ஆக்ஸிஜன், ஐசியு என எதுவுமே இல்லை ஆனால் 3408 கோடிக்கு டெண்டரா? - மோடியை விளாசும் ராகுல்!

by Madhavan, Apr 24, 2021, 09:05 AM IST

இன்றைய கொரோனா சூழலில் நாட்டில் பரிசோதனை, தடுப்பு மருந்து, ஆக்ஸிஜன், ஐசியு என எதுவுமே இல்லை. ஆனால் அரசு முக்கியத்துவம் கொடுப்பது எதற்கு? என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியாவை கொரோனா வைரசின் 2-வது அலை தாக்கம் உலுக்கி வருகிறது. நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பெருந்தொற்று சூழலை மத்திய அரசு முறையாக கையாளவில்லை என துவக்கம் முதலே ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து வருகிறார்.

ஆக்ஸிஜன் பற்றாக்குறை, மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப்பிரிவு படுக்கைகள் குறைபாடு ஆகியவற்றால் பொதுமக்கள் உயிரிழப்பதற்கு மத்திய அரசே காரணம் என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி உள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராகுல், கொரோனாவால் உடலில் உள்ள ஆக்ஸிஜன் அளவு குறையக்கூடும் என்றபோதிலும், ஆக்ஸிஜன் பற்றாக்குறை மற்றும் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப்பிரிவு படுக்கைகள் போதிய எண்ணிக்கையில் இல்லாததால் தான் தற்போதைய மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக விமர்சித்துள்ளார்.

இந்நிலையில், சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் மத்திய பொதுப்பணித்துறை மூன்று மத்திய பொது செயலக கட்டிடத்தை கட்ட சுமார் 3408 கோடி ரூபாய்க்கு டெண்டர் கோரி அழைப்பு விடுத்துள்ளது. அந்த செய்தியை மேற்கோள் காட்டியுள்ள ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.

அதில், “இன்றைய கொரோனா சூழலில் நாட்டில் பரிசோதனை, தடுப்பு மருந்து, ஆக்ஸிஜன், ஐசியு என எதுவுமே இல்லை. ஆனால் அரசு முக்கியத்துவம் கொடுப்பது எதற்கு?” என மத்திய அரசு புதிதாக கட்டும் மத்திய பொது செயலக கட்டுமான பணி தொடர்பான ஏலத்துக்கான டெண்டரை கோரியுள்ள செய்தியை மேற்கோள் காட்டி இந்த கேள்வியை ட்விட்டரில் எழுப்பி உள்ளார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.

You'r reading ஆக்ஸிஜன், ஐசியு என எதுவுமே இல்லை ஆனால் 3408 கோடிக்கு டெண்டரா? - மோடியை விளாசும் ராகுல்! Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை