திருப்பதி கோவிலில் கீர்த்தி சுரேஷை சுற்றி வளைத்த ரசிகர்கள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் நடிகர் மோகன்பாபு ஆகியோர் குடும்பத்தாருடன் சாமி தரிசனம் செய்தனர். கீர்த்தி சுரேஷுடன் செல்பி எடுக்கப் பல ரசிகர்கள் முண்டியடித்தனர் ஆனால் அவரது பாதுகாவலர்கள் அதை முறியடித்தனர்.

by Balaji, Jan 11, 2021, 18:59 PM IST

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று காலை நடிகை கீர்த்தி சுரேஷ் சாமி தரிசனம் செய்தார். தரிசனம் முடிந்து வெளியே வந்த அவரை ரசிகர்கள் சூழ்ந்துகொண்டு செல்பி எடுக்க முற்பட்டனர் ஆனால் அவருடன் வந்த பாதுகாவலர்கள் யாரையும் அருகில் நெருங்க விடவில்லை. நான்கு பேர் மனித வளையம் போல அமைத்துக் கொண்டு யாரும் கீர்த்தி சுரேஷ் அருகில் நெருங்கவிடாமல் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

கீர்த்தி சுரேஷ் சென்ற சிறிது நேரத்தில் தெலுங்கு நடிகர் மோகன்பாபு மற்றும் அவரது மகனும் நடிகருமான மஞ்சு விஷ்ணு ஆகியோரும் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு ரங்கநாதர் மண்டபத்தில் கோவில் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்தப் பிரசாதம் வழங்கி வேத பண்டிதர்கள் மூலம் மரியாதை செய்து வைத்தனர்.
மோகன் பாபு உடன் செல்பி எடுக்கப் பல ரசிகர்கள் ஆவலாக இருந்தனர். அவர்களை ஏமாற்றாமல் அவர்களுடன் மோகன்பாபு செல்பி எடுத்துக்கொண்டார்மோகன்பாபு மற்றும் கீர்த்தி சுரேஷுடன் புகைப்படம் எடுப்பதற்காக ரசிகர்கள் கோயில் முன்பு திரண்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது .

More Andhra pradesh News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்