நிலக்கடலை குறித்த மர்மமும்... மகத்துவமும்...!!

Advertisement
நிலக்கடலை.... இது உலகம் முழுக்க பலரால்  விரும்பி உண்ணப்படும் பருப்பு வகை தாவரம் ஆகும். உலகின் சத்து மிகுந்த உணவுப்பொருள் பட்டியலில் முக்கிய இடத்தில் இருப்பது இந்த நிலக்கடலை.
இந்த நிலக்கடலையின் நன்மைகள் மற்றும் அத்தியாவசியத்தை பற்றி இங்கே விரிவாக பார்க்கலாம்..
பீன்ஸ், பட்டாணி போன்று இதுவும் தாவர வகையைச் சேர்ந்ததுதான், ஆனால் இதன் சத்தினைக் கணக்கில் கொண்டு, இதை கொட்டை வகையில் (nuts) சேர்த்துள்ளனர்.
நிலக்கடலை உலகெல்லாம் பரவியது பதினாறாம் நூற்றாண்டில்தான். இதன் பிறப்பிடம் பிரேசில் ஆகும். அங்கிருந்து போர்ச்சுகீசியர்கள் பல்வேறு நாடுகளுக்கு இதனை எடுத்துச் சென்றனர். அப்படித்தான் இந்தியாவிலும் விருந்தாளியாய் வந்து வேர்விட்டது இந்த வேர்க்க்கடலை!
பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற பருப்பை விட அதிக அளவில் சத்துக்கள் நிலக்கடலையில் மிகுந்துக் காணப்படுகிறது.
எண்ணெய் வித்துக்காக சீனா அதிக அளவில் பயிரிட்டு வருகிறது, நிலக்கடலை நம் நாட்டிலும் பெருமளவு உற்பத்தி செய்யப்படுகிறது. அதற்கான காரணம் அனைத்து தரப்பினரும் வாங்கும் நிலையில் உள்ளது என்பதும், அதில் அடங்கியிருக்கும் சத்துக்களுமே ஆகும்.
100 கிராம் நிலக்கடலையில் கார்போஹைட்ரேட்,  நார்ச்சத்து, கரையும் கொழுப்பு, புரதம், ட்ரிப்டோபென், திரியோனின், ஐசோலூசின், லூசின், லைசின், குலுட்டாமிக் ஆசிட், கிளைசின்,  விட்டமின், கால்சியம், காப்பர், இரும்புச்சத்து, மெக்னீசியம், மேங்கனீஸ், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், துத்தநாகச் சத்து, தண்ணீர்ச்சத்து ஆகியவற்றுடன் ஃபோலிக் ஆசிட் சத்தும் நிறைந்துள்ளன.
நிலக்கடலை, வேர்க்கடலை,  மணிலாக் கொட்டை என பல்வேறு பெயர்களில் தமிழகத்தில் அழைக்கப்படும் இது, குளிர்காலத்தில் விளையும் பயிர் ஆகும்.
இதை நம் முன்னோர்கள் குளிர்காலத்தில் தங்களது உணவில் இதை அதிகம் சேர்த்து கொண்டார்கள்,
ஏனென்றால் வேர்க்கடலை இயற்கையாகவே நமது உடலின் வெப்ப அளவை அதிகரிக்கச் செய்யும். குளிர்காலத்தில் தேவையான வெது வெதுப்புடன் உடலை வைத்திருக்கும்.
மாமிசம், முட்டை, காய்கறிகளைவிட வேர்க்கடலைக்குதான் புரதச் சத்து அதிகம்.
இதனைச் சாப்பிடுவதால் உடல் குளிர்ச்சியால் ஏற்படும் ஆஸ்துமா, ப்ராங்கைடிஸ் போன்ற நோய்கள் நீங்கும், நெஞ்சு சளியினை நீக்கும் வல்லமையும் வேர்க்கடலைக்கு உண்டு.
இதை தொடர்ச்சியாக  உண்பதால் வாழ்நாள் நீடிக்கும் என்பது பலரும் அறியாத ஒன்று.
வேகவைப்பதாலும், வறுப்பதாலும் வேர்க்கடலை அதன் சத்துக்களை இழந்து விடுகிறது. பச்சையாக ஊறவைத்து சாப்பிடுவதே நல்லது,
அப்படி பச்சையாக நீரில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால், அதனுடைய முழு சத்துக்களையும் நாம் பெறலாம்.
வேர்க்கடலையை ஆறு முதல் எட்டு மணி நேரம் ஊறவைத்தால் பித்தம் அதிலிருந்து நீங்கிவிடும். இதனை நன்கு கழுவிவிட்டுச் சாப்பிடலாம். ஊறவைக்காமல் சாப்பிட்டால் மட்டுமே பித்தம் அதிகரிக்கும். 
தினமும் ஒரு கைப்பிடி வேர்க்கடலை மட்டும் சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடாது. 
உடல் எடை கூட விரும்புவோர், நிறைய நிலக்கடலை சாப்பிட வேண்டும்.
தினசரி நிலக்கடலையை  30 கிராம் அளவுக்கு  சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும் என்பது 20 வருடம் தொடர்ந்து நிலக்கடலையை உண்போரிடையே நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
கடலை எண்ணெய் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பைக் கரைத்து நல்ல கொழுப்பைத் தரக்கூடும் என்று ஆராய்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்த கடலையில் இருக்கும் சத்துக்கள் ரத்தத்தின் சர்க்கரை அளவை சீர் படுத்தக்கூடியது.
ஹீமோஃபீலியா என்ற நோயில் அவதிப்படுபவர்களுக்கு அடிபட்டால் அவ்வளவு எளிதில் ரத்தம் உறையாது. அதனைக் குணப்படுத்தவும், பெண்களுக்கு மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கில் இருந்து குணமடையவும் நிலக்கடலை சிறந்த மருந்தாகும்.
 
நிலக்கடலை அதிகம் சாப்பிடுவதன் தீமைகளும் உள்ளது...
 
நிலக்கடலை சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் இருக்கலாம். அதுவே தினமும் அதிகமாக சாப்பிட்டு வந்தால், அது பல்வேறு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும்.
சாதரணமாக வறுத்த கடலையில் 166 கலோரியும், எண்ணெயில் வறுத்த கடலையில் 170 கலோரிகளும் உள்ளது. இதை தொடர்ந்து எடுத்துக் கொள்வதால், கொழுப்பு அதிகமாகி, உடல் பருமனாகும்.
நிலக்கடலையை அதிகம் சாப்பிட்டுவிட்டு, குறைந்த அளவிலான உணவுகளை எடுத்துக் கொண்டால் சத்துக்குறைபாடு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
வேர்க்கடலையை அளவுக்கு அதிகம் சாப்பிடுவதும், செரிமானக் கோளாறை ஏற்படுத்தி வயிற்று வலி ஏற்பட செய்யும்.
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதற்கு நிலக்கடையும் விதிவிலக்கல்ல.
நிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள், அவ நம்பிக்கைகள் உலகம் முழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பிவிடப்பட்டுள்ளது.
மாறிவிட்ட வாழ்க்கை முறையால், பன்னாட்டு உணவுக் கம்பெனிகளின் வரவால், நம் மரபுசார்ந்த உணவுப் பொருளான நிலக்கடலையைக் கைவிட்டவர்கள் நம்மில் அதிகம், 
குறிப்பாக நிலக்கடலை மூலம் கிடைக்கும் கடலை எண்ணையை முற்றிலும் புறக்கணித்து விட்டோம், சமையல் எல்லாமே ரீபைண்ட் ஆயில் என்றாகி விட்டது.  
மேலும், பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்புகளில்தான் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். ஆனால் நிலக்கடலையில்தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன  என்பது ஆய்வுகள்  தரும் முடிவு. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்கு உண்டு.
பொதுவாக, நிலக் கடலை சாப்பிட்டால் எடை போடுவோம் என்பது நம்மிடையே பரவலாக உள்ள எண்ணம். ஆனால் அது உண்மையல்ல. 
ஒரு மூட நம்பிக்கையே. மாறாக உடல் எடையை சம நிலையில் வைத்திருக்கும் சக்தி நிலக் கடலைக்கு உண்டு. எனவே தாரளமாக  நிலக்கடலையைச்   சாப்பிடலாம். 
கடந்த 20 வருடமாக இந்தியாவில் நிலக்கடலையின் விலையில்  பெரிய மாற்றம் எதுவும் இல்லாமல்  விற்பனை செய்யப்படுகிறது,
ஆனால் இதே கால கட்டத்தில் அமெரிக்கர்களின் உணவில், நிலக்கடலையின் பங்கு 15 மடங்கு கூடி இருப்பதுடன், விலையும் அதிகரித்துள்ளது, 
இந்தியர்கள் அனைவரும் நிலக்கடலை சாப்பிட ஆரம்பித்தால், அமெரிக்கர்கள் நிலக்கடலை அதிகம் விலை கொடுத்து சாப்பிட வேண்டும் என்று கருதி, இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்கள் மக்கள் மத்தியில் பரப்பியுள்ளனர்.  இது தவிர இன்னும் பல மரபுசார் பயிர்களையும் நம்மை விட்டு தூரமாக்கி விட்டார்கள்.
இதில் மறைந்திருக்கும் கார்பரேட் இல்லுமினாட்டிகளின் வியாபார யுக்தியை சொன்னால் அதிர்ச்சியடைவீர்கள்.
நம் நாட்டில் வயல்களில், நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் காலத்தில், அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள்
அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக்கடலை காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு, எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம்.
நிலக்கடலை செடியை ஆடு, மாடு, மற்றும் வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் சாப்பிடுவதால், அவை எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம்.
நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம் விரைவாக நடக்கிறது. எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது, குழந்தைப் பேறும் உடனே உண்டாகும்.
வேர்க்கடலையை, வெல்லத்துடனும், ஆட்டுப்பாலுடனும் சேர்த்துச் சாப்பிட்டால், வளரும் குழந்தைகளுக்கும், கருத்தரித்துள்ள பெண்களுக்கும், தாய்ப்பால் அளிக்கும் தாய்மார்களுக்கும் அருமருந்தாகும்.
உலக அளவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாவில்தான் நிலக்கடலை அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்விரு நாடுகளின் மக்கள்தொகை பெருக்கத்திற்கும் நிலக்கடலை முக்கிய காரணமாகும். 
இந்தியாவில் குழந்தைப் பேறுக்கான மருந்துகளின் விற்பனைக்கு, இந்தியர்களின் நிலக்கடலை உண்ணும் வழக்கம் தடையாக இருக்கிறது,
 மற்றும் சில இதய நோய்க்கான மருந்துகளை விற்பனை செய்யயும் நிலக்கடலை உண்ணும் பழக்கம் தடையாக உள்ளது, எனவே இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்களை பரப்பி நிலக்கடலை மற்றும் நிலக்கடலை எண்ணெய் வகைகளை பயன்படுத்துவதை அமெரிக்க இல்லுமினாட்டி கார்பரேட் நிறுவனங்கள் தடுத்துவிட்டார்கள்.
இதன் காரணமாக இன்று குழந்தையில்லாத தம்பதிகளும் பெருகிவிட்டார்கள்.
இதை மனதில் கொண்டு, இனியாவது கையளவுக் கடலையில் ஆரோக்கியமான வாழ்க்கையைத் துவங்கலாமே…! 
நிலக்கடலை மிகுந்த ஆரோக்கியமான உணவுப்பொருள். எந்தவித பயமும் இன்றி, கடலை மிட்டாயாகவோ, வேகவைத்தோ அல்லது வறுத்தோ அளவோடு சாப்பிடுங்கள், பயப்படத் தேவையில்லை. 
இதனால், பல்வேறு நோய்களிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ள முடியும். 
மரபனு மாற்றம் செய்யப்பட்ட ஐப்ரேட் கடலைகளை தவிர்த்து, நாட்டு கடலைகளை தேடி போய் வாங்குங்கள், பாக்கெட் மற்றும் பாட்டல்களில் அடைத்து விற்க்கப்படும் கடலை எண்ணெய்களை தவிர்த்து, உங்கள் அருகாமையில் இருக்கும் மரச்செக்கு ஆலைகளுக்கு சென்று, முடிந்தால் அதன் தயாரிப்பு முறைகளை நேரில் பார்த்து வாங்குங்கள். வாழ்வில் வளம் பெறுங்கள்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
வாழ்க வளமுடன்...
Advertisement
மேலும் செய்திகள்
how-to-check-oxygen-concentration-if-doubted-as-covid-19-infected-and-ways-to-fight-with-covid-19
கோவிட்-19: ஆக்ஸிஜன் அளவை சோதிப்பது எப்படி?
what-are-the-benefits-in-adding-ghee-in-rice
தினமும் சாப்பாட்டில் நெய் கலந்து கொள்வதால் என்ன நன்மைகள்? வாங்க பார்க்கலாம்..
foods-that-help-to-boost-immunity-to-fight-against-infections-and-cold-full-of-vitamin-c
கொரோனா பரவல்: இயற்கையாக நோய் எதிர்ப்பு ஆற்றலை தரும் உணவுகள்
penugreek-tea-to-keep-lung-healthy-and-to-help-fight-against-infection-in-pandemic-season
கொரோனா காலம்: நுரையீரலுக்கு ஆரோக்கியம் தரும் மூலிகை டீ
herbs-that-help-to-shed-kilos-and-reduce-waist-cicumference-their-medicinal-benefits-and-methods-to-take-them
கொரோனா ஊரடங்கு: இடுப்புச் சதை குறைய எதை சாப்பிடலாம்?
tricks-make-sure-to-beat-the-heat-with-fennel-vetiver-and-sandalwood-paste
கோடைக்காலத்தில் சரும பாதுகாப்புக்கான இயற்கை முறைகள்
women-can-get-corona-vaccines-even-during-menstruation
மாதவிடாய் காலத்தில் பெண்கள் கொரோனா தடுப்பூசி போடலாமா..? கூடாதா…?
improving-immune-health-help-to-activate-over-300-enzymes-and-aid-to-cell-division-cell-growth
இரத்த ஓட்டத்தை சீராக்கும்... நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும்
the-lentil-that-manage-symptoms-of-diabetes-helping-for-weight-loss-could-prevent-from-heat-stroke-and-beneficial-for-pregnant-women
ஹீட் ஸ்ட்ரோக்கிலிருந்து பாதுகாக்கும்... சிசுவுக்கு நல்லது...
steaming-for-coron-treatment-what-are-the-things-you-should-not-forget
கொரோனா: நீராவி பிடிப்பது எவ்விதம் பயன் தரும்?

READ MORE ABOUT :

/body>