உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பள்ளி ஒன்றில் மதிய உணவு சாப்பிட்ட 40க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலம், எட்டா நகரில் கஸ்தூரிபா காந்தி என்ற பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு, ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று பள்ளிக்கு சென்ற மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. உணவு சாப்பிட்ட 40க்கும் மேற்பட்ட மாணவிகள் அடுத்தடுத்து வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகம் உடனடியாக மாணவிகளை மீட்டு மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு, மாணவிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட காலக்டர், மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்டார் மேலும், சாப்பிட்ட உணவின் தரம் குறித்து ஆராயவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.