நாங்கள் மேற்கொண்ட வேலி யாத்திரைக்கு கிடைத்த பேராதரவு தான் திமுகவினரை வேலை எடுக்க வைத்திருக்கிறது என பாஜக மாநில தலைவர் வேல்முருகன் தெரிவித்தார். கோவையில் கடந்த 1998 ம் ஆண்டு நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த 23 ம் ஆண்டு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன், துணைத் தலைவர் அண்ணாமலை, இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணி மற்றும் பாஜக, இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
இதில் பேசிய பாஜக பேசிய பாஜக மாநில தலைவர் எல்.முருகன், இந்து மற்றும் தமிழ் கலாச்சாரத்திற்கு எதிராக திமுக, கம்யூனிஸ்ட்கள் செயல்படுகின்றனர். இந்துக்களை கொச்சைப்படுத்துபவர்கள் மீது புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. திமுக, திகவின் பொய் பிரச்சாரங்கள் முறியடிக்கப்பட வேண்டும். திமுகவினர் வேல் எடுத்திருப்பது இந்துக்களை ஏமாற்றுவதற்காகவே. எங்களது வெற்றி வேல் யாத்திரைக்கு கிடைத்த ஆதரவுதான், ஸ்டாலினை வேல் ஏந்த வைத்திருக்கிறது.
தேர்தலுக்காக வேஷம் போட்டுள்ளவர்களின் போலி முகத்தை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். திமுக தமிழர்களுக்கும், தமிழ் பண்பாட்டிற்கும் எதிரானது. இந்த தேர்தல் தேசபக்தர்களுக்கும், தேச விரோதிகளுக்கும் இடையேயான தேர்தல் இதில் தேசபக்தர்கள் வெல்ல வேண்டும் என்றார். மாநில துணைத் தலைவர் அண்ணாமலை.பேசுகையில், தமிழ்நாட்டில் பாஜக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது , தேர்தலுக்கு பிறகு சட்டசபையில் பாஜகவிற்கு அதிகளவு உறுப்பினர்கள் இருப்பார்கள் என்றார்.