“அடுத்த 4 வாரங்களுக்கு இருக்கும்” - மத்திய அரசு அதிர்ச்சி தகவல்!

by Sasitharan, Apr 7, 2021, 17:37 PM IST

இந்தியாவில் பட்டித்தொட்டி எங்கும் மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் தனது கோர முகத்தை காண்பிக்க துவங்கியுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரு நாளைக்கு 1 லட்சத்தை தாண்டி பீதியை கிளப்பியுள்ளது. இந்நிலையில், கொரோனா பரவல் அடுத்த 4 வாரங்கள் மிகவும் தீவிரமடையும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த, சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் ஆகியோர், கொரோனாவின் 2-வது அலை, முதல் அலையை விட மிகவும் வேகமாக பரவுகிறது. நாம் இதை சமாளிக்க வேண்டும். எதிர்கொள்வதோடு மட்டுமல்லாமல் வீழ்த்தவும் வேண்டும். 2-வது அலையை கட்டுப்படுத்துவதில் மக்களின் பங்களிப்பு அவசியம். அடுத்த 4 வாரங்கள் நெருக்கடியானதாக இருக்கும். ஒட்டுமொத்த நாடும் ஒன்றிணைந்து கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

கொரோனா தொற்றால் ஏற்படும் உயிர் இழப்பை குறைப்பதுதான் தடுப்பூசியின் முக்கிய நோக்கம். மருத்துவ துறையில் பணியாற்றுவோரை காப்பாற்றுவதும், அந்த திட்டத்தின் மற்றொரு முக்கிய நோக்கமாகும். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படும் நபர்களை பாதுகாப்பதே எந்த ஒரு நாட்டின் நோக்கமாக இருக்கும். யாரை கொரோனா எளிதில் தாக்குமோ அவர்களுக்கு தடுப்பூசி போடுவதோ இலக்கு என அவர்கள் தெரிவித்தனர். இதனால் பொதுமக்கள் அரசின் கொரேனா தொற்று தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

You'r reading “அடுத்த 4 வாரங்களுக்கு இருக்கும்” - மத்திய அரசு அதிர்ச்சி தகவல்! Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை