ஒன்று சேர்ந்த உ.பி எதிர்கட்சிகள்- பாஜக-வுக்கு செக்!

Advertisement

நாடாளுமன்றத் தேர்தலை வென்றுவிடும் முனைப்பில் உள்ள பாஜக அரசை எதிர்கொள்ள மாநில வாரியாக எதிர்கட்சிகள் ஒன்றிணையும் வேளையில் இறங்கியுள்ளன. இந்த வகையில் முதற்கட்டமாக உ.பி-யில் இதற்கான ஆயத்தங்கள் நடைபெறத் தொடங்கியுள்ளன.

நாட்டிலேயே உத்தர பிரதேசத்தில் தான் அதிகபட்ச நாடாளுமன்ற தொகுதிகள் இருக்கின்றன. உத்தர பிரதேசத்தில் அதிக இடத்தில் வெற்றி பெறும் கட்சி தான் பெரும்பாலும் மத்தியில் ஆட்சி அமைக்கவும் செய்யும். இந்நிலையில்தான் காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், ஆர்.எல்.டி போன்ற கட்சிகள் அம்மாநிலத்தில் ஓரணியில் நிற்க உடன்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.

அம்மாநிலத்தில் இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து நடந்து வரும் இடைத் தேர்தல்களில் பாஜக-வுக்கு எதிராக எதிர்கட்சிகள் ஓரணியில் நிற்பதால் வெற்றிவாகை சூடிவருகின்றன. இதுவும் கூட்டணிக்கு புதிய உத்வேகத்தைத் தந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த ஆண்டுக்குள் ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரேதச மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளன. இந்தத் தேர்தல்களிலும் ‘மெகா கூட்டணி’ தொடரும் என சொல்லப்படுகிறது.

உத்தர பிரதேசத்தைப் பொறுத்தவரை சமாஜ்வாடியும் பகுஜன் சமாஜும் ஒன்றாக இணைந்து செயல்பட ஆரம்பித்துள்ளன. எனவே, அம்மாநிலத்தின் இரு பெரும் கட்சி ஒன்றாகிவிட்டதால் மற்ற கட்சிகள் இணைவதில் சுணக்கம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சியோ, தமிழ்நாடு, பிகார், கேரளா, மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் இப்போதே கூட்டணியை உறுதிபடுத்திவிட்டன. ஜார்கண்டில் ஜேஎம்எம் கட்சியுடனும், தமிழகத்தில் திமுக-வுடனும் காங்கிரஸ் நல்ல நட்புறவில் இருப்பதால், அந்தக் கட்சியுடன் கூட்டணி அமைப்பதில் பாதிப்புகள் இருக்காது எனப்படுகிறது. 

Advertisement
மேலும் செய்திகள்
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
m-k-stalin-his-first-action
திமுகவிற்கு குடைச்சல் கொடுத்தவர்களுக்கு ஸ்டாலின் “செக்”!
how-kadampur-raju-win-against-ttv-dinakaran
டிடிவி தினகரன் கடம்பூர் ராஜுவிடம் ஏன் தோற்றார்?!
traffic-ramasamy-died-due-to-illness
சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி மரணம்!
/body>