இனி கவர்ச்சி இல்லை… ரூட்டை மாற்றிய கிம் கர்தாஷியன்?

மாடல் உலகின் கவர்ச்சி அழகியான கிம் கர்தாஷியான் வழக்கறிஞராக போவதாகவும் அதற்காக பயிற்சி எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார்.

நிர்வாண செல்ஃபிக்களை வெளியிட்டு, உலகையே அதிரவைத்த பிரபல மாடல் அழகி கிம் கர்தாஷியான், கர்தாஷியான் சிஸ்டர்ஸ் எனும் அமெரிக்க தொலைக்காட்சி தொடரின் மூலம் மிகவும் பிரபலமானார்.

மாடல் உலகை கலக்கி வருவதைப் போலவே பிசினஸிலும் தனது கொடியை நாட்டி வரும் கிம் கர்தாஷியான், தற்போது தனது புதிய கனவை நனவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறாராம்.

அமெரிக்காவை சேர்ந்த கிம் கர்தாஷியான், வழக்கறிஞராக தான் மாற விரும்புவதாக கூறியுள்ளார். மேலும், அதற்கான பயிற்சியைத் தான் தொடங்கி விட்டதாகவும், வரும் 2022ம் ஆண்டிற்குள் வழக்கறிஞர் பட்டம் பெற்று வாதாடுவேன் எனவும் கூறியுள்ளார்.

கவர்ச்சி அழகியின் இந்த திடீர் முடிவு அவரது இன்ஸ்டாகிராம் ரசிகர்களுக்கு சிறிது ஏமாற்றத்தை கொடுத்தாலும், எந்தத் துறையிலும் கிம் சாதிப்பார் என அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

ஆனால், கிம் கர்தாஷியனை வெறுக்கும் இணையவாசிகள் அவருக்கு எதிராக மீம்ஸ்களை பறக்க விட்டு வருகின்றனர். கிம் கர்தாஷியன் வாதத்துக்கு பதிலாக அவரது அங்கத்தைக் காட்டியே வழக்குகளை வென்று விடலாம் என ட்ரோலும் செய்து வருகின்றனர்.

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

மேலும் செய்திகள்