்டணி முறிந்து விடக் கூடாது என்பதற்காக இரு கட்சிகளும் இணைந்து, கூட்டணி உறுதி செய்யப்பட்டு விட்டதாக நேற்று(செப்.30) அறிக்கை வெளியிட்டன. தொகுதிப் பங்கீடு விவரம் விரைவில் வெளியாகும் என்றும் அறிவித்தன.

இந்நிலையில், மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் முதல் பட்டியல் இன்று(அக்.1) வெளியிடப்பட்டது. இதில், 125 பெயர்கள் இடம் பெற்றுள்ளன. முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், தென்மேற்கு நாக்பூர் தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறையும் இதே தொகுதியில்தான் பட்னாவிஸ் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
மேலும் செய்திகள்
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
m-k-stalin-his-first-action
திமுகவிற்கு குடைச்சல் கொடுத்தவர்களுக்கு ஸ்டாலின் “செக்”!
how-kadampur-raju-win-against-ttv-dinakaran
டிடிவி தினகரன் கடம்பூர் ராஜுவிடம் ஏன் தோற்றார்?!
traffic-ramasamy-died-due-to-illness
சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி மரணம்!
/body>