கோயிலுக்கு சென்ற பெண்ணுக்கு நடந்த கொடூர செயல்.. இரத்த வெள்ளத்தில் வீட்டின் வாசலில் வீசப்பட்ட பெண்ணின் சடலம்..

by Logeswari, Jan 8, 2021, 18:09 PM IST

கோயிலுக்கு சென்ற பெண்ணை பூசாரி மற்றும் ஒருவர் சேர்ந்து காட்டு பகுதிக்கு கடத்தி சென்று கொடூரமாக பாலியல் பலாத்கார செய்த சம்பவம் சுற்று வட்டாரத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உத்தரபிரதேச மாவட்டத்தில் உள்ள உகாய்தி கிராமத்தை சேர்ந்தவர் அங்கன்வாடி. இவர் 50 வயதுக்குரிய பெண் ஆவார். இவர் கடந்த ஞாயிற்று கிழமை வீட்டிற்கு பக்கத்தில் உள்ள கோவிலுக்கு சென்றுள்ளார். அப்பொழுது அந்த கோவிலை சேர்ந்த பூசாரி மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரும் திட்டம் தீட்டி அந்த பெண்ணை யாருக்கும் தெரியாமல் காட்டு பகுதிக்கு கடத்தி சென்றுள்ளனர்.

பிறகு அந்த பெண்ணை கொடூரமான முறையில் கூட்டு பலாத்காரத்தில் ஈடுபடுத்தியுள்ளார். அப்பெண்ணின் வீட்டில் கோவிலுக்கு சென்று நெடுந்நேரம் ஆகியும் இன்னும் வீடு திரும்பாததால் பல இடத்தில் தேடி அலைந்துள்ளனர். அப்பொழுது வீட்டின் வாசலில் இரத்தம் சொட்ட சொட்ட ஒரு சாக்கு பையை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சாக்கு பையை பிரித்து பார்த்ததில் அப்பெண் சடலமாக இரத்த வெள்ளத்தில் மிதந்துள்ளார். அக்குடும்பத்தினர் உடனே காவல் நிலையத்தில் தகவல் கொடுத்துள்ளனர்.

ஆனால் போலீஸ் சற்று தாமதமாக தான் சம்பவ இடத்திற்கு வந்துள்ளது. பிறகு போலீஸ் அந்த பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் நேற்று கிடைத்த ரிப்போர்ட்டில் அப்பெண் மிகவும் துன்புறுத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இதனால் விலா எலும்புகள், பிறப்புறுப்பு ஆகியவை மிகவும் சேதம் அடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. போலீஸ் இந்த கொடூரத்தை செய்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகிறது.

You'r reading கோயிலுக்கு சென்ற பெண்ணுக்கு நடந்த கொடூர செயல்.. இரத்த வெள்ளத்தில் வீட்டின் வாசலில் வீசப்பட்ட பெண்ணின் சடலம்.. Originally posted on The Subeditor Tamil

More Crime News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை