என் மகன் திருடனல்ல - கொலை செய்யப்பட்ட மதுவின் தாயார் உருக்கம்

கேரள மாநிலம், பாலக்காடு அருகே அட்டப்பாடியை ஒட்டிய கடுகுமன்னா பழங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மல்லான். இவரது மகன் மது (27). மனநிலை பாதிக்கப்பட்டவர்.

Mar 16, 2018, 16:31 PM IST

கேரள மாநிலம், பாலக்காடு அருகே அட்டப்பாடியை ஒட்டிய கடுகுமன்னா பழங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மல்லான். இவரது மகன் மது (27). மனநிலை பாதிக்கப்பட்டவர்.

இந்நிலையில், அட்டப்பாடி, தவாலம், முக்கலி ஆகிய பகுதிகளில் கடந்த சில காலமாகவே, உணவுப்பொருட்கள் திருட்டு நடந்து வந்துள்ளது. திருட்டில் ஈடுபட்டவரின் உருவம் சிசிடிவி-யிலும் பதிவாகியுள்ளது.

அந்த படம், மதுவின் முகச்சாயலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், மதுதான் திருட்டில் ஈடுபட்டு வருகிறார் என்று முடிவு கட்டிய கிராம மக்கள் கடுகுமன்னா காட்டுப்பகுதிக்கு மதுவைத் தேடிச் சென்றுள்ளனர்.

அப்போது, கிராம மக்கள், அவரை மிகக் கொடூரமாக தாக்கியுள்ளனர். ரத்தம் சொட்டச் சொட்ட அவரது உடலை சின்னாபின்னப்படுத்தி உள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

இந்நிலையில், மதுவின் தாயார் மல்லி பிபிசியிடம் பேசியபோது, “அவன் காட்டில் பாதுகாப்பாக இருக்கிறான் என்று கூறியதை நான் நம்பினேன். அவனை திருடன் என்று கூறி, அதற்காக அவன் கொல்லப்பட்டது மிகவும் வேதனை அளிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், "அவன் திருடனல்ல. அது மாதிரி திருடுபவனும் அல்ல. மற்றவர்களின் அனுமதியில்லாமல் அவர்கள் உணவை உண்ணுவது, எங்கள் கலாசாரத்தில் இல்லை. அவனுக்கு உணவு வேண்டும் என்றால், அதனை கேட்டு உண்ணுவான். அதுதான் அவன் இயல்பு" என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

 

You'r reading என் மகன் திருடனல்ல - கொலை செய்யப்பட்ட மதுவின் தாயார் உருக்கம் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை