ரெம்டிசிவர் மருந்தை பதுக்கி வைத்து விற்ற மூன்று பேர் கைது

by Ari, Apr 19, 2021, 06:17 AM IST

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் சட்டவிரோதமாக ரெம்டிசிவர் மருந்தை பதுக்கி வைத்து விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கர்நாடகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் ரெம்டிசிவர் மருந்தின் தேவை அதிகமாக உள்ளது.

ரெம்டிசிவர் மருந்தின் தேவை அதிகரித்துள்ளதால் சிலர், அந்த மருந்தை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், பெங்களூருவில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்து வெளிச்சந்தையில் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அம்மாநில காவல்துறையிக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து ரெம்டிசிவர் மருந்தை சட்டவிரோதமாக விற்பனை செய்யும் கும்பலை பிடிக்கவும், பதுக்கி வைத்திருப்பவர்களை பிடிக்கவும் மத்திய குற்றப்பிரிவு இணை காவல் ஆணையர் சந்தீப் பட்டீல் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில், பெங்களூரு சுத்தகுண்டே பாளையா மற்றும் மடிவாளா பகுதியில் உள்ள 2 மருந்து கடைகளில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினார்கள். அங்கு ரெம்டிசிவர் மருந்து பாட்டில்களை பதுக்கி வைத்திருந்ததும், ஒரு ரெம்டிசிவர் மருந்து 10,500 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

அவர்களிடம் இருந்து 11 மருந்து பாட்டில்கள் பறிமுதல் செய்யதே போலீசார், சுத்தகுண்டே பாளையாவில் மருந்து கடை நடத்திய ராஜேஷ், ஷகீப் ஆகிய 2 பேரையும், மடிவாளாவில் மருந்து கடை நடத்திய சோகைலையும் கைது செய்தனர்.

You'r reading ரெம்டிசிவர் மருந்தை பதுக்கி வைத்து விற்ற மூன்று பேர் கைது Originally posted on The Subeditor Tamil

More Crime News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை